Search This Blog

Thursday, September 26, 2013

சிம்கார்டிலிருந்து தவறுதலாக அழிக்கப்பட்ட தகவல்களை மீட்டெடுக்க

சிம்கார்டிலிருந்து தவறுதலாக அழிக்கப்பட்ட தகவல்களை மீட்டெடுக்க பல்வேறு வகையான மென்பொருள் பயன்படுகின்றன.

GSM மொபைல் போன்களில் போன் மெமரி மட்டுமல்லாமலும் சிம்கார்டிலும் தகவல்களை சேமிக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியும். சிம்கார்டில் சேமிக்கக்கூடிய தகவல்கள்: 

1. Call History
2. Phone Book Numbers
3. SMS

இதுபோன்ற தகவல்களை தேவையில்லை என அழித்திருப்பீர்கள். அல்லது தவறுதலாக அழிக்கப்பட்டிருக்கும். 
 


அழிக்கப்பட்ட தகவல்களிலிருந்து ஒன்றிரண்டு போன் நம்பர்களோ அல்லது கால் ஹிஸ்டரியிலிருந்து உங்களுக்கு ஏதேனும் ஒருசில தகவல்கள் தேவைப்படும். ஆனால் அந்த சமயத்தில் அத்தகவல்களைத் திரும்ப பெற வழியின்றி தவித்திருப்பீர்கள். 

அதுபோன்ற சூழலில் உங்களுக்குப் பயன்படக்கூடியவைதான் SIM Card Data Recovery மென்பொருள்கள்.

இதுபோன்ற சிம்கார்ட் டேட்டா ரெகவரி மென்பொருள்களை பல்வேறு நிறுவனங்கள் தயாரித்து வழங்குகிறது.

ஃப்ரீ டவுன்லோட்ஸ் சென்டர் என்ற தளத்தில் இதுபோன்ற பல மென்பொருள்கள் மிகுந்து கிடக்கின்றன.

அவற்றில் சிம்கார்ட் டேட்டா ரெகவரி, சிம்கார்ட் ரெகவரி டூல், சிம் ரீஸ்டோர், சிம்கார்ட் கான்டாக்ட் ரெகவரி சாப்ட்வேர், சிம்கார்ட் கான்டாக்ட் ரெட்ரைவல் டூல், ரெகவர் யுவர் சிம்கார்ட், சிம் ரெகவரி, எஸ்.எம்.எஸ். ரெகவரி யுட்டிலிட்டி, ரெகவர் டெலீட்டட் எஸ்.எம்.எஸ், ரிகவர் சிம்கார்ட் போன்ற இருபதுக்கும் மேற்பட்ட மென்பொருள்கள் உள்ளன.



ஒவ்வொரு சிம்கார்ட் ரிகவரி மென்பொருளைப் பற்றியும், அந்த மென்பொருளுக்குரிய நிறுவனம் அல்லது மென்பொருள் கிடைக்கக்கூடிய தளத்தைப் பற்றிய விளக்கங்களும் அத்தளத்தில் குறிக்கப்பட்டுள்ளன. 

உங்களுக்கு விருப்பமான மென்பொருளை அதிலிருந்து தரவிறக்கம் செய்து, அத்தளத்தில் கூறப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றி நீங்கள் உங்கள் சிம்கார்டில் அழிக்கப்பட்ட தகவல்களை மீட்டெடுக்கலாம்.

மென்பொருள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு நீங்கள் செல்ல வேண்டியமுகவரி: Free Downloads center

முக்கிய குறிப்பு: மென்பொருள்கள்பற்றிய நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு குறித்த தகவல்களை நன்றாக படித்தறிந்த பிறகு தேவையான மென்பொருளை டவுன்லோட் செய்யவும்.

நன்றி. 

No comments:

Post a Comment