கெளதம புத்தர் ஞானம் பெற்ற போதிமரத்தடி மிக பழமை வாய்ந்ததாக இருப்பதால், அதை பாது காக்கும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
புத்தர் ஞானம் பெற்ற போதிமரத்தடி கயாவில் உள்ளது. 2 500 ஆண்ட
ுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படும் இந்த போதிமரத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் பீகார் அரசு இறங்கியுள்ளது. அனைவரும் வந்து வழிபடும் தலமாக உள்ள கயாவின் போதிமரம் பட்டுப் போகாமல் இருக்க, மரத்தின் கிளைகள் முறிந்து புனிதத் தன்மை கெட்டுப்போகாமல் இருக்க, வன ஆராய்ச்சி கழக நிபுணர்களின் ஆலோசனையோடு, பழுதடைந்த கிளையில், ரசாயன விசேஷ மருந்துகள் செலுத்தப் பட்டு காப்பாற்றப் பட்டு வருவதாகத் தெரிகிறது.
மேலும் மரத்தில் பூஞ்சைகள் உருவாகா வண்ணமும் பாதுகாப்பு நடவைக்கைகள் மேற்கொள்ளப் பட்டுவருவதாகவும் வன ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. சீன, இநதிய மக்கள் புனிதமாக கருதும் இந்த போதிமரம் உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் விரும்பிப் பார்க்கும் ஒரு புனிதத் தலமாகவும் மதிக்கப் படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

No comments:
Post a Comment