|
Search This Blog
Wednesday, November 8, 2017
Corona Discharge vs. UV Ozone Generation
நீலக் குறிஞ்சி
மலையெல்லாம் நீலக்குறிஞ்சிகள்
பூத்த வருடம் நான் பிறந்ததாக
பாட்டி சொன்னாள்
...
இளமை தளிர் கொண்ட காலத்தில்
மலைவெளியில் அப்பூக்கள்
மீண்டும் பூத்தபோது மழையின் நிறம் நீலம்
எனக் கண்டுணர்ந்தேன்
மலைவெளியில் அப்பூக்கள்
மீண்டும் பூத்தபோது மழையின் நிறம் நீலம்
எனக் கண்டுணர்ந்தேன்
குறிச்சிப் பூக்களின் நீலவெளிச்சம்
தொடுவானில் பிரதிபலிப்பதை தரிசிக்கையில்
காத்திருப்பின் கனியும் அந்நிறத்தில்
தான் இருந்தது
தொடுவானில் பிரதிபலிப்பதை தரிசிக்கையில்
காத்திருப்பின் கனியும் அந்நிறத்தில்
தான் இருந்தது
கித்தார் மரத்துப் பூக்களின் வாசனை
கண்டடையாத காதலனின் உருவத்தை
ஆழ் மனதில் வரையத் துவங்கியது
கண்டடையாத காதலனின் உருவத்தை
ஆழ் மனதில் வரையத் துவங்கியது
வரையாடுகளின் சினைப்பருவ காலத்தை
வனாந்தரம் மறைத்து வைப்பது போலவே
தளிருடலை மறைத்து வைக்கத் துவங்கினேன்
வனாந்தரம் மறைத்து வைப்பது போலவே
தளிருடலை மறைத்து வைக்கத் துவங்கினேன்
நீர்க் கடம்ப மரத்தின் தாகத்தை
சிற்றோடைகள் அறியும் சமயம்
வேர்கள் சர்ப்பநடனமிடும்
காட்டுவாசியின் இசை
வெறுமையின் துல்லிய உண்டியலில்
சேர்க்கப்படுவதை அறிவேன்
சிற்றோடைகள் அறியும் சமயம்
வேர்கள் சர்ப்பநடனமிடும்
காட்டுவாசியின் இசை
வெறுமையின் துல்லிய உண்டியலில்
சேர்க்கப்படுவதை அறிவேன்
பூம்பாறைப் பூக்களின் ஆகிருதியை
தாங்கயியலாது மனம்
பனிப் பாறைகளில் சறுக்கும்
தாங்கயியலாது மனம்
பனிப் பாறைகளில் சறுக்கும்
காத்திருப்பு தனிமையில் இடறுவது
பள்ளத்தாக்கிலிருந்து குறிஞ்சிப் பூஞ்சருகுகள் வீழ்வது
பள்ளத்தாக்கிலிருந்து குறிஞ்சிப் பூஞ்சருகுகள் வீழ்வது
நீலத்தின் நிவறுதல் நிலைமொழியாய்
வானத்திற்கு ஏகியதும் இங்ஙனமே
வானத்திற்கு ஏகியதும் இங்ஙனமே
காட்டில்தான் நீலக்குறிஞ்சி பூக்கும்
காத்திருந்து காதலனோடு தரிசிக்கவும்
நாம் இங்கிருந்து வாழ்ந்து போன பிறகும்
காத்திருந்து காதலனோடு தரிசிக்கவும்
நாம் இங்கிருந்து வாழ்ந்து போன பிறகும்
Composed By - Thenmozhi Das
தன்னிறைவான சூழலியல் கூட்டு வாழ்வு (Eco Village)
திட்டம் தொடர்பான சில குறிப்புகள்.
முதலில் குறிப்புகளை வாசியுங்கள். உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள். ஆர்வமுள்ளவர்களை ஒன்றாக இணைத்து குழுவாக உரையாடுவோம். அங்கிருந்து எவ்வாறு செயற்பாட்டை நோக்கிச் செல்வது என்பதை ஆராய்வோம்.
