Search This Blog

Friday, April 15, 2016

பேராசிரியர் முத்துக்குமரன் மறைந்தார்


பாரதிதாசன் பல்கலைக் கழகத் துணைவேந்தராக இரண்டுமுறை பதவி வகித்தவர் பேராசிரியர் ச.முத்துக்குமரன் (வயது 84).
1996இல் தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் உறுப்பினர் செயலராகப் பணியாற்றினார். 2001இல் அதன் துணைத்தலைவர் பொறுப்பையும் வகித்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் “சமச்சீர் கல்வித் திட்ட”க்குழுவின் தலைவராகவும் பணியாற்றினார். அறிவியல் நகரத்தின் செயற்குழுவின் தலைவராகவும் இருந்திருக்கிறார்.
தமிழ்ப் பயிற்று மொழியாக வேண்டும் என்பதற்காக பெரிதும் உழைத்தவர்களின் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்தவர் பேராசிரியர் ச.முத்துக்குமரனாவார்.
1966 முதல் 1976 வரையிலான காலக்கட்டத்தில் கிண்டி பொறியியல் கல்லூரியில் பணியாற்றும் போதே தமிழ் ஆட்சி மொழி, பயிற்று மொழி, கலைச்சொல் ஆக்கம் இவற்றில் ஈடுபாடு கொண்டு உழைத்து வந்தார்.
பொறியியல் கல்லூரி தமிழ்மன்றத் தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றினார்.
இவர் துணைவேந்தராகப் பதவி வகித்தபோது ஐந்து துறைகளுக்குத் தேவையான எல்லா பாடநூல்களையும் தமிழில் எழுதி வெளியிட ஏற்பாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்துத் துறைகளிலும் தமிழின் மூலம் சாதிக்க முடியும் என்பதில் அழுத்தமான நம்பிக்கை வைத்திருந்த பேராசிரியர் ச.முத்துக்குமரன் அவர்கள்,  (14.04.2016) அதிகாலை தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டார்.
அன்னாரின் இறுதிச் சடங்குகள் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று பிற்பகல் நடக்கிறது.
(பேராசிரியரின் மகனார் மு.மேகநாதன் அவர்களின் தொடர்புக்கு 97102 29910 -
044 24914270)

No comments:

Post a Comment