Search This Blog

Thursday, April 27, 2017

Take Off malayalam movie .டேக் ஆஃப்’ மலையாளப் படம்

Take Off STORY: Take Off is inspired by the real-life rescue of Indian nurses who were stranded in Tikrit, Iraq, during the country’s civil war in 2014. The movie follows the life of its protagonist Sameera, a strong-willed nurse who along with her husband travels to Iraq for work. IS militants soon take control of their hospital. Will they make it out alive from the crisis?
2014ல் ஈராக்கில் உள்நாட்டுப் போர் நடந்த போது, திக்ரித் நகரில் ஐஎஸ் தீவிரவாதிகளிடம் சிறைப்பட்டிருந்த 46 இந்திய நர்ஸ்களை மீட்ட உண்மை சம்பவத்தை தழுவி `டேக் ஆஃப்’ எடுக்கப்பட்டுள்ளது.
உண்மை சம்பவம் ஒரு புறம் இருக்க, படத்தின் முதல் பாதியை மிக முக்கியமானதாக கருதுகிறேன். `பிரபல’ சினிமா விமர்சகர் ஒருவர், `டேக் ஆஃப்’பின் முதல் பாதி வழக்கமான மலையாளப் படம் என்று சாதாரணமாக ஒரு வரியில் கடந்து சென்றிருப்பதை என்னால் ஏற்க முடியவில்லை. அதனால், மொத்தப்படமும் சிறப்பாக எடுக்கப் பட்டிருந்தாலும், முதல் பாதியைப் பற்றி மட்டுமே பேசப் போகிறேன்.

31 வயது சமீரா (பார்வதி) கேரளாவில் நர்ஸாக பணியாற்றும் விவாகரத்தான பெண். வறுமையில் இருக்கும் பெற்றோர், சகோதரிகளுக்கு உதவவும், அவர்களின் கடனை அடைக்கவும் திருமணத்துக்கு பிறகு, புகுந்த வீட்டின் விருப்பத்தை மீறி வேலைக்கு போகிறார். அதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கணவருடன் விவாகரத்து, 10 வயது மகன் கணவன் வீட்டாருடன் இருக்கிறான்.

இந்த நிலையில், ஈராக்குக்கு நர்ஸ் பணிக்கு போக சமீரா விரும்புகிறார். சமீராவை உள்ளவாறே ஏற்றுக் கொண்டு நேசிக்கும் சக நர்ஸ் ஷாகித்தின் (குஞ்சக்கோ போபன்) காதலை மறுக்கிறார். சமீரா ஈராக்குக்கு செல்வதில் பிறந்தக உறவுகளுக்கு தயக்கம். `இங்கே இருந்தால் இன்னொரு கல்யாணம் செய்து வைக்கலாமே’ என்று மாமா சொல்ல, ஷாகித்திடம் சென்று, `திருமணம் செய்து கொள்ளலாம், ஆனால் ஈராக் செல்ல தடை சொல்லக் கூடாது’ என்று சொல்லி, குடும்பத்தின் ஒப்புதலுடன் மணம் செய்து கொள்கிறார்.
இருவரும் மகிழ்ச்சியாக ஈராக் பயணத்திற்கு தயாராகின்றனர். சமீரா கர்ப்பமாகிறார். கருவை கலைக்க உத்தேசிக்கிறார். காரணம், கோடை விடுமுறையை தன்னுடன் கழிப்பதற்காக வரப்போகும் மகன், தன் இரண்டாவது திருமணத்தையும், இந்த கர்ப்பத்தையும் எப்படி எடுத்துக் கொள்வானோ என்ற பயம். கூடவே, கர்ப்பத்தைக் காரணம் காட்டி ஈராக் பயணத்தை உறவுகள் தடுத்தால் என்ன செய்வது என்ற கவலையும் சேர்ந்து கொள்கிறது. சமீராவின் மனநெருக்கடியைப் புரிந்து கொள்ளும் ஷாகித், `அவன் நம் மகன், விடுமுறைக்கு நம் வீட்டுக்கு அவன் வரட்டும். அவனுக்கு புரிய வைப்போம். ஈராக்குக்கு செல்வோம், பிரவசம் வரை நீ அங்கே வேலை பாரு, நான் உன்னுடன் இருக்கிறேன்’ என்று அரவணைக்கிறார்.
இருவரும் ஈராக் பறக்கின்றனர். போர் சூழலில் மருத்துவமனையில் வேலை செய்கின்றனர். மகன் விடுமுறையில் ஈராக்குக்கு அவர்கள் வீட்டுக்கு வருகிறான். அவனிடம் நடந்ததை சொல்ல ஷமீரா திணறுகிறார். தளர்வான உடையணிந்து மேடிட்ட வயிற்றை மறைக்கிறார். மகன், ஷாகித்தை ஏற்க மறுக்கிறான், அம்மாவிடம் முரண்டு பிடிக்கிறான் என்று முடிகிறது முதல் பாதி.
இரண்டாம் பாதி முழுக்க கேரள நர்ஸ்கள் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியிருப்பது, அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், அவர்களை மீட்க இந்திய தூதர் மனோஜ் (ஃபகத் ஃபாசில்) செய்யும் முயற்சிகள், மரணத்தின் முனை வரை சென்று மீளும் ஷாகித், ஷமீரா தலைமையில் நர்ஸ்கள் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு, மீட்கப்படப்பட்டு நாடு திரும்புவது என்று படம் போகிறது.
முதல் கணவனுடன் ஷமீராவின் வாழ்க்கை மகிழ்ச்சியும், காதலுமாக செல்வதாக காட்டியிருப்பது அசத்தல். (வழக்கமாக விவாகரத்து செய்யும் முதல் கணவனுடனான வாழ்வை கசப்பும், வெறுப்பும், வன்முறையுமாக சித்தரிப்பதே தமிழ்படங்களின் எழுதப்படாத விதி. கதாநாயகியின் இரண்டாவது காதலையும், கல்யாணத்தையும் நியாயப்படுத்தவாம்.)
இசுலாமியப் பெண் என்றாலே ஒடுக்குமுறை என்று பழகிப் போன பொதுபுத்திக்கு, (பிறந்தவீட்டுக்கு உதவ வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தாலும்), நர்ஸ் பணி மீது அலாதி ஈடுபாடு காட்டும், கல்யாணத்திற்கு பிறகும் பணியை விருப்பத்துடன் தொடரும் நாயகி புதியவள். புகுந்த வீட்டுப் பெண்கள் தரும் பர்தாவை மறுதலித்து, போனால் போகட்டுமென்று சுரிதார் துப்பட்டாவால் லேசாக முக்காடு போட்டுக் கொள்கிறாள்.
விவாகரத்துக்குப் பிறகு, மகனைப் பிரிந்து, பிறந்த வீட்டிலிருந்து ஷமீரா வேலைக்குப் போகிறார். தாய்மை, இந்தப் பெண்ணை, அவளின் பொறுப்பேற்கும் தன்மையை, பொருளீட்டும் முனைப்பை முடக்கவில்லை.
எப்போதும் கோபமாக சிடுசிடுவென்று வளைய வரும் ஷமீரா, விவாகரத்தான, மகனைப் பிரிந்த, பிறந்த வீட்டுப் பொறுப்பை சுமக்கும் பெண்களின் மனஅழுத்தத்தை யதார்த்தமாக பிரதிலிக்கிறாள். தன் முடிவுகளை தானே எடுக்கும் பெண்ணாக, ஆற்றல் மிக்க ஆளுமையாக ஷமீராவை முன்நிறுத்தும் பார்வதியின் நடிப்பு அருமை ! `நர்ஸாக இங்கே இரவும் பகலும் வேலை செய்தாலும் நல்ல சம்பளமும் இல்லை, எங்களுக்கு மரியாதையும் இல்லை. குடும்பத்தைக் காப்பாத்த வெளிநாட்டுக்குத் தானே போக வேண்டியிருக்கு’ என்று பார்வதி பேசும் வசனம் சுளீர் !
இசுலாமியப் பெண்ணின் இரண்டாவது காதலை ஏற்றுக் கொண்டு குடும்பத்தினர் செய்து வைக்கும் திருமணம், மகனை கொண்டுவிட வரும் முதல் கணவன் ஷமீராவிடம் தோழமையாக நிகழ்த்தும் நேர்மையான உரையாடல், இரண்டாவது கணவனின் புரிதல், நேசம் என்று படம் நிறைய ஆச்சரியப்படுத்துகிறது. வாழ்த்துக்கள் இயக்குனர் மகேஷ் நாராயணனுக்கும், மொத்தக் குழுவினருக்கும் !



Take Off REVIEW: Editor-turned-filmmaker Mahesh Narayanan’s debut directorial Take Off has been one of the most-awaited films this year for several reasons – it has Parvathy playing the central character, it will mark Fahadh Faasil’s first movie after over an year and most importantly it’s based on the real-life story of the rescue of 46 Indian nurses who were stranded in Saddam Hussein’s hometown of Tikrit, Iraq, when IS militants took over the city in 2014.

With the story being familiar, the challenge awaiting the director was presenting the plot in an engaging manner, taking cinematic liberties. And Mahesh along with co-scriptwriter PV Shajikumar does it with aplomb.

Instead of focusing on the rescue, the duo spends the lion’s share of the first half fleshing out its protagonist Sameera (Parvathy), a 31-year-old divorcee and a strong-willed nurse, who works to pay her loans and put food on the table for her family. She soon lets her colleague Shahid into her life and the duo travel to Iraq in search of greener pastures. What awaits them in the strife-torn country is a life in peril. Soon, IS militants take over the city and duo have to fight for their lives to make it out alive from the warzone. Aiding them from the sideline is the shrewd Indian ambassador Manoj (Fahadh Faasil) as the Indian and Iraqi government seem helpless in the dire situation. The adversities Parvathy and the group of nurses face under IS captivity and how they endure them form the rest of the plot.

The production design of the movie could very well rival Airlift, Bollywood’s film on the evacuation of Indians based in Kuwait during the Gulf War. And for a Malayalam film, that’s an achievement that everyone in the crew could be proud of.

Parvathy as Sameera is exceptional conveying the character’s mindset as challenges keep surmounting – while balancing her family life along with work or trying to keep calm when she is on pins and needles about what would happen next as the group is held captive by the militants. Her scenes while pleading to the ambassador for locating Shahid or when the diplomat ultimately tells her what happened to Shahid tug at the heartstrings.

She carries the movie on her own and ably supporting her are Kunchacko Boban and Fahadh Faasil.

Kunchacko pulls a restrained and subtle performance as Shahid, who also serves as the undying ray of hope in Sameera’s life. Fahadh as the Indian ambassador is suave and brings a sense of urgency to the proceedings; his expressions of contempt and impudence at his senior officials add a few doses of heroism in the film. Asif Ali, Prem Prakash and Prakash Belawadi excel in their cameos.

The film’s strength apart from Parvathy’s stellar performance though is the script. Never once does it slack – despite the first half being a drama. The director also ensures that in between the taut screenplay, the movie addresses the plight of nurses who travel abroad seeking employment to pay off loans, to take care of their family and for better prospects even if it means putting their lives on the line. The last few scenes of the movie though falls short of being edge-of-the-seat moments. Sanu Varghese’s shots keep the audience engaged and thrust them into the warzone in the second half.

Take Off is a brilliant take on a real-life tale and with the director’s own spin on the incidents, it makes an engaging cinematic experience that could give even Bollywood movies of similar genre, made at much-bigger budgets, a run for their money.

Thanks 
Geeta Ilangovan,http://timesofindia.indiatimes.com

No comments:

Post a Comment