Search This Blog

Monday, July 17, 2017

தமிழ் தாய் வாழ்த்து வரலாறு

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா என்னும் ஊரில் பெருமாள் பிள்ளை என்பவருக்கும் மாடத்தி அம்மாளுக்கும் 1855ம் ஆண்டு சுந்தரம் பிள்ளை பிறந்தார். இளமையிலேயே தேவார திருவாசகங்களையும் சமய வழிபாட்டு நூல்களையும் கற்றார். இவரது தமிழாசிரியராக விளங்கியவர் நாகப்பட்டினம் நாராயணசாமிப் பிள்ளை. இவரிடமே மறைமலை அடிகள் தமிழ் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1876 ஆம் ஆண்டு பி.ஏ. தேர்வில் வெற்றி பெற்றார். அடுத்த ஆண்டில் சிவகாமி அம்மாள் என்பவரைத் திருமணம் புரிந்தார்.லார்டு லிட்டன் என்பவர் எழுதிய தி சீக்ரெட் வே (The secret way) என்ற நாடக நூலை தமிழில் 1891ல் மொழிபெயர்த்தார் பெ. சுந்தரம் பிள்ளை . அந்த நாடக நூலின் பெயர் "மனோன்மணியம் " 1879ம் ஆண்டு பெ.சுந்தரம் பிள்ளை இந்த மொழிபெயர்ப்பு நூலை துவங்கி 1891 ம் ஆண்டு தான் வெளியிட்டார். இந்நூலை அவர் எழுதி முடிக்க சுமார் 13 வருடங்கள் பிடித்தன . யாப்பு வடிவிலும், கதைமாந்தர் பேசும் முறையிலும் கதை சென்றாலும், இதை வாசிப்பவர்க்குச் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றதொரு நூலை நாம் படிக்கிறோம் என்ற எண்ணமே உண்டாகும்.இது ஒரு மொழி பெயர்ப்பு என்று தோன்றாத வகையில் இந்நூலின் ஆக்கம் இருக்கும் . நூலின் முகப்பில் கடவுள் வாழ்த்து எழுதும் எழுத்தாளர்களின் வழக்கம் போல , இவர் "தமிழ் தாய் வாழ்த்து " எழுதினார். அந்த வாழ்த்து பாடல் 1970ம் வருடம் ஜூன் மாதம் தமிழக அரசால் அங்கீகரிக்கப் பட்டு தமிழகத்தின் தமிழ் தாய் வாழ்த்தாக அன்றைய முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்களால் அரசாணை இயற்ற பட்டு அறிவிப்பு வெளியானது . நம் தமிழ் தாய் வாழ்த்திற்கு இசை அமைத்தவர் மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் .தமிழ் தாய் வாழ்த்தை அப்படியே எடுத்துக் கொள்ளாமல் , கலைஞர் கருணாநிதி அவர்களின் மேற்பார்வையில் , பாடல் சுருக்க பட்டு , தேவையில்லாத சில வார்த்தைகள் குறைக்கப்பட்டே தமிழக அரசால் வெளியிடப் பட்டது



