நோயால் பாதிக்கப்பட்ட திசுக்களுக்கு பதிலாக ஸ்டெம் செல் என்கிற ஆதாரச் செல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.இந்த ஸ்டெம் செல் மூலம் உடல் உறுப்பில் திசுக்கள் மீண்டும் வளர்ச்சி பெறுகின்றன. தற்போது நோயாளியின் செல்லில் இருந்தே ஸ்டெம் செல்களை உருவாக்கலாம். இந்த புதிய முறை மூலம் நோயாளியின் பாதிக்கப்பட்ட திசுக்களை மாற்ற முடியும். இந்த புதிய கண்டுபிடிப்பை உயிரியல் ஆய்வுக்கான சல்க் இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அந்த ஆய்வாளர்கள் நோயாளிகளின் சொந்த செல்லில் இருந்து புதிய தொழில்நுட்பத்தில் பெருமளவு ரத்தச் செல்களை உருவாக்கி உள்ளனர். இந்த புதிய கண்டுபிடிப்பு மூலம் வரவிருக்கும் ஸ்டெம் செல் ஆய்வில் பயனுள்ள பலன்களை பெற முடியும். புற்றுநோய் மற்றும் நோய் எதிர்ப்பு செயல்பாடுகளில் இந்த புதிய ஸ்டெம் செல் முறை பயன்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். |
Search This Blog
Friday, July 22, 2011
ஸ்டெம் செல் மூலம் தனக்குத் தானே சிகிச்சை அளித்துக் கொள்ள முடியும்: ஆய்வாளர்கள் தகவல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment