Search This Blog

Friday, May 6, 2011

இறுதிதீர்ப்பு நாளில் ஆண்டவராகிய ஏசுகிறிஸ்துவின் முன்னாலோ அல்லாவின் முன்னாலோ நாம் நிறுத்தப்படப் போகிறோம் -இது உண்மையா ??

இறுதிதீர்ப்பு நாளில் ஆண்டவராகிய ஏசுகிறிஸ்துவின் முன்னாலோ அல்லாவின் முன்னாலோ நாம் நிறுத்தப்படப் போகிறோம் -இது உண்மையா ??

by Keyem Dharmalingam on Monday, 02 May 2011 at 08:24
அல்லாவின் முன்னால் மனிதன்நிற்பது உண்மையா?
 ஆன்மிகம், இந்து மதம், இஸ்லாம் மதம், கிறிஸ்த்துவ மதம், கேள்விகள் 1000
 நன்றி:- யோகி ஸ்ரீ ராமானந்த குரு.

  லகம் அழியப்போகிறது இறுதிதீர்ப்பு நாளில் ஆண்டவராகிய ஏசுகிறிஸ்துவின் முன்னாலோ அல்லாவின் முன்னாலோ நாம் நிறுத்தப்படப் போகிறோம் என முஸ்லிம்களும் கிறிஸ்த்தவர்களும் மாறிமாறி பேசிவருகிறார்கள்.  இது உண்மையா? இதைப்பற்றி இந்து மதம் என்ன சொல்கிறது என பலர் கேட்கிறார்கள் குர்-ஆனில் நயமான ஒரு விஷயம் சொல்லப்படுகிறது.  ஐந்து கடமைகளை நிறைவேற்றி அல்லாவினுடைய எண்ணப்படி வாழ்ந்து மரித்து போன ஒரு முஸ்லிம்முக்கு மண்ணறையாகிய  கல்லறை விரிந்து இடம் கொடுக்கும். குளிர்ந்த காற்று வீசும் நல்ல வெளிச்சம் கொடுக்கும்.  ஒரு புது மாப்பிள்ளை பள்ளியறை கட்டிலில் எப்படி சந்தோஷமாக உறங்குவானோ அதே போன்றே கல்லறைக்குள் உறங்குவான்.

 அல்லாவின் விருப்பத்திற்கு விரோதமாக நடப்பவனின் கல்லறை அவனை இறுக்கும்.  வெப்பம் சுட்டெரிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.  ஏறக்குறைய பைபிளும் இதே போன்று தான் பேசுகிறது. கல்லறையில் இருக்கும் உயிர்கள் உலக அழிவிற்கு பிறகு இறுதி தீர்ப்பு நாளில் கடவுள் முன்னால் கொண்டுவரப்படும். உயிர்களின் நல்லது கெட்டதிற்கிணங்க சொர்க்கமோ, நரகமோ கொடுக்கப்படும் என்று சொல்கிறார்கள். கடவுளே இல்லையென சொல்லுகின்ற நாத்திகவாதிகள் சொர்க்கம், நரகம் என்பதை ஏற்று கொள்ளுவது இல்லை. எரிகின்ற தீபம் அனைந்து விட்டால் எப்படி எல்லாம் முடிந்து விடுகிறதோ அதே போலவே மரணத்தோடு மனித வாழ்க்கை முடிந்து விடுகிறது என்கிறார்கள்.

  இறுதி தீர்ப்பு என்பதையும் மரணத்தோடு எல்லாம் முடிகிறது என்பதையும் இந்து மதம் ஏற்று கொள்வதில்லை.  ஒரு உயிரானது படிப்படியாக கீழ் நிலையிலிருந்து மேல் நிலைக்கு போகிறது.  அப்படி போகும் பாதையில் அது கணக்கற்ற ஜனன மரணங்களை சந்திக்கிறது.  அதாவது நாம் புதிதாக பிறப்பதும் இல்லை.  முதன் முறையாக சாவதும் இல்லை.  இதற்கு முன்னால் எத்தனையோ முறை பிறந்தும் இருக்கிறோம்.  இறந்தும் இருக்கிறோம். கடவுளை உணரும் வரை பிறப்பு இறப்பு சூழலில் சிக்கி தான் தீர வேண்டும். மற்ற மதங்கள் மனிதனை மனிதனாக மட்டும் தான் பார்க்கின்றன.  இந்து மதம் மனிதனை வெறும் மனிதனாக கருதுவதில்லை.  ஆண்டவனின் ஒரு அம்சமாக, ஆண்டவனின் சொரூபமாகவே பார்க்கிறது.  


இதற்கு மேல் சிந்திக்க மாட்டேன் என்ற நிலை வரும் போது நாத்திக கொள்கை கூட அறிவு பூர்வமானது தான். ஆனால் இந்த விஷயத்தில் இஸ்லாம் கிறிஸ்தவ சமய கொள்கைகள் அறிவு பூர்வமானது என்று சொல்லி விட முடியாது.  அல்லாவை ஏற்றவனுக்கு கல்லறை சுகமானது.  ஏற்காதவனுக்கு துக்கமானது என்றால் பிறந்து மூன்று வருடத்தில் அல்லாவையோ ஏசுவையோ ஏன் சிவபெருமானையே கூட யார் என்று தெரியாமல் தான் எதற்காக பிறந்தோம் என்று உணராமரல் செத்து போகும் குழந்தை இறுதி தீர்ப்பு நாள் வரை கல்லறைக்குள் எப்படியிருக்கும்? சுகமாகவா? சோகமாகவா? என்ற கேள்விகளுக்கெல்லாம் அந்த மதங்களில் எந்த பதிலும் இல்லை. அதனால் தான் இந்து மதம் இறுதி தீர்ப்பு நாள் என்று எதையும் சொல்லவில்லை என மறுப்பு சொல்லி மறுபிறப்பு கொள்கையை நம் முன்னால் வைக்கிறது.  மறுபிறப்பை நிறுபிக்க வலுவான ஆதாரங்கள் இல்லையே தவிர புணர் ஜென்மம் என்பதை அனுபவபூர்வமாக  நம்ப கூடியதாக இருக்கிறது. மறு பிறப்பிற்க்கு எப்படி ஆதாரம் இல்லையோ அதே போல இறுதி தீர்ப்பு நாளை நம்புவதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.

No comments:

Post a Comment