பெ. சுந்தரம் பிள்ளையின் (ஏப்ரல் 4, 1855 - ஏப்ரல் 26, 1897) மனோன்மணீயம் நாடக நூல் பெரும் புகழ் பெறவே அவர் பெயரின் அடை மொழியாக நூலின் பெயர் இணைத்து அவர் அழைக்க பட்டார் .இவர் பயின்றது தத்துவம் என்பதால் புகழ்பெற்ற பேராசிரியர் ஹார்வியின் அன்புக்குகந்த மாணவரானார். புகழ்பெற்ற சமூகவியலாளர் ஸ்பென்சரைப் போற்றுபவர்களில் ஒருவராக இருந்தார். கோடகநல்லூர் சுந்தர சுவாமிகளின் சீடர். சிறுவயது முதலாகவே தேவாரம் திருவாசகம் முதலிய பக்தி இலக்கியங்களைத் தம் தந்தையாரின் வழிகாட்டுதலில் பயின்றவர். திரு வனந்தபுரத்திலும், சட்டாம்பி சுவாமிகள், தைக்காட்டு அய்யாவு சுவாமி, நாராயண குரு போன்றவர்களுடன் தொடர்பு வைத்திருந்தார் 1897இல் (30-01-1897, Madras Standard).ல் இவர் எழுதியிருக்கிறார்: “India south of the Vindhyas, the Peninsular India, still continues to be India proper” அதாவது மெய்யான இந்தியா என்பதே விந்தியத்திற்குத் தெற்கிலுள்ள பகுதிதான் அதாவது தென்னிந்தியா என்பது சுந்தரம் பிள்ளையின் கருத்து.
சுந்தரனார் சிறியதும் பெரியதுமாக ஏறத்தாழ இருபது நூல்களுக்கு மேல் எழுதியதாகச் சொல்வார்கள். எழுதிய நூல்களில் முக்கியமானவை நூற்றொகை விளக்கம், மனோன்மணீயம், திருவிதாங்கூர்ப் பண்டை மன்னர் காலஆராய்ச்சி (The Early Sovereigns of Travancore), தமிழ் இலக்கிய வரலாற்றில் சில மைல் கற்கள் (Some Milestones in the History of Tamil Literature) ஆகியவை.பத்துப்பாட்டு பற்றிப் பொதுவாக எழுதப்பட்ட நூல் The Ten Tamil Idylls (பத்து வாழ்க்கைச் சித்திரங்கள்) என்பது. இதைத் தவிர, கிறித்துவக் கல்லூரி இதழ்களில் ஹாப்ஸ் பற்றியும், பெந்தாம் பற்றியும், நம்பியாண்டார் நம்பியின் காலம் பற்றியும் எழுதியிருக்கிறார்.The Ten Tamil Idylls என்ற நூலில், பத்துப் பாட்டில் மூன்று பாடல்களை-திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை, மதுரை
க்காஞ்சி- நல்ல ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தி
ருக்கிறார். 1889இல் பத்துப்பாட்டின் பதிப்பு, உ. வே. சாமிநாதையரால் வெளியிடப்ப ட்டவுடனே 1891இல் இவற்றை வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.நாற்பத்திரண்டு வயதுக்குள், கல்வெட்டாராய்ச்சி, தர்க்கமுறை, அறிவியல்முறை ஆய்வுகள், நூற்பகுப்பு முறைகள், இலக்கிய ஆய்வு எனப் பலவற்றிலும் தோய்ந்து அவற்றை முறையாக வெளிப்படுத்தியவர் சுந்தரனார். தமிழ், ஆங்கிலம், தத்துவம் ஆகிய முத்துறைகளில் வல்லுநர். ஒருபுறம் சைவப் பற்றும், அக்கறையும் இருந்தாலும், ஸ்பென்சர், ஹாப்ஸ் என அவர் போற்றிய அறிஞர்களின் கொள்கைகள் சுந்தரனாரின் இன்னொரு முகத்தையும் காட்டவல்லவை. தன்னுடைய 42 வது வயதிலேயே மரணமெய்தினார் சுந்தரனார் .இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்திருந்தால் மிக அரிய படைப்புகள் இவரால் தமிழுலகிற்கு மட்டுமல்ல கேரளத்திற்கும் கிடைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.


நீராரும் கடலுடுத்த நிலமடந்தை கெழிலொழுகும்...

சீராரும் வதனமென திகழ் பாரத கண்டமிதில்...

தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திரு நாடும்...

தக்கசிறு பிறை நுதலும் தறிதனரும் திலகமுமே...

அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற...

எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே!!!
தமிழணங்கே!!!

உன் சீரிளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!!!
வாழ்த்துதுமே!!!
வாழ்த்துதுமே!!!

##############################################
(Oh Tamil Country!) you are beautifully clad in the wavy rivers and seas;

Your chiseled face shines amidst the famous Barath sub-continent;

You are the elite Dravidian country in the Deccan;

Your small forehead shines like the crescent with a distinct "thilagam";

Like the fragrance of the "thilagam" rejoiced by the entire world,

Your great name and fame is known in all directions;

Oh Tamil Angel! Oh Tamil Angel!

Your majestic, youthful industriousness makes us spell bound and wish all the best for you, all the best! all the best!
Govindarajan Vijaya Padma

No comments:

Post a Comment