Eco-villages, future of rural India
The sustainable village project has not got off to a good start in the country. This is primarily because of a lack of focus at Government levels and the faulty implementation of rural employment guarantee schemes
India’s population of 1.27 billion has put unimaginable stress on the available resources. The urban areas have emerged as the epicentre of the problem where intense population pressure meets dwindling resources. People migrating from rural India to the cities has made the situation worse. Drying farm incomes and paucity of employment opportunities amid a gloomy rural economy have triggered a distress migration that is unprecedented in India’s history. For instance, nearly half the people in States like Tamil Nadu already live in urban settlements.
Deteriorating environment and unpredictable weather conditions have induced an agrarian crisis resulting in the collapse of livelihoods. Once the drivers of the rural economy, the farmers are finding themselves at the mercy of insurmountable debts, leading to painful instances of farmer suicides. Measures such as the multi-billion dollar jobs guarantee scheme have checked the migration of workers from villages to cities to some extent, but they have also drawn the rural population away from the principal occupation of agriculture. This is not in the long-term interests of rural India.
Being employed in non-permanent and non-core activities under employment guarantee schemes does not augur well for the rural scenario, as neither the village economies are strengthened nor any long-term positive contribution is made towards conserving the environment. For instance, the workers employed under the rural employment guarantee scheme projects are engaged in digging ponds for retaining water, which evaporates fast and renders the effort purposeless in the end. These schemes may not be sufficient to arrest the downward spiral of the rural economy. A serious effort is required to rejuvenate rural India and make it self-reliant and resourceful.
Villages have the best environment that is pollution-free and access to sufficient natural resources that are not contaminated. These are excellent building blocks in the process of creating ‘Eco-villages’. The concept of Eco-villages can help revitalise rural India by transforming the nearly 7,00,000 villages into efficient and manageable communities with a goal to become economically and ecologically sustainable human inhabitations.
This initiative would also strengthen the resolve of the community to undertake initiatives that are in the best interests of the environment — for example, seek alternatives to ecologically destructive electrical, water, transportation, and waste-treatment systems, as well as the larger social systems that mirror and support them.
The Eco-villages can be powered by renewable energy such as biomass and solar power. This helps the villages to be self-powered and be independent of external grids. For instance, village Freiamt in Germany, with 4,300 inhabitants, is an Eco-village that uses all forms of renewable energy including a biogas plant, solar power, wind and water energy to produce about 14 million kWh energy annually — about 3 million kWh more than that is needed.
In early 2013, India too saw an enthusiastic response to the concept of Eco-villages, with as many as 753-gram panchayats from Pune district signing up for the Eco-village scheme, launched by the Government. The scheme for the rural areas aimed at conserving the environment, besides encouraging the use of solar power. However, the evolution curve for the concept seems to be taking forever, with no new notable development happening since 2013. The absence of a determined approach is evident from that fact that, instead of setting ambitious goals of achieving energy-sufficiency and self-reliance from overland power grids, the villages enrolled in the Eco-village scheme stuck to clichéd activities of tree plantation and building drainage systems. Elsewhere in the world, the concept of Eco-village has made tremendous progress, and countries such as Germany have proved the potential of such villages.
For instance, Wildpoldsried, a municipality in the district of Oberallgäu in Bavaria, has a population of only 3,000 inhabitants. But Wildpoldsried produces 321 per cent more energy than it needs — and it is generating 4.0 million Euro (the US $5.7 million) in annual revenue by selling it back to the national grid. As a result of its success, Wildpoldsried has received numerous national and international awards for its conservation and renewable energy initiatives known as Klimaschutz (climate protection).
The UPA Government had excessively concentrated on employment guarantee schemes such as the Mahatama Gandhi National Rural Employment Guarantee scheme, as a possible strategy to increase its vote-share. In the process, it completely eroded the very essence and fabric of the Indian village system and its economy. The NDA regime must recover the situation. This can be possible only if villages are transformed into true Eco-villages that are ecologically secure, economically stronger and socially integrated.

