Search This Blog

Sunday, April 10, 2016

ஒரு கிரகத்திற்கும் மற்றொரு கிரகத்திற்கும் உள்ள தொடர்பினால் அடையவிருக்கும் யோகங்கள்

குருதுரோக யோகம்: ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் நின்ற ராசிக்கு முன்னும் பின்னும் உள்ள ராசிகளில் சூரியன்/இராகு/கேதுவைத் தவிர, மற்ற கிரகங்கள் இருந்தால், இந்த அமைப்பு குருதுரோக யோகம் ஆகும். இதனால் ஜாதகர், சகலசம்பத்தும்/நல்ல குண நலன்கள்/ வாகனசுகம் ஆகியவை அடையப்பெறுவர் என்பதாகும்.
அநாபாயோகம்: ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் நின்ற ஸ்தானத்திற்கு 12-ம் இல்லத்தில் சூரியனைத் தவிர, மற்ற கிரகங்கள் இருப்பது, அநாபாயோகம் ஆகும். இதனால், ஜாதகர் சிறப்பான உடல்நலம் பெறல், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, வசதியான வாழ்க்கை, வாழ்க்கை வாழ்வதற்கே என்ற எண்ணம், எதையும் தாங்கும் இதயம், பதவி, பட்டம், பேரும்-புகழ் ஆகியவை அடையப்பெறுவர் என்பதாகும்.
அதியோகம்: ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்திற்கு/சந்திரன் நின்ற ராசிக்கு 6-7-8-ம் இல்லங்களில், சுபர்களாகிய குருபகவான் புதன்/சுக்கிரன் ஆகியோர் கூடியோ அல்லது தனித்தனியாகவோ இருந்தால் இது அதியோகம் ஆகும். இதனால், ஜாதகர் மிகப்பெரிய உத்தியோகம் வகித்தல், செல்வச் செழிப்பு, பேரும் புகழும் அடையப்பெறுவர் என்பதாகும்.
சகடயோகம்: ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் நின்ற ஸ்தானத்திற்கு 8-ம் இல்லத்தில் அல்லது 12-ம் இல்லத்தில் குருபகவான் அமையப்பெற்றால், இது சகடயோகம் ஆகும். இதனால் ஜாதகர் சக்கரத்தைப் போல நிலையில்லாத வாழ்க்கை, எப்பாதும் கஷ்டங்களை அனுபவித்தல் ஆகியவை அடையப்பெறுவர் என்பதாகும்.
வேசி யோகம்: ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் நின்ற ராசிக்கு 2-ம் இல்லத்தில் சந்திரன்/இராகு/கேது-வைத்தவிர, மற்றகிரகம் இருந்தால், அமையப்பெற்றால் இது வேசியோகம் ஆகும். இதனால், ஜாதகர் தனலாபம்/சேல்வச் செழிப்பு/சத்ருக்கள் ஜெயம் ஆகியவை அடையப்பெறுவர் என்பதாகும். ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் நின்ற ராசிக்கு 12-ம் இல்லத்தில் சந்திரன் இராகு, கேதுவைத் தவிர மற்ற கிரகங்கள் அமையப்பெறுவது வாசி யோகம் ஆகும் இதனால் ஜாதகர் மகிழ்ச்சியான/உயர்ந்த நிலை, பேரும்-புகழும் பெருந்தகையாளர், அதிஉயர் பதவி அடைதல் ஆகியவை அடையப்பெறுவர் என்பதாகும்.
உபயசாரி (சுப) யோகம் ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் நின்ற ராசிக்கு 2-ம்/12-ம் இல்லத்தில் சந்திரன்/இராகு/கேதுவைத் தவிர மற்ற கிரகங்கள் அமையப்பெறுவது உபயசாரி யோகம் ஆகும். இதனால்
ஜாதகர் நல்ல உடல் அமைப்பு, சிறப்பான பேச்சு வன்மை, எதையும் நிறைவேற்றும் திறமை, செல்வந்தர் அனைவராலும் விரும்பப்படுதல், தற்பெருமை, பேரும்/புகழும் அடைதல் ஆகியவை ஜாதகர் மகிழ்ச்சியான/உயர்ந்த நிலை, பேரும்/புகழும் பெருந்தகையாளர் அதிஉயர் பதவி அடைதல் ஆகியவைப் பெறுவர் என்பதாகும்.
ரவியோகம்: ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்திற்கு 10-ம் இல்லத்தில் சூரியன் 10-ம் இல்லத்து அதிபதிக்கிரகம், சனிபகவானுடன் இணைந்து 3-ம் இல்லத்தில் அமையப்பெறுவது ரவியோகம் ஆகும். இதனால்
ஜாதகர் அரசாங்க ஆதரவு பெறல், விஞ்ஞானியாக அடைதல், நல்ல உடற்கட்டு, கவர்ச்சி எளிமையான தோற்றம், எதிலும் மிக்க ஆர்வம் பெற்றிருத்தல் ஆகியவை அடையப்பெறுவர்.
பஞ்ச மஹா புருஷயோகம்/பத்ரயோகம்: ஒருவரின் ஜாதகத்தில் புதன் ஆட்சி/உச்சம் பெற்று, ஜனன லக்னத்திற்கோ, இராசிக்கோ, கேந்திரத்தில் அமையப்பெற்றால், இத பத்ரயோகம் ஆகும். இதனால் ஜாதகர் கம்பீரத்தோற்றம், நல்ல பேசும்திறன், தனலாபம் ஆகியவை அடையப்பெறுவர்.
ருசுகயோகம்: ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய்/அங்காரகன், ஆட்சி அல்லது உச்சம் பெற்று ஜனன லக்னத்திற்கோ அல்லது ஜனன இராசிக்கோ, கேந்திரம்/ஜாதகர், நல்ல பேரும்/புகழும், ஆயுள்பலம், தனலாபம், விரோதிகளை வெல்லும் திறன், நல்லதோர் உயர் பதவி வகித்தல் ஆகியவை அடையப்பெறுவர் என்பதாகும்.
சசயோகம்: ஒருவரின் ஜாதகத்தில், சனிபகவான் ஆட்சி அல்லது உச்சம் பெற்று கேந்திரத்தில் அமையப்பெற்று இருப்பது சசயோகம் ஆகும். செல்வந்தர், செல்வாக்கு, சற்று வக்ரகுணம் ஆகியவை அடையப்பெறுவர் என்பதாகும்.
ஹம்சயோகம்: ஒருவரின் ஜாதகத்தில் குருபகவான் ஆட்சி அல்லது உச்சம் பெற்று ஜனன லக்னத்திற்கோ/ஜனன இராசிக்கோ, கேந்திரத்தில் அமையப்பெறுவது ஹம்ச யோகம் ஆகும். இதனால் ஜாதகர்
நல்ல பெயர், செல்வச்செழிப்பு, பொன்/பொருள்/சொத்துக்கள் சேர்க்கை ஆகியவை அடையப்பெறுவர் என்பதாகும்.
அகண்ட சாம்ராஜ்ஜிய யோகம்: ஒருவரின் ஜாதகத்தில் 2-9-11 இல்லத்துக்கு உடைய கிரகம், ஆட்சி அல்லது உச்சம் பெற்று பலமாக நிற்க குருபகவான் 5-ம் அல்லது 10-ம் இல்லத்து அதிபதியாகி, கேந்திர
ஸ்தானத்தில் அமையப்பெறுவது அகண்ட சாம்ராஜ்ஜிய யோகம் ஆகும். இதனால் ஜாதகர் நீண்ட ஆயுள் பலம், செல்வச் செழிப்பு, புகழ்/செல்வாக்கு ஆகியவை அடையப்பெறுவர் என்பதாகும்.
சுனாபா யோகம்: ஒருவரின் ஜாதகத்தில் ஜனன இராசிக்கு 2-ம் இல்லத்தில் சூரியனைத் தவிர மற்ற கிரகங்கள் அயைப்பெறுவது சுனபாயோகம் ஆகும். இதனால் ஜாதகர் அறிவாற்றல், கல்வி, புகழ்,
சுயமுயற்சியால் முன்னேற்றம் ஆகியவை அடையப்பெறுவர் என்பதாகும்.
துருதுராயோகம்: ஒருவரின் ஜாதகத்தில் ஜனன இராசிக்கு 2-12-ம் இல்லத்தில் சூரியனைத் தவிர மற்ற கிரகங்கள் அமையப்பெறுவது துருதுராயோகம் ஆகும். இதனால், ஜாதகர் உயர்கல்வி பட்டம்,
உயர்பதவி வகித்தல், புகழ், செல்வச் செழிப்பு, மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கை ஆகியவை அடையப்பெறுவர் என்பதாகும்.
ஜோதிடர் -ஏ.கே அறுமுகம்

No comments:

Post a Comment