Search This Blog

Friday, May 6, 2011

HOW TO WORSHIP GOD

கடவுளை எப்படி வணங்க வேண்டும்!!! HOW TO WORSHIP GOD ; சிகாகோ சொற்பொழிவு உரையின் பகுதி.(பேப்பர்-9 &10)

by Keyem Dharmalingam on Wednesday, 04 May 2011 at 15:20

கடவுளை எப்படி வணங்க வேண்டும்!!!  HOW TO WORSHIP GOD
சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு உரையின் பகுதி.(பேப்பர்-9),
செப்டம்பர்,19,1893. (தமிழாக்கம்) இதன் ஆங்கிலப் பதிப்பு குறும்படத் தொகுப்பு பதிவினைத் தனியாக காணவும்.

இம்மையிலும், மறுமையிலும் கிடைத்தற்கரிய செல்வமாக மனதில் கொண்டு, அன்புடன் அன்புக்காகவே அன்பு செய்ய வேண்டும் என்று வேதங்கள் வலியுறுத்துகின்றன. இப்பூமியில் இந்துக்களுக்கு கடவுளாக கருதப்படும், கிருஷ்ணராக அவதரித்த, அந்த இறைவன், இறைவனை வழி படுவது எவ்வாறு என்பதை வழிமுறைப் படுத்துகிறார் என்று பார்ப்போம். அவர் கூறுகிறார், மனிதன் இவ்வுலகில் ஒரு தாமரை இலையைப் போல வாழவேண்டும், அது தண்ணீரிலேயே வளர்ந்தாலும், தண்ணீரினால் நனைவதில்லையோ அதுபோலவே இவ்வுலகில் வாழவேண்டும் என்கின்றார். மனதை (ஆன்மாவை) இறைவனுக்கும், உடலை (சடத்தை) வாழ்க்கைக்கும் அர்பணிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்திக் கூறுகின்றார். இம்மையிலும், மறுமையிலும் நன்மை பெறவேண்டி இறைவனின்பால் அன்பு செலுத்துதல் நல்லதே. ஆயினும், இறைவனின் அன்பைப் பெற வேண்டி அவனின் பால் அன்பு செலுத்துதல் மிகவும் நல்லதாகும். "இறைவனே, நான் கல்வி வேண்டேன், செல்வம் வேண்டேன், மக்கட்செல்வமும் வேண்டேன், உனது எண்ணப்படியே எத்தனை பிறவி வேண்டுமானாலும் எடுக்கின்றேன், ஆனால் எவ்வித சுயநலமும் இன்றி, எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, உன்னையே மனதில் நினைத்து, உன் அன்பைப் பெற உன்பால் அன்பு செலுத்தும் வரம் மட்டும் தந்துவிடு " என்று ஒரு பிரார்த்தனை கூறுகின்றது.



கடவுளை எப்படி வணங்க வேண்டும்:-HOW TO WORSHIP GOD
சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு உரையின் பகுதி.(பேப்பர்-10),
செப்டம்பர்,19,1893. (தமிழாக்கம்) இதன் ஆங்கிலப் பதிப்பு குறும்படத் தொகுப்பு பதிவினைத் தனியாக காணவும்.

மகாபாரதத்திலிருந்து ஒரு எடுத்தக் காட்டு:-ஸ்ரீ கிருஷ்ணர் சீடர்களில் ஒருவர், பாரதத்தின் அன்றைய சக்ரவர்த்தியாக விளங்கிய யுதிஷ்டிரர், அவர் பகைவர்களால் நாட்டிலிருந்து விரட்டப்பட்டு, மனைவியுடன் இமயமலைக் காட்டில் வசிக்க நேர்ந்தது. ஒரு நாள் அரசி யுதிஷ்டிரரிடம் இறைவனிடம் மிகுந்த அன்பும், பக்க்தியையும் கொண்டு, அறத்தில் மிகவும் சிறந்து விளங்கும் உங்களுக்கும் ஏன் துன்பம் வரவேண்டும் என்று கேட்டார். அதற்கு யுதிஷ்டிரர், தேவி, இதோ இந்த இமயமலையைப் பார். எவ்வளவு அழகாக எழிலோடும், மாட்சிமையோடும், கம்பீரத்தோடும் காட்சி அளிக்கிறது. நான் இதனை நேசிக்கிறேன். இது எனக்கு ஒன்றும் தருவதில்லை. அழகும், கம்பீரமும் நிறைந்தவற்றில் உள்ளத்தைப் பறி கொடுப்பது எனது இயல்பு. அதனால் நான் அதனை விரும்புகின்றேன். அது போலவே, இறைவனை நான் நேசிக்கிறேன். அவரே, அனைத்து அழகிற்கும், கம்பீரத்திற்கும் மூலகாரணம். அன்பு செலுத்தப்பட வேண்டியவர் அவர் ஒருவரே! அவரை நேசிப்பது ஏன் இயல்பு. ஆதலால், அவரை நன் நேசிக்கிறேன். நான் எதுவும் அவரிடம் கேட்கவில்லை. அவர் விருப்பம் போல் என்னை எங்கு வேண்டுமானாலும் வைக்கட்டும். அன்புக்காகவே அவரிடம் நான் அன்பு செலுத்த வேண்டும். அன்பை விலைபேச என்னால் முடியாது. எவ்வித கைமாறும், பிரதிபலனும் எதிர்பார்க்காமல் இறைவனில் அருளைப்/அன்பைப்  பெறவேண்டி அன்பு செய்ய வேண்டும் என்பதனையே இது வலியுறுத்துகிறது.

No comments:

Post a Comment