Search This Blog

Tuesday, May 3, 2011

நபிகள் நாயகம் (ஸல்) பொன்மொழிகள்


  • சோதனைகளும் துன்பங்களும் எந்த அளவுக்குக் கடினமாக இருக்கின்றனவோ அதற்குப் பரிகாரமாக அந்த அளவுக்கு வெகுமதி கிடைக்கிறது. மேலும் எந்த அளவுக்கு சோதனைகள் நடக்கின்றனவோ அந்த அளவுக்கு இறைவனுடைய கருணையும் ஏற்படும்.
  • உதவி தேடுபவர்களும் பல்வீனர்களே! உதவி தேடப்படுபவர்களும் பலவீனர்களே!
  • அல்லாவின் கரம் நிரம்பியுள்ளது. வாரி வழங்குவதால் அது வற்றிப்போய் விடுவதில்லை. இரவும் பகலும் மழை மேகத்தைப் போல் அது தன் அருள் மழையைப் பொழிந்து கொண்டே இருக்கிறது. வானங்களையும் பூமியையும் அவன் படைத்தது முதல் அவன் வழங்கியவை அவனது கரத்தில் உள்ள செல்வத்தை வற்றச் செய்து விடவில்லை என்பதைப் பார்த்தீர்களா?
  • பிரார்த்தனையைத் தவிர வேறு எந்த செயலாலும் விதியை மாற்றிக் கொள்ள முடியாது. நற்செயல்களைத் தவிர எந்தச் செயலாலும் ஆயுளை நீடிக்கச் செய்ய முடியாது.
  • இறைவன் மனிதர்களுக்குச் சிறிதும் அநீதி இழைப்பதில்லை. ஆனால் மனிதர்கள்தான் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள்.
  • மனிதனை இறைவன் சோதிக்கும் போது அவனுக்கு நன்மையை வழங்கினால் நல்லவன் என்கிறான். அவனது வாழ்க்கை வசதிகளைக் குறைத்து விட்டால் இறைவன் தன்னை இழிவுபடுத்தி விட்டதாகக் கூறுகிறான்.
  • உங்கள் பெற்றோர், நெருங்கிய உறவினர்கள் யார் தவ்று செய்திருந்தாலும் நீதியின்பால் நில்லுங்கள். அவர்களுக்காகப் பிறரையும் நீதியிலிருந்து நழுவும்படி வலியுறுத்தாதீர்கள்.
  • உங்களுக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுமையுடன் சகித்துக் கொள்ளுங்கள். பிற மனிதர்கள் உங்களிடம் பேச வந்தால் முகத்தைத் திருப்பிக் கொள்ளாதீர்கள்.

No comments:

Post a Comment