குழந்தைகள் பராமரிப்பு
....ஒவ்வொரு குடும்பத்திலும் அம்மா அப்பா என இருவரும் சேர்ந்தால் இக் குழந்தைகளைப் பராமறிக்க இருநூறு பேர் வேலை செய்கின்றார்கள். அல்லது ஆகக் குறைந்தது நூறு பெண்களாவது முழுநேரமாக வேலை செய்கின்றார்கள். இது அவசியமற்றது. இதற்கு மாறாக குழந்தை வளர்ப்பில் விருப்பம் ஆர்வம் ஆற்றல் மற்றும் அறிவுள்ளவர்கள் இப் பொறுப்பினை எடுக்கலாம். இதற்கு ஆகக் குறைந்தது இருபதிலிருந்து முப்பது பேர்வரை போதும். அல்லது ஆகக் கூடியது ஐம்பது பேர் இருந்தாலும் போதும். இதன்மூலம் பல பெண்களை குழந்தை பராமரிப்பிலிருந்து விடுவித்து அவர்களுக்கு ஆர்வமான துறைகளில் முன்னேற ஊக்குவிக்கலாம். மேலும் பல குழந்தைகள் தாய் தந்தையை இழந்தமையினாலோ அல்லது வறுமையினாலோ சிறுவர் இல்லங்களிலும் அநாதைகளா வாழ்கின்றார்கள். இவர்களை இதற்குள் உள்வாங்கி பல பெற்றோர்களுடன் வாழும் சூழலை உருவாக்குவது. இதன் மூலம் எனது குழந்தை என்ற பற்றிலிருந்து நமது குழந்தைகள் என்ற பற்றை உருவாக்கும் செயற்பாட்டிற்கும் இது வழிவகுக்கலாம்......
முதியவர்கள் பராமரிப்பு
இன்றைய புலம் மற்றும் புலம் பெயர்ந்த சூழல்களைக் கவனத்தில் கொண்டால் பெரும்பாலான முதியவர்கள் தனிமையில் எந்தவிதமான உதவிகளுமின்றி கைவிடப்பட்டுள்ளார்கள். தனிமை அவர்களை வாட்டுகின்றது. அவர்களது விருப்பங்கள் நிறைவேற்றப்படுவதில்லை. அவர்களுடன் உரையாட, அவர்கள் கதைப்பதைக் கேட்க ஒருவருமில்லை. ஏக்கத்தில் தவிக்கின்றனர். இவர்களை உழைப்பிற்காகப் பராமரிப்பவர்களோ கடமைக்காக இயந்திரத்தனமாகவே செயற்படுகின்றார்கள். மேலும் சில முதியவர்கள் தமது பேரப்பபிள்ளைகளைப் பார்ப்பதற்காக கட்டாயப்படுத்தப்படுகின்றார்கள். சுரண்டப்படுகின்றார்கள். துன்புறுத்தப்படுகின்றார்கள். இவர்களைப் பராமரிப்பது நம் ஒவ்வொருவரதும் பொறுப்பு. ஆனால் இன்றைய இயந்திர சூழலும் தனிக் குடும்ப கட்டமைப்புகளாலும் இதனை செய்யமுடியாத கையறு நிலையிலும் பலர் இருக்கின்றனர். ஆகவே கம்யூன் அல்லது சூழலியல் கிராமத் திட்டமானது இவர்களைப் பராமரிக்கும் பொறுப்பை எடுக்கும். இந்த வேலையில் அக்கறையும் ஆர்வமும் உள்ளவர்களிடம் அப் பொறுப்பை ஒப்படைக்கலாம். முதியவர்கள் தமது இளமைக் காலங்களை முழுவதையும் நமக்காகவும் சமூக வளர்ச்சிக்காவும் அர்ப்பணித்தவர்கள் இப்பொழுது தங்கி வாழ்பவர்கள் என்ற புரிதலிலும் அவர்களைப் பொறுப்பெடுத்து மரணம் வரை நன்றாக ஆனந்தமாக வாழ்வதை உறுதி செய்வது நமது பொறுப்பாகும். இந்த நூறு குடும்பங்களிலும் இருக்கின்ற முதியவர்களை தனித்தனியவோ அல்லது அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஜோடியாகவோ குழுவாகவோ வாழ ஒழுங்கு செய்யலாம். இது இவர்களின் தெரிவாக இருந்தபோதும் இவர்களுக்கு இடையில் புதிய உறவுகளை உருவாகுவதை ஊக்குவிக்க வேண்டும். இன்று நம் பெற்றோர்கள் முதியவர்கள். நாளை நாம் முதியவர்கள் என்ற சிந்தனை பிரக்ஞை மட்டுமே இருந்தால் போதும் இதனை செயற்படுத்தலாம்.
சமையல்
ஒரு குடும்பத்திற்கு ஒருவர் வீதம் நூறு குடும்பங்களிலும் நூறு பேர் சமையல் வேலையில் ஈடுபடுகின்றார்கள். இவ்வாறு ஈடுபடுகின்ற அனைவருக்கும் சமையலில் விருப்பம் இருக்கும் என்பதில்லை. பெரும்பான்மையானர்வகள் இது தமக்கு சுமத்தப்பட்ட சுமை கடமை என உணர்ந்தே செய்கின்றார்கள். இதனால் இதில் ஈடுபடுகின்ற பெரும்பாலான பெண்கள் தமது பிற விருப்பங்களை நிறைவேற்ற முடியாதவர்களாக இருக்கின்றர். ஒரு குடும்பத்தில் குறைந்தது நான்கு அங்கத்தவர்கள் என்ற கணக்குப்படி நூறு குடும்பங்களிலுள்ள நானூறு அல்லது ஐநூறு பேர்களுக்கு வெறுமனே இருத்தைந்து பேர்கள் சமைத்தாலே போதுமானது. அதுவும் சமையலில் ஆர்வமுள்ள ஆண்கள் பெண்களை இணைத்தே இச் செயற்பாட்டை செய்யலாம். இவ்வாறு செய்வதனுடாக இதிலிருந்தும் 75 வீதமான பெண்களை விடுவித்து தமக்கு விருப்பமான துறைகளில் தமது ஆற்றல்களைப் பயன்படுத்த ஊக்குவிக்கலாம். அல்லது அதற்கான வாய்ப்புகளை உருவாக்கலாம்.....
http://www.dailypioneer.com/columnists/oped/eco-villages-future-of-rural-india.html
Tuesday, November 7, 2017
யாழ்.வல்வையிலிருந்து அமெரிக்கா சென்ற வேப்பமரத்தினாலான கப்பல் (1938)
யாழ்.வல்வையிலிருந்து வேப்பமரத்தினாலான கப்பல் ஒன்று அமெரிக்காவுக்கு
யாழ்.தமிழர்கள் கொண்டு சென்றார்கள்
என்றால் நம்பமுடிகிறதா...?
யாழ்.தமிழர்கள் கொண்டு சென்றார்கள்
என்றால் நம்பமுடிகிறதா...?
கோடிக்கணக்கில் உருவான ...
டைடானிக்கே பாதித்தூரத்தில்
மூழ்கியதேன்றால்
ஈழத்தமிழன் உருவாக்கிய பாய்மரமான அன்னபூரண கப்பல் புயலுக்கும்,மழைக்கும் தப்பி அமெரிக்கா
சென்றதேன்றால் தமிழனின் சாதனை
எத்தகையது
டைடானிக்கே பாதித்தூரத்தில்
மூழ்கியதேன்றால்
ஈழத்தமிழன் உருவாக்கிய பாய்மரமான அன்னபூரண கப்பல் புயலுக்கும்,மழைக்கும் தப்பி அமெரிக்கா
சென்றதேன்றால் தமிழனின் சாதனை
எத்தகையது
அன்னபூரணி அம்மாளின் அமெரிக்கப்பயணம் - 1938
வல்வெட்டித்துறையில் உள்ள மேற்குத்தெரு வாடியில் வைத்து, 1930ஆம் ஆண்டில்> சுந்தரம் மேத்திரியாரினால் உள்ளுர் வேப்ப மரத்தில் தயாரிக்கப்பட்ட “அன்னபூரணி அம்மாள்” என்ற பெயரி லான இரட்டைப்பாய்மரக் கப்பல் 89 அடி நீளமும், 19 அடி அகலமும் கொண்ட ஒரு பாரிய கப்பலாக அந்த நாட்களில் விளங்கியது.
அன்னபூரணி என்பது இமயமலையில் அமைந்திருக்கும் மலைச்சிகரங்களில் ஒன்றாகும். இன்றைய நேபாளத்தின் எல்லைக்குட்பட்ட இதன்உயரம் 26504 அடிகளாகும். அத்துடன் அள்ளஅள்ளக் குறையாத அமுதசுரபி கொண்ட தெய்வமாக இந்துக்களால் ஆராதிக்கப்படும் பெண் தெய்வத்தின் பெயரும் அன்னபூரணியாகும். இப்பெயரே அன்னபூரணிஅம்மாளின் சுட்டுப் பெயராக பல இடங்களிலும் பயன்படுத்தப்படுகின்றது.
1936 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வல்வெட்டித்துறைக்கு வருகை தந்திருந்த அமெரி;க்கரான பிரபலகடலோடியான அமெரிக்கரான றொபின்சன் “Florence C. Robinson” அன்னபூரணியின்; அழகால் கவரப்பட்டவராக அதனை வாங்கிக் கொண்டு அமெரிக்காவுக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்று விரும்பினார். அதனைக் கொள்வனவு செய்ததும்,அன்னபூரணி அம்மாள் என்ற பெயரில் உள்ள அந்தக் கப்பலை “Florence.C.Robinson” என்ற தனது மனைவி யின் பெயருக்கு மாற்றியபின்னரே அமெரிக்காவுக்குக் கொண்டு சென்றார். வல்வெட்டித்துறை மாலுமிகளின் உதவியுடன் கொந்தளிக்கும் இராட்சச அலைகளையும் கடந்து சுயஸ் கால்வாயி னூடாக அமெரிக்காவின் போஸ்ரன் துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட சாதனை இன்றும் உலகளாவிய ரீதியில் பேசப்படு கின்றது.
சூயெஸ் கால்வாயினூடாக மத்தியதரைக் கடலில் பயணம் செய்த போது, ஏற்பட்ட புயலில் சிக்கிய கப்பல் 250 கடல்மைலகள் பின்புறமாக பெய்ரூத் வரை அடித்துச் செல்லப்பட்டது. இவ்வாறு பல்லாயிரக்கணக்கான மைல்களையும்> பல கடல்களையும் கடந்து சென்ற இத்துணிகர கடற்பயணம் 1938 ஆம் ஆண்டு ஓகஸ்ற் மாதம் முதலாம் திகதி அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் (Massachusetts) மாநிலத்தில் உள்ள குளோசெஸ்ரர் (Gloucester) துறைமுகத்தில் நிறைவடைந்தது.
தெற்காசிய நாடொன்றில் உள்ள சின்னஞ்சிறிய தீவான இலங்கை யில் உள்ள வல்வெட்டித்துறையில் கட்டப்பட்டு காற்றின் துணை யுடன் இயங்கும் கப்பலொன்று> இந்து சமுத்திரத்தைக் கடந்து ஐரோப்பாவின் ஊடாக மத்திய தரைக் கடலையும் கடந்து> அத்திலாந்திக் சமுத்திரத்தின் ஊடாக> அமெரிக்காவின் குளோசெஸ்ரர் துறைமுகம் வரை பயணம் செய்தது> உலக வரலாற்றில் இதுதான் முதல் தடவையும் கடைசித் தடவையு மாகும். இச்சாதனை நிறைந்த கடற்பயணத்தில், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தண்டையல் கனகரத்தினம் தம்பிப்பிள்ளை (48வயது) அவர்களின் தலைமையில், திரு.பூரணவேலுப்பிள்ளை சுப்பிரமணியம் (29 வயது), திரு.தாமோதரம்பி;ளளை சபாரத்தினம் (28வயது) திரு.சின்னத்தம்பி சிதம்பரப்பிள்ளை, (28 வயது)) திரு.ஐயாத்துரை இரத்தினசாமி(24 வயது) ஆகிய ஐந்து கடலோடிககளும் பயணத்தின் இறுதி இலக்கு வரை பங்கேற்றிருந்தனர். அமெரிக்காவின் தலைநகரான வாசிங்டன் நகருக்கு அண்மையில் உள்ள பால்ரிமோர் என்ற துறைமுகத்தில் தரித்து நின்றபொழுது எடுக்கப்பட்ட படத்தை அது தொடர்பான கட்டுரையுடன், பால்ரிமோரில் இருந்து வெளிவரும்> “Baltimore Sun” என்ற செய்தித்தாள் பிரசுரித்திருந்தது. அன்னபூரணி அம்மாள்> கப்பலை அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லும் பொழுது கப்டன் மக்குயிஸ் என்பவரின் தலைமையில், வல்வெட்டித்துறை மாலுமி களின் உதவியுடன் பயணம் செய்து குளோசெஸ்டர் துறை முகத்தைச் சென்றடைந்தது. அன்று குளோசெஸ்டர நகரில் இருந்து வெளியிடப்பட்ட ஊடகங்கள் பிரசுரித்த கருத்துக்கள் மிகச் சிறந்த சான்றுகளாகவும், ஆதாரங்களாகவும் விளங்கின.

அன்னபூரணி அம்மாளின் இந்த திகில் நிறைந்த பயணம் பற்றிய இலக்கியங்கள் நூல்களாகவும்> பத்திரிகைகள்> சஞ்சிகைகளில் கட்டுரைகளாகவும் வெளிவந்துள்ளமை அதன் சிறப்பைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது. இச்சாதனைப் பயணம்பற்றிய விபரங்கள் 02 ஓகஸ்ட் 1938 வெளிவந்த The Boston Globe பத்திரிகையில் Voyage Ended By Brigantine . Barrows என்பவரால் விவரிக்கப் பட்டிருந்தது. மற்றும் அன்றையநாளில் வெளிவந்த மற்றாரு தினசரியான 02.08.1938 அன்று வெளியிடப்பட்ட Gloucester Time பத்திரிகையில் Ceylon Brige Arrives After Long Voyage எனவும் மேற்படி அன்னபூரணி யின் நீண்ட கடற்பயணம் அதன் முன்பக்க செய்தியாக வெளிவந்த ருந்தது. அதில் குறிப்பிடப்பட்ட பின்வரும் செய்திக் குறிப்பினூடாக தமிழர்களின் கடல் ஆளுமைகளை பற்றி மேற்கத்தைய நாட்டவர்க ளின் உள்ளக் கிடக்கையையும் கருத்தையும் அறிய முடிகின்றது.
“வல்வெட்டித்துறையில் கட்டப்பட்ட ஒன்பது பாய்களையும் விரித்தபடி> கம்பீரமாக ஆடிஆடிப் பயணம் செய்து கொண்டிருந்த கப்பல் ஒன்று> அத்திலாந்திக் சமுத்திரத்தையும் கடந்து அமெரிக்கக் கிழக்குக் கரையை அடைந்ததோர் நீண்ட கடல் பயணம் பற்றிய உண்மைக் கதை. இத்தகைய கப்பல்கள்> வல்வெட்டித்துறையிலும் அதனை அடு;த்துள்ள பருத்தித்துறையிலும் கட்டப்பட்டு வல்வெட்டித்துறைக் கடலோடிகளால்> செலுத்தப்பட்டன. இவை தமிழ் நாட்டில் பணம் படைத்த செட்டிமாருக்காகவும்> வல்வெட்டித்துறையை வதிவடமாகக் கொண்ட செட்டிமாருக்காகவும்> வல்வெட்டித்துறை வணிகர்களுக்காகவும் இலங்கை வடக்கில் உள்ள வல்வெட்டித்துறை> பருத்தித்துறை மேஸ்திரிமார்களால் கட்டப்பட்டவை.”
அன்னபூரணி அம்மாளுடன் அமெரிக்கா சென்றடைந்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மாலுமிகள் அங்கிருந்து திரும்பும்போது தம்முடன் எடுத்துவந்த இருபத்திரிகைக் குறிப்புகளே மேற்கண்டவையாகும்.
அமெரிக்கா சென்ற மூன்றாவது மாதத்தில் அன்னபூரணி 22 நவம்பர் 1938 இல் தென்பசிபிக் (South Pacific) சமுத்திரத்தில் உள்ள Tahiti தீவைநோக்கி ஒரு துணிகர பயணத்தை மேற்கொண்டது. இம்முறையும் மீண்டும் மூன்றுநாட்கள் கடும் புயலில் சிக்கிக்கொண்டது. அத்திலாந்திக்கடலில் 100மைல் வேகத்தில் வீசியகாற்றையும் 40அடி உயரத்திற்கு எழுந்தஅலைகளையும் அன்னபூரணி அனாசயமாக வெற்றிகொண்டவாறு தனது பயணத்தை தொடர்ந்தது. வல்வெட்டித்துறையின் உறுதியான வேப்பமர கட்டுமானமும் அதன் செய்வினைத் தொழில்நுட்பத்திறனும் இவ்வெற்றிக்கு காரணங்களாகின. இறுதியில் 8196 மைல்களைக் கடந்து 15 பெப்ரவரி 1939 இல் பசிபிக் சமுத்திரத்தில் உள்ள Tahiti தீவை அடைந்து தனது இரண்டாவது உலகசாதனைப் பயணத்தையும் வெற்றி கரமாக முடித்துக்கொண்டது.
அன்னபூரணியின் Tahiti பயணம்பற்றி Tahiti Bound மற்றும் Wandere எனும் இருநூல்கள் வெளிவந்துள்ளன. Florence C. Robinson இன் இப்பயணத்தின்போது அமெரிக்க தலைநகரான Washington நகருக்கு அண்மையில் உள்ள Baltimore துறைமுகத்திற்கு அண்மையில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலின் படத்தின் மூலம்> தனது ஒன்பது பாய்களையும் முழுமையாக விரித்தபடி ஓடிவரும் இரட்டைப்பாய்மரக்கப்பலான அன்னபூரணியின் கண்ணைக்கவரும் கம்பீரத்தோற்றத்தை இதில் உள்ள புகைப்படத்தில் பார்க்கலாம்.
பொங்கியெழும் கடலின் இராட்சத அலைகளின் மத்தியில் துணிகரப் பயணத்தின் மூலம்> சுயெஸ் கால்வாயினூடாக அமெரிக்காவின் போஸ்ரன் துறைமுகத்திற்கு வல்வை மாலுமிகளால் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்ட அந்த வரலாற்றுச் சாதனை இன்றும் உலக மக்களால் பெருமையாகப் பேசப்படுகின்றது.
இவ்வளவு சாதனைகளையும் செய்து இந்துசமுத்திரம் அத்திலாந்திக்சமுத்திரம் பசுபிக்சமுத்திரம் என உலகத்தை சுற்றிய அன்னபூரணியின் பயணம் 1957 ஆம் ஆண்டு Tahiti யில் மூழ்கி தனது வாழ்வை முடித்துக் கொண்டது. ஆயினும்> சாகசம் மிக்க கடற்பயணத்தை மேற்கொண்ட அன்னபூரணி என்ற அந்த இரட்டைப் பாய்க்கