நாம் ஏன் ஒத்துப்போவதில்லை? (ஆங்கிலத்தில் குறும்படம் காண்க)
சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு (தமிழாக்கம்-பாகம் 2)
செப்டம்பர், 15 ,1893
இதற்கு முன் பேசிய நமது மதிப்பிற்குரிய சபையின் நாயகர், நாம் ஒருவொருக்கு ஒருவர் மதிப்புக் குறைவாகப் பேசி தூற்றுவதை விடவேண்டும் என்று கூறி நம்முள் இவ்வளவு வேற்றுமைகள், கருத்து வேறுபாடுகள் உள்ளன என்று வருத்தத்துடன் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
காலம் காலமாக இருந்து வரும் கஷ்டம்
இதுதான். இந்தவேற்றுமைகளைப் பற்றி விளக்க நான் ஒரு சிறிய கதையை விளக்கமாகக் கொடுக்க நினைக்கின்றேன். ஒரு தவளை கிணறு ஒன்றில் வாழ்ந்து வந்தது. அங்கேயே பிறந்து வளர்ந்து அது. நமது கதைக்கு வேண்டி அதற்கு கண்ணும் (பார்வையும்) இருந்தது. அந்த கிணற்றிலிருந்த சிறு சிறு புழு பூச்சிகளையும், பாசான் போன்றவைகளையும் உண்டு கிணற்றையும் சுத்தப் படுத்தி, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ச்சி அடைந்தது.
அவ்வாறிருக்கையில் ஒரு நாள் கடலில் வசிக்கும் ஒரு தவளை அந்த கிணற்றில் விழுந்து விட்டது. இதை கண்ட கிணற்றுத் தவளை, நீ யார் என்று கேட்க, கடல் தவளையோ நான் ஒரு கடல் தவளை, என்னுடைய கடல் எவ்வளவு பெரியது என்று கூற உரையாடல் தொடர்ந்தது. " கடல்? அது இவ்வளவு பெரியதா?, என்று கேட்டு கிணற்றுத் தவளை கிணற்றின் மறுபக்கம் தாவிக் குதித்துக் கேட்டது.
கடல் தவளையோ, "உன்னுடைய சிறிய கிணற்றை எப்படி எனது பெரிய கடலுக்கு சமமாக இருக்குமா என்று கேட்கலாம்", என்று கூறியது. கிணற்று தவளையோ மீண்டும் ஒருமுறை கிணற்றின் அந்தப் பக்கம் தாவிக் குதுத்து இவ்வவளவு பெரிதாகுமோ உனது கடல் என்று கேட்டது? கடல் தவளையோ இது என்ன முட்டாள்தனம்! என்றது. கிணற்று தவளையோ எனது கிணறை விட கடல் நிச்சயமாக பெரியதாக இருக்கவே இருக்க முடியாது, நீ பொய்யன், உடனே வெளியேறு என்று கூச்சலிட ஆரம்பித்தது. தான் பிறந்ததி லிருந்து தனது சிறிய கிணற்றை விட்டு வெளிஉலகத்தைக் காணாத, புரிந்து கொள்ளாத கிணற்றுத் தவளையின் எண்ணப்போக்கு, நமது வேற்றுமைகளின் காரண காரியங்களை தெளிவாக விளக்கும் என நான் நினைக்கின்றேன்.
நான் இந்து. நான் எனது சிறிய கிணற்றிற்குள் இருந்து கொண்டு, என் சிறு கிணறுதான் முழு உலகம் என்று நினைக்கின்றேன். ஒரு கிருஸ்துவன் தனது மதமாகிய சிறு கிணற்றுக்குள் இருந்துகொண்டு தனது கிணறுதான் முழு உலகம் என்று நினைக்கின்றான்.அதேபோல் ஒரு முகமதியனும் தன் சிறு கிணற்றில் உட்கார்ந்து கொண்டு அதுதான் முழு உலகம் என்று நினைக்கின்றான். இதுவே நமது இந்த வேற்றுமைகளுக்கு முக்கிய காரணமாக அமைகின்றது. நமது இந்த சிறிய உலகின் எல்லைகளைத் தகர்த்தெறிய அமெரிக்கர்களாகிய நீங்கள் எடுத்த இந்த முயற்சிக்காக நான் உங்களுக்கு நன்றி செலுத்தவேண்டும். வருங்காலத்தில் உங்களின் விருப்பம் நிறைவேற இறைவன் அருள்புரிவார் என்று நம்புகின்றேன்.
மேலும் பயணிப்போம் ஆங்கில குறும்படமும், தமிழாக்க கட்டுரையும் காண...அன்புடன் கே எம் தர்மா...
No comments:
Post a Comment