ஒரு கோப்பறையை மறைத்து வைப்பதற்கு பல மென்பொருட்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இங்கு எந்த ஒரு மென்பொருளையும் பாவிக்காமல் வெறும் நோட்பாடினை மாத்திரம் வைத்து லாக் செய்ய முடியும். உதாரணமாக உங்களிடம் tamil என்ற கோப்பறை இருக்குதெனில் அந்த கோப்பறையை லாக் செய்வதற்கு பின்வரும் வழிமுறையை பின்பற்றவும். 1. முதலில் ஒரு நோட்பாடை திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும். ren tamil tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} பின் அந்த நோட்பாடை lock.bat என பெயர் கொடுத்து Save செய்யவும். 2. பின் இன்னொரு நோட்பாடை திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும். ren tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} tamil பின் அந்த நோட்பாடை key.bat என பெயர் கொடுத்து Save செய்யவும். 3. இங்கு tamil என்பது நீங்கள் Lock செய்ய வேண்டிய கோப்பறையின் பெயர் ஆகும். இனி குறிப்பிட்ட அந்த tamil என்ற கோப்பறையை லாக் செய்வதற்கு lock.bat என்ற கோப்பை இரண்டு முறை கிளிக் செய்தல் வேண்டும். 4. லாக் செய்த கோப்பறையை மீண்டும் Unlock செய்வதற்கு key.bat என்ற கோப்பை இரண்டு முறை கிளிக் செய்தல் வேண்டும். 5. இதில் கவனிக்க வேண்டிய ஒரு விடயம் நீங்கள் கோப்பறையை லாக் செய்யும் போது லாக் செய்யும் கோப்பறையும், lock.bat என்ற கோப்பும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். அதே போல Unlock செய்யும் போது unlock செய்யும் கோப்பறையும் key.bat என்ற கோப்பும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். |
Search This Blog
Monday, July 18, 2011
நோட்பாடை பயன்படுத்தி கோப்புகளை லாக் செய்வதற்கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment