பெண்களின் பேச்சை பெரும்பாலான நேரம் புரிந்து கொள்ள முடியாது. நண்பன் என்று நம்பிக் கொண்டிருப்பவர் பக்கத்திலேயே குழி வெட்டிக் கொண்டிருப்பார். இது போன்ற சூழ்நிலையை எதிர்கொண்டு எச்சரிக்கும் மூக்கு கண்ணாடியை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். மூளை மற்றும் நரம்புகளின் ஒருவித பாதிப்பு ஆட்டிசம் எனப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுடன் நெருங்கி பேச முடியாமல், பழக முடியாமல் சிரமப்படுவார்கள். சமூகத்தில் இருந்து சற்று விலகியே இருப்பார்கள். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள், பேச வருகிறார்கள் என்பதை அவர்களால் சட்டென்று புரிந்து கொள்ள முடியாது. இந்த குறைபாட்டை நீக்கும் வகையில் அமெரிக்காவின் மசாசூசட்ஸ் மாநில தொழில்நுட்ப கல்லூரி(எம்.ஐ.டி) தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது. தற்பொழுது அவர்கள் எக்ஸ்ரே மூக்கு கண்ணாடியை உருவாக்கி வருகின்றனர். இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுவதாவது: நமது மூளை நன்றாக செயல்படும் பட்சத்தில் அடுத்தவர்களின் முக பாவத்தை வைத்து என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டறிய முடியும். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களால் இவ்வாறு உணர முடியாது. அவர்களுக்கு வசதியாக மூக்கு கண்ணாடியை உருவாக்கி வருகிறோம். இதில் அரிசி அளவே உள்ள கமெரா பொருத்தப்பட்டுள்ளது. இது பாக்கெட் அளவு கணணியுடன்(பிராசசர்) இணைக்கப்பட்டிருக்கும். மனிதர்களின் 24 விதமான முக பாவங்கள் இதில் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஒருவருடன் பேசுகிறோம் என்றால் இந்த எக்ஸ்ரே கண்ணாடியை அணிந்து கொள்ள வேண்டும். அவரது முகத்தில் ஏற்படும் சிறு அசைவுகள், சுருக்கங்கள் ஆகியவற்றை கண்ணாடியில் இருக்கும் கமெரா கண்காணித்துக் கொண்டே இருக்கும். நேரில் எதிராளி சிரித்தாலும்கூட அவரது முகத்தில் ஏற்படும் துல்லிய அசைவுகளை வைத்து அவரது மனோபாவத்தை பிராசசர் கணக்கிடும். அவரிடம் பாசிட்டிவ் உணர்வுகள், முகபாவங்கள் தென்பட்டால் கண்ணாடியின் உள் பகுதியில் இருக்கும் சிக்னலில் பச்சை விளக்கு எரியும். தொடர்ந்து பேசலாம், ஆபத்தில்லை என்று புரிந்துகொள்ளலாம். அவர் நமக்கு ஆதரவானவர் அல்ல என்றாலோ, இனிக்க இனிக்க பேசி வேட்டு வைக்கிறார் என்றோ தெரியவந்தால் இந்த சிக்னலில் மஞ்சள், சிவப்பு விளக்கு எரியும். உஷாராகி பேச்சை நிறுத்திக் கொள்ளலாம். எதிராளி எந்த நோக்கத்தில் பேசுகிறார் என்பதை நன்கு புரிந்துகொள்ள முடியும். "உஷாரா பேசு" என்று பிரத்யேக ஸ்பீக்கர் மூலம் காதுக்குள் எச்சரிக்குமாறும் வடிவமைத்துக் கொள்ளலாம். கண்ணாடி வடிவமைப்பு பணிகள் ஏறக்குறைய முடிந்துவிட்டது. தற்போதைய அளவில் கண்ணாடி 64 சதவீதம் வெற்றிகரமாக செயல்படுகிறது. உரிய மாற்றங்கள் செய்த பிறகு கண்ணாடி அறிமுகமாகும். |
Search This Blog
Tuesday, July 19, 2011
எதிரிகளை காட்டிக் கொடுக்கும் கண்ணாடி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment