Search This Blog

Thursday, December 29, 2011

கன்னடத்தில் புழக்கத்தில் இருக்கும் தமிழ் சொற்கள்


தமிழில் இருந்து முதலில் பிரிந்த மொழி தெலுங்கு, பின்னர் முறையே, கன்னடம், மலையாளம்...
கன்னடத்தில் புழக்கத்தில் இருக்கும் தமிழ் சொற்கள்
-----------------------------------
தாய் - தாயி;
தந்தை - தந்தெ;
தம்பி - தம்ம;
அக்காள் - அக்கா;
தங்கை - தங்கெ;
மக்கள் - மக்களு (குழந்தைகள், தம்மில் தம்ம்க்கள் - திருக்குறள்);
மகவு - மகவுமகளிர் - மகளியர்;
அவள் - அவளு;
அவன் - அவனு;
யார் - யாரு;
யானை - ஆனே;
அங்கே - ஆகே;
இங்கே - ஈகே;
மேல் - மேல்கட;
கீழ் - கிளெகட;
நான் - நானு;
என் - நன்;
நி - நீனு;
அவர் - அவரு;
கை - கையி;
கால் - காலு;
செவி - கிவி;
வாய் - பாயி;
மூக்கு - மூக்கு;
கண் - கண்ணு;
விரல் - பெரலு;
நகம் - நக;
பல் - பல்லு;
ஓது - ஓது (படித்தல் - ஓதாமல் ஒரு நாளும் - ஒளவையார்);
கேள் - கேளு;
மனை - மனெ (வீடு);
போ - ஹோகு;
வா - பா;
பழம் - ஹன்னு (கனி - என்ற சொற்திரிபு);
உப்பு - உப்பு (திராவிட மொழிகளில் பொதுவானது உப்பு);
பார் - நோடு (நோட்டம் என்ற் சொற்திரிபு);
சின்ன - சன்ன;
முந்தைய - முந்திகெ;
இல்லை - இல்லெ;
இருக்கு - இதெ;
ஆகவில்லை - ஆகல்ல;
வந்த - பந்த;
பாடு - ஹாடு;
நல்ல - ஒள்ளெ;
மற்ற - மத்து;
என்று - எந்து;

மேலும் ஆயிரத்திக்கு அதிகமான தமிழ் திரிச்சொற்கள் கன்னடத்தில் புழங்குகின்றன.

ஒன்றுக்கு மேற்பட்டவைகளில் நாம் 'கள்' சேர்போம், அவர்கள் 'களு' சேர்பார்கள்

குதிரைகள் - குதிரெகளு
நாய் - நாயிகளு
பூனைகள் - பூனெகளு

ஒன்று - ஒந்து;
இரண்டு - இரடு;
மூன்று - மூனு;
நான்கு - நாலகு;
ஐந்து - ஐது;
ஆறு - ஆறு,
ஏழு - ஏழு;
எட்டு - எண்டு;
ஒன்பது - தொம்பது;
பத்து - ஹத்து,
பதினொன்று - பதவொந்து
இருபது - இரவைத்து,
முப்பது - மூவத்து,
நாற்பது - நாவத்து,
ஐம்பது - ஐவத்து,
அறுபது- அறுவத்து,
எழுபது - எப்பது,
என்பது - எம்பத்து,
தொன்னூறு - தொம்பத்து,
நூறு - நூறு;
ஆயிரம் - சாவிர.

No comments:

Post a Comment