இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் தலைநகர் ஹிரோஷிமா மீது 1945, ஆக., 6ம் தேதி, அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்கியது. இந்த நினைவு நாள், ஒவ்வொரு ஆண்டும் ஆக.6ம் தேதியன்று ‘உலக ஹிரோஷிமா தினம்’ என்று கடைப்பிடிக்கப்படுகிறது.
இரண்டாம் உலகப் போரின் இறுதிக்கட்டத்தின் போது, ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது, அமெரிக்கா அணுகுண்டு வீசியது. இத்தாக்குதல்களால் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. அணுகுண்டு பாதிப்பால் ஹிரோஷிமா நகரில் பலியான ஆயிரக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அணு ஆயுதத்தின் பேரழிவை உலகுக்கு உணர்த்தும் நாளாகவும், இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.‘லிட்டில் பாய்’ எனும் 60 கிலோ எடையுள்ள அணுகுண்டை சுமந்து வந்த ‘பி-29 ரக எனோலாகெய்’ என்ற அமெரிக்க விமானம், ஹிரோஷிமா நகரின் மையப்பகுதியில், உலகின் முதல் அணுகுண்டை வீசியது. இந்த அணுகுண்டு அமெரிக்காவின் வான்படை விமானியான போல் டிபெட்ஸ் என்பவரால் எனோலா கே (Enola Gay) என்ற பி-29 ரக விமானத்தில் இருந்து வீசப்பட்டது. இதுவே ஆயுதமாகப் பாவிக்கப்பட்ட முதலாவது அணுகுண்டாகும். ‘சின்னப்பையன்’ அணுகுண்டு 29 இன்ச் விட்டமும், 126 இன்ச் நீளமும் 9700 பவுண்ட் எடையும் யுரேனியத்தை மூலப்பொருளாகவும் கொண்டதாகும்.
இது, அப்பகுதியில் 4 சதுர மைல் அளவுக்கு அழிவை ஏற்படுத்தியது. அப்போது ஹிரோஷிமாவின் மொத்த மக்கள்தொகை 3 லட்சத்து 50 ஆயிரம். ஏறத்தாழ 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் இதில் இறந்தனர். கதிர்வீச்சால் பல்லாயிரக்கணக்கானோர் நோய்வாய்ப்பட்டனர். (இதன் பாதிப்பு இன்றும் தொடர்கிறது) குண்டு வீசப்பட்டு 16 மணி நேரம் கழித்து அமெரிக்க அதிபர் ஹாரிட்ரூமேன், ஜப்பான் மீது அணுஆயுத தாக்குதல் நடத்தியதாக அறிவித்தார் (அணுகுண்டை சோதித்து பார்ப்பதற்காக அமெரிக்கா இதனை செய்தது எனவும் கூறப்படுகிறது). இதன் பிறகே ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டது, உலக நாடுகளுக்கு தெரியவந்தது.
மூன்று நாட்கள் கழித்து ஆக., 9ல், ஜப்பானின் நாகசாகி நகரின் மீது ‘பேட்மேன்’ என்ற அணுகுண்டை 2வது முறையாக அமெரிக்கா வீசியது. இந்த தாக்குதல்களால் இரண்டு நகரங்களும் முற்றிலுமாக நிலைகுலைந்தன. கதிர்வீச்சு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்தை எட்டியது. இதையடுத்து 6 நாட்கள் கழித்து, 1945 ஆக., 15ம் தேதி ஜப்பான் சரணடைவதாக ஒப்புக்கொண்டது. அத்துடன் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. போரில் அணுஆயுதம் பயன்படுத்தப்பட்டது இதுவே முதலும், கடைசியாகவும் அமைந்தது. அணுகுண்டு தாக்குதலால் பாதிக்கப்பட்ட இந்த 2 நகரங்களும், இன்று அதன் சுவடே தெரியாத அளவுக்கு தற்போது பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைந்து நிற்பது அந்நாட்டின் தன்னம்பிக்கையை வெளிப்படுத்துகிறது
Related Posts : Good to Read
No comments:
Post a Comment