Search This Blog

Sunday, June 26, 2011

வாஸ்து சாஸ்திரம் - ஒரு எளிய அறிமுகம் ! தமிழ் புத்தகம் ( Free E-Book - Download )


வாஸ்து சாஸ்திரம் - ஒரு எளிய அறிமுகம் ! தமிழ் புத்தகம் ( Free E-Book - Download )

நமது இணையத்தில் ஜோதிடம் பயிலும் வாசக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நீ எதை கேட்கிறாயோ, அதை நான் கொடுப்பேன் என்று இருக்கும் அட்டகாசமான கூகிள் இருக்கும் வரை , நமக்கு எல்லாமே கிடைக்கும் போல தெரிகிறது. வாஸ்துவைப் பற்றி ஒரு எளிய விளக்கங்கள் கொண்ட , ஒரு அடிப்படைப் புத்தகம் ஒன்றை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

 எப்படி , ஜாதகம் ஒரு மனிதனின் வாழ்வில் - வெற்றி, தோல்வி , நிம்மதி , கலக்கம் என அத்தனை காரியங்களுக்கும் முக்கியமோ, அதைப் போலே வாஸ்துவும் - மிக முக்கிய பங்கு வகிக்கிறது .நவ கிரகங்களும் , உங்கள் வீட்டின் எட்டு மூலைகளில் அமர்ந்து , உங்களை இயக்குவர். 

நமது ஜோதிட மாணவர்கள் அனைவரும் , தெரிந்து பயன் பெற - ஒரு சிறிய புத்தகம் இது. இதை தெளிவாக படித்து , உங்கள் அறிவை மேம்படுத்துதல் முக்கியம். வெறுமனே , material மட்டும்  வைத்துக்கொண்டு பிரயோஜனம் இல்லை. இந்த புத்தகம் என்று இல்லை ... உங்களுக்கு வாஸ்து சம்பந்தமான எந்த சந்தேகம் என்றாலும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். 

நாளை சந்திர கிரகணம் வருகிறது. கிரகண நேரத்தில் நீங்கள் செய்யும் மந்திர ஜபத்திற்கு கோடி மடங்கு பலன் அதிகம். இந்த நேரத்தை , பெரிய பெரிய சித்தர்களும், ரிஷிகளும் - தவறாமல் பயன்படுத்துவர். அவர்களை பின்பற்றி , நாமும் இறையருளை வேண்டுவோம்..நமது நியாயமான கோரிக்கைகளை அந்த பரபொருள் கண்டிப்பாக நிறைவேற்றும்... !

இந்த பூமி , ஒரு குறிப்பிட்ட அச்சில் , வேகமாக சுற்றுகிறது... அந்த சுற்றும் விசையில் , வேகத்தில் வெளிவரும் சப்தமே - பிரணவ மந்திரமாகிய ' ஓம் " , உலகில் உள்ள அத்துணை மதங்களிலும் - ஒலிக்கப்படும் மந்திரங்கள் அனைத்தும் இந்த பிரணவ மந்திர அதிர்வை ஒட்டியே இருக்கும்.

நமது மந்திர அதிர்வுகள் இந்த மந்திரத்தை ஒட்டி இருக்கும்போது , அபரிமிதமான பலன்கள் நமது ஆன்மாவுக்கு கிடைக்கிறது. ஸ்ருதியும் லயமும் ஒன்று சேர்ந்து நல்ல இசை கிடைப்பது போல ,அந்த இசையை நம் காத்து கேட்பதுபோலே , மனம் ஒன்றுவது போல - மந்திர அதிர்வுகளின் இசையில் இறைவன்  உங்களை கவனிக்க ஆரம்பிக்கிறார் .

கிரகண நேரத்தை தவறாமல் பயன்படுத்தி - " ஓம் சிவ சிவ ஓம்  " மந்திர ஜெபம் செய்யுங்கள். தன வாழ் நாள் முழுவதும் , ஒரு மிகப் பெரிய ஆன்மீக ஆராய்ச்சி செய்த பெரியவர் திரு . மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் , கண்டறிந்த மந்திரம் இது .... இதை முறைப்படி ஜெபித்து வர , உங்களுக்கு நீங்கள் செல்லும் பாதை , செல்ல வேண்டிய பாதை தெளிவாக தெரிய வரும்.

கூடிய விரைவில் உங்களுக்கே நீங்கள் தியானம் பண்ண வேண்டிய மந்திரமும், தகுந்த குரு ஒருவர் மூலம் கிட்டும். இறைவனிடம் நீங்கள் என்ன வேண்டுகிறீர்கள் என்பதில் தெளிவாக இருங்கள். உங்கள் பிறவியின் நோக்கம் என்ன , அதை எப்படி ஈடேற்றுவது என்கிற அத்தனை விஷயங்களும், இந்த மந்திர ஜெபங்களினால் உங்களுக்கு கிட்டும்.

மன நிம்மதியும், ஆத்ம திருப்தியும், என்றும் உங்களுக்கு கிடைக்க பரம்பொருள் துணை புரியட்டும் !!

வாழ்த்துக்கள் !

நமது வாசக நண்பர் திரு. ஹரி மணிகண்டன் அவர்கள் , நமக்கு இந்த சொர்ண லிங்கேஸ்வரர் படத்தை அனுப்பியிருந்தார். அவருக்கு மனமார்ந்த நன்றிகள். 
 கண்ணைப் பறிக்கும் அழகுடன், கம்பீரமும் கலந்து இருக்கும் அந்த படத்தை கீழே கொடுத்துள்ளேன்... !

வாஸ்து சாஸ்திரம் - தமிழில் புத்தகத்தை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.



http://www.ziddu.com/download/15351497/VasthuSastrainTamil.pdf.html



Read more: http://www.livingextra.com/2011/06/free-e-book-download.html#ixzz1QLhRhAwJ

No comments:

Post a Comment