Search This Blog

Saturday, May 14, 2011

மனித நுரையீரலின் முக்கிய ஆதாரச் செல்லை கண்டுபிடித்து அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை



மனித நுரையீரலின் ஆதாரச் செல்லை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் நீண்ட கால நுரையீரல் நோய்களுக்கு தீர்வு காண்பதற்கான முக்கிய விடயங்கள் கிடைக்கும் என அவர்கள் நம்புகின்றனர்.
முந்தய ஆய்வுகளில் மனித கரு ஆதாரச் செல் மூலம் நுரையீரல் செல்லை உருவாக்க முடிந்தது. அறுவை சிகிச்சை மாதிரிகளை வளர்ச்சி அடைந்த மனித நுரையீரல் திசுக்களுடன் பயன்படுத்தும் போது கரு ஆதாரச் செல் மூலம் உருவான நுரையீரல் செல் தனித்த நிலையில் இருந்தது.
இந்த சூழ்நிலையில் விஞ்ஞானிகள் மேற்கொண்ட புதிய ஆராய்ச்சியில் உண்மையான மனித நுரையீரல் ஆதாரச் செல்லைக் கண்டுபிடித்துள்ளனர். இத்தகைய அரிய கண்டுபிடிப்பு மருத்துவத்திற்கான நியூ இங்கிலாந்து இதழில் வெளியாகி உள்ளது.
மனித நுரையீரல் ஆதாரச் செல் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் நீண்ட கால நுரையீரல் நோய்களுக்கு புதுவிதமான மருத்துவ சிகிச்சை அளிக்க முடியும் என ஆய்வினை மேற்கொண்ட குழுவில் உள்ள பியரோ அன்வெர்சா தெரிவித்தார்.
இவர் பிரகாமில் உள்ள மறு உற்பத்தி மருத்துவ மையத்தின் இயக்குனர் ஆவார். கண்டுபிடிக்கப்பட்ட செல் ஆதாரச் செல் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த ஆதாரச் செல் தானாக பாதிப்பை சரிசெய்து புதுப்பித்து கொள்ளும் தன்மை உடையதாக உள்ளது.
அமெரிக்காவில் இதய நோய், புற்றுநோய் பலியை தொடர்ந்து அதிக அளவில் உயரிக்கும் மூன்றாவது நோயாக நுரையீரல் நோய் உள்ளது.

No comments:

Post a Comment