Cultural variation in the meaning of emotions
Search This Blog
Tuesday, December 29, 2020
Does emotion terms have the same meaning across cultures?
Link Between Religious Fundamentalism And Brain Damage
A study published in the journal Neuropsychologia has shown that religious fundamentalism is, in part, the result of a functional impairment in a brain region known as the prefrontal cortex. The findings suggest that damage to particular areas of the prefrontal cortex indirectly promotes religious fundamentalism by diminishing cognitive flexibility and openness—a psychology term that describes a personality trait which involves dimensions like curiosity, creativity, and open-mindedness.
“We need to understand how distinct religious beliefs are from moral, legal, political, and economic beliefs in their representations in the brain, the nature of conversion from one belief system to another, the difference between belief and agency, and the nature of the depth of knowledge that individuals use to access and report their beliefs.” – Grafman
Julie Alexander
கிராமபோன் மனிதர்! இ.சந்தானகிருஷ்ணன்
போனோகிராஃப் (phonograph), அல்லது கிராமபோன் (gramophone) என்பது 1877 இல் ஒலியைப் பதிவு செய்யவும் கேட்கவும் தொமஸ் அல்வா எடிசன் கண்டுபிடித்த ஒரு கருவியாகும்.அது பேப்பர் பண்டல் இல்ல... எல்லாமே கிராமபோன் இசைத்தட்டுகள். தமிழ், ஆங்கிலம், மராத்தி, தெலுங்கு, துளுனு 30 ஆயிரத்துக்கு மேல இருக்கு..!’’ சிரிக்கிறார் இ.சந்தானகிருஷ்ணன். சென்னை திருநின்றவூரில் வசித்து வரும் இவர், செக்ரட்டேரியட்டில் ஜாயிண்ட் செக்ரட்டரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தன் வீட்டு மாடி அறையை முழுவதுமாக தன் சேகரிப்புக்காகவே ஒதுக்கியிருக்கிறார். கிராமபோன் ரெக்கார்ட்ஸ், கேசட்ஸ், பழைய சினிமா பத்திரிகைகள்... என அனைத்தையும் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறார்.‘‘பூர்வீகம் இதே ஊர்தான். மூணு வயசுல அப்பா தவறிட்டார். அம்மாதான் வளர்த்தாங்க. மூணாவது படிக்கிறப்பவே சினிமா பைத்தியமாகிட்டேன்! எங்களூர்ல அப்ப டூரிங் டாக்கீஸ் கிடையாது.வானொலில சினிமா பாட்டு வாரத்துக்கு ஒருமுறை வரும். இந்தச் சூழல்ல எங்க பக்கத்து வீட்டுக்காரர் எனக்கு தெய்வமா தெரிஞ்சார்! தினமும் கிராமபோன்ல சினிமா பாடல்களை ஓடவிடுவார். சத்தம் கேட்டதுமே அவர் வீட்டு திண்ணைல போய் உட்கார்ந்துப்பேன். அம்மாவுக்கு பயம் வர ஆரம்பிச்சது. இப்படியே போனா நான் கெட்டுடுவேன்னு என்னை வடசென்னைல இருந்த எங்க மாமா வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. அவர் ரொம்பவே கண்டிப்பானவர். எப்பவும் பாடப்புத்தகமும் கையுமா இருக்கணும். இல்லைனா தோலை உரிச்சுடுவார். திருநின்றவூர்ல இருந்தப்பவே சினிமா பாடல்களை விரும்பிக் கேட்பேன். அப்படியிருக்கிறப்ப வடசென்னை வந்த பிறகு சும்மா இருப்பேனா? மாமா வீட்டுக்கு எதிர்லயே டூரிங் டாக்கீஸ் இருந்தது. அங்கதான் தமிழ் சினிமாவின் முதல் பேசும் படம் வெளியாச்சு. போதாதா? சினிமா மோகமும் வந்தது...’’ என்று சொல்லும் சந்தானகிருஷ்ணன், இதன் பிறகே இந்தி, ஆங்கிலப் பாடல்களையும் கேட்க ஆரம்பித்திருக்கிறார். ‘‘மாமா வீட்டுக்குப் பக்கத்துல ஆங்கிலோ இந்தியர்கள் வசிச்சாங்க. அங்க என்னை மாதிரியே ஒரு பையன் ராக் அண்ட் ரோல் பாடலை கிராமபோன்ல கேட்பான்.
தினமும் அங்க போயிடுவேன். அதே மாதிரி ‘ஆவாரா’, ‘பர்சாத்’ இந்திப் படங்களை எல்லாம் டூரிங் டாக்கீஸ்ல திரையிடுவாங்க. ஒண்ணும் புரியாது. ஆனாலும் பாட்டுக்காகவே பார்ப்பேன். ஸ்கூல் முடிஞ்சதும் நேரா மார்க்கெட் போவேன். அது பழைய மார்க்கெட். ஒரு பெரிய கூடைல மொத்தமா ரெக்கார்ட்ஸை கொண்டு வந்து கடைகள்ல விநியோகம் செய்வாங்க. அதை வேடிக்கை பார்ப்பேன். அலுக்கவே அலுக்காது. இந்த பழைய மார்க்கெட் எரியற வரைக்கும் கிட்டத்தட்ட தினமும் அங்க போயிருக்கேன். புதுப்பிச்ச பிறகும் வேலைல இருந்து ஓய்வு பெறும் வரை மாலைல அங்க போயிடு வேன். கைல ஏதாவது ரெக்கார்ட் வாங்காம வீட்டுக்கு வந்ததே இல்ல! 1972 வரை கிராமபோன் ரெக்கார்ட்ஸ் புழக்கத்துல இருந்தது. அப்புறம் நிறுத்திட்டாங்க. ஆனா, எல்லா மாவட்டங்கள்லயும் புரோக்கர்ஸ் இருந்தாங்க. தூத்துக்குடி மணி, மதுரை பாலு, காரைக்குடி மகேஸ்வரன்னு பெரிய பட்டியலே உண்டு. அவங்க வழியா ரெக்கார்ட்ஸ் வாங்க ஆரம்பிச்சேன். வார இறுதியானா போதும்... ஏதாவது ஒரு மாவட்டத்துக்கு பஸ் ஏறிடுவேன். அங்க புரோக்கர்ஸ் எனக்காக கைல ரெக்கார்ட்ஸோட காத்திருப்பாங்க. தமிழ்ப் பாடல்களை இப்படி வாங்கினேன். இந்திப் பாடல்களை மும்பை, தில்லிக்கு பறந்தும்; தெலுங்குப் பாடல்களுக்கு ஆந்திரா போயும் வாங்குவேன்.
இப்படித்தான் ‘சுபோதயம்’ தெலுங்குப் பட ரெக்கார்ட் வாங்க திருப்பதி, விஜயவாடா, குண்டூர்னு அலைஞ்சேன். கே.வி.மகாதேவன் இசைல அந்தப் படத்துல எல்லா பாடல்களும் சூப்பரா இருக்கும். அதுவும் பி.சுசீலா பாடின ‘ஆசிந்த நீகேணடா...’வை நாளெல்லாம் கேட்டுக்கிட்டே இருக்கலாம். எங்க திரிஞ்சும் அந்தப் பட ரெக்கார்ட் கிடைக்கலை. ரொம்ப வெக்ஸ் ஆகிட்டேன். சரியா ஒரு மாசம் கழிச்சு பெங்களூர்ல இருந்து ராஜா என்கிற புரோக்கர் ஒரு பெட்டி நிறைய தெலுங்கு, கன்னட ரெக்கார்ட்ஸை கொண்டு வந்தார். அதை அப்படியே வாங்கி பிரிச்சுப் பார்க்காம வீட்ல வைச்சிருந்தேன்.
ஒரு மாசம் கழிச்சு பெட்டியைத் திறந்தா... முதல் கிராமபோன் ரெக்கார்டே ‘சுபோதயம்’! அந்த நொடில எனக்குள்ள பூத்த சந்தோஷத்துக்கு அளவே இல்ல! இப்படி நாம சின்சியரா தேடறது எதிர்பாராத வகைல கிடைக்கும்...’’ என்று சொல்லும் சந்தானகிருஷ்ணனிடம் திரைப்படப் பாடல்கள் தவிர பெருந்தலைவர்களின் பேச்சுக்கள் கொண்ட ரெக்கார்ட்ஸும் இருக்கின்றன. ‘‘மதன்மோகன் மாளவியா, ரவீந்திரநாத் தாகூர், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், மூதறிஞர் ராஜாஜி, ஜான் எஃப். கென்னடி... இப்படி பல தலைவர்களோட பதிவு செய்யப்பட்ட ரெக்கார்ட்ஸ் என் சேகரிப்புல இருக்கு.இதுல என்ன சிறப்புன்னா... அண்ணல் அம்பேத்கர் ஆர்கெஸ்ட்ரா அமைச்சுப் பாடின பாடல்கள், மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தியின் ஜாஸ் இசை, எம்.எஸ்.விஸ்வநாதனின் ஆல்பம், இரண்டாம் உலகப் போர் காலத்துல பிரெஞ்சு டெலிகிராஃபிஸ்ட் பதிவு செஞ்ச அப்போதைய இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பேச்சு, ஹிரோஷிமால வெடிகுண்டு போடப்பட்டதும் ஏற்பட்ட சத்தம், அடால்ஃப் ஹிட்லர் போரை அறிவிச்சு ஆற்றிய உரை... இப்படி பல பொக்கிஷங்கள் இருக்கு...’’ என்று கண்கள் விரிய விவரித்த சந்தானகிருஷ்ணன், தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தன் சேகரிப்பையும் விரிவுபடுத்தியுள்ளார்.
‘‘கேசட்ஸ், விசிஆர், டிவிடினு என் தேடலும் சேகரிப்பும் நிற்கவே இல்ல. மவுனப்பட காலத்துல வெளியான படங்கள்ல சிலதும் என் சேகரிப்புல இருக்கு. அதேமாதிரி சினிமா பத்திரிகைகள். இப்ப பழைய புகைப்படங்களையும் ஃபிலிம் ரீல்ஸையும் டிஜிட்டலைஸ் செய்துட்டு வரேன். என்னை மாதிரியே என் சின்ன பெண்ணுக்கும் இதுல ஆர்வமிருக்கு. அதனால எனக்கு அப்புறம் அவங்க இதைப் பார்த்துப்பாங்க. இப்பவே ஆய்வுக்காக பலரும் என்னைத் தேடி வர்றாங்க. ஒரு டிரஸ்ட் அமைச்சு இதை எல்லாம் வருங்கால சந்ததியினரும் பயன்படுத்தற மாதிரி செய்யணும்... பார்க்கலாம்என்கிறார் சந்தானகிருஷ்ணன். கும்குமம் இதழில் இருந்து பெறப்பட்டவை .http://kungumam.co.in/
பைத்தியக்காரர்கள். கே. சச்சிதானந்தனின் கவிதை
பைத்தியக்காரர்களுக்கு
ஜாதியோ, மதமோ இல்லை.பைத்தியக்காரிகளுக்கும்.
அவர்களுக்கு பாதகமல்ல.
அவர்கள் முன்முடிவுகளுக்கு
அப்பாற்பட்டவர்கள்.
அவர்களின் பரிசுத்தம்
நம்மால் அங்கீகரிக்கப்படுவதில்லை.
அவர்களின் சிநேகம் நிலவைப் போன்றது,
பௌர்ணமியன்று அது உருகி வழிகிறது.
அவர்கள் காண்பது நாம்
கேட்டேயறியாத தேவதைகளின் மொழியைத்தான்.
அவர்கள் சிலிர்ப்பதாய் நாம் நினைப்பது
சூன்யமான சிறகுகள் உதிரும்போதுதான்.
வெட்டுக்கிளியின் தேவன் பச்சை நிறத்தில்
நீண்ட கால்களுடன் குதித்து
நடக்கிறான் என்றும் கருதுகிறார்கள்.
குருதி கொட்டுவதைக் காண்கிறார்கள்.
சிலசமயம் தெருவில் நின்று
சிங்கங்கள் கர்ஜிப்பதைக் காண்கிறார்கள்.
சிலசமயம் பூனையின் கண்களில்
சொர்க்கம் ஜொலிப்பதைக் காண்கிறார்கள்.
இந்த விஷயங்களில் அவர்களும் நம்மைப் போலத்தான்.
அவர்களால் மட்டுமே கேட்க இயலும்.
அவர்கள் சூன்யத்தில் விரல் அசைக்கும்போது
நடுக்கடலிலே சுழற் காற்றினை
தன் வயப்படுத்துவது போலவும்,
கால் அழுத்தி உதைக்கும் போது
ஜப்பானின் எரிமலையை வெடித்துச்
சிதறாமல் காப்பது போலவும்,
நினைக்கிறார்கள்.
நம்முடைய ஒரு நூற்றாண்டு
அவர்களுக்கு ஒரு நொடி மட்டுமே.
இருபது நொடி போதும்,
அவர்கள் கிறிஸ்துவைச் சென்றடைய.
ஆறு நொடிதான்
புத்தனுக்குச் செல்ல.
ஒரு பகல் போதும்
வெடித்துச் சிதறிய
ஆதித்துகள்களை உணர.
அவர்கள் எங்கேயும் இருக்க முடியாமல்
நடந்து கொண்டேயிருக்கிறார்கள்.
பைத்தியங்கள் அல்ல,
நம்மைப் போல.
தென்றல் உறங்கிய போதும்
படம்: பெற்ற மகனை விற்ற அன்னை
பாடியவர்கள்: AM ராஜா, P சுசீலா
பாடலாசிரியர்: மருதக்காசி
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
தோன்றும் நிலவை போலவே
நிலவை போலவே
நீயும் வந்த போதிலே
வந்த போதிலே
பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல்
இன்பம் மலருமா
பாசம் வளருமா
ஆசை தீர கொஞ்சிடாமல்
இன்பம் மலருமா
அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
இன்ப கனவு கோடியே
கனவு கோடியே
ஊஞ்சல் ஆடும் போதிலே
ஆடும் போதிலே
பாட மயங்குமா
வாச பூவும் தேனும் போல
வாழத் தயங்குமா
பாட மயங்குமா
வாச பூவும் தேனும் போல
வாழத் தயங்குமா
அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா
நடிகை சௌந்தர்யா Dweepa (Kannada: The Island)
நடிகை சௌந்தர்யா 1992ஆம் ஆண்டு தமிழ்ப்படமான பொன்னுமணி திரைப்படம் மூலமாகத்தான் அறிமுகம் ஆகிறார்.இவருக்கு ஜோடியாக கார்த்திக்.இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் .படமும் Super hit.அதன்பிறகு தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் busy ஆனார்.
2002ஆம் ஆண்டு Dweepa எனும் கன்னடப் படத்தை தயாரித்து நடிக்கிறார்.படம் பல உலகத்திரைப்பட விழாக்களில் கலந்து கொள்கிறது.இரண்டு தேசிய விருதுகளைப் பெறுகிறது.நான்கு மாநில விருதுகளைப் பெறுகிறது.
Dweepa (Kannada: The Island) is a 2002 Indian Kannada
language film by Girish Kasaravalli, based on the novel of the same name by Na
D'Souza, and starring Soundarya and Avinash in lead roles. Dweepa deals with
the raging issue of building dams and the displacement of natives.it won 2
National Film Awards, 4 Karnataka State Film Awards & 3 Filmfare Awards
South.
கே.பாலசந்தர்
கைலாசம் பாலச்சந்தர் (K. Balachander, கே. பாலச்சந்தர், சூலை 9, 1930 - திசம்பர் 23 , 2014) தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். கே. பாலசந்தர் எனப் பொதுவாக அழைக்கப்படும் இவர், மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். திரைத்துறையில் 1965ம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி இவரது முதல் இயக்கமாகும். நாகேஷ், இதில் கதாநாயகனாக நடித்தார் [1]. இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவையே கருப்பொருளாய் விளங்கின. அபூர்வ ராகங்கள், புன்னகை மன்னன், எதிர் நீச்சல், வறுமையின் நிறம் சிகப்பு, உன்னால் முடியும் தம்பி முதலியன இவர் இயக்கிய சிறந்த படங்களில் சிலவாகும். தமிழ்த் திரையுலகின் முக்கிய நடிகர்களான கமல் ஹாசன் மற்றும் ரஜினி காந்தை அறிமுகம் செய்தவர். 90களுக்குப் பிறகு கையளவு மனசு போன்ற பெரும் வரவேற்பைப் பெற்ற தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கினார்.
Kulashekar T
கலாநிதி பரஞ்சோதி ஜெயக்குமார் (Arch T. Colwell Cooperative Engineering Medal)
அமெரிக்க இராணுவத்தின் மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானியாகப் பணியாற்றும், கலாநிதி பரஞ்சோதி ஜெயக்குமார் என்ற இலங்கைத் தமிழர், பொறியியல்துறையில் மதிப்புமிக்க உலகளாவிய விருதுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க இராணுவத்தின் டாங்கிகள் வடிவமைப்பு ஆராய்ச்சி, அபிவிருத்தி மற்றும் பொறியியல் நிலையத்தில், மூத்த விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறார் கலாநிதி பரஞ்சோதி ஜெயக்குமார்.
Monday, December 14, 2020
Indus Valley Civilization and consumption of milk, meat of animals
The Indus Valley Civilization (IVC) was a Bronze Age civilization in the northwestern regions of South Asia, lasting from 3300 BCE to 1300 BCE, and in its mature form from 2600 BCE to 1900 BCE.
"An analysis of ceramic lipid residues from rural and urban sites of the Indus Civilization in northwest India provides chemical evidence for milk, meat of animals like pigs, cattle, buffalo, sheep and goat, and possible mixtures of products and/or plant consumption."
Sunday, December 13, 2020
Kim Ki-Duk South Korean Director. கிம் கி-டக் உலகின் மிகச் சிறந்த சினிமா இயக்குநர்
2000-ம் ஆண்டு கிம் இயக்கிய த இஸ்லே படம் 2001-ம் ஆண்டு டோரென்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அப்போது, கிம் படங்கள் உலக அளவில் கவனத்தை ஈர்க்கத் தொடங்கின. 2017-ம் ஆண்டு கிம் மீது அவருடைய படத்தில் நடித்த நடிகை ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார். அது மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தநிலையில், கடந்த மாதம் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லட்வியாவுக்குச் சென்றார். அங்கே சென்ற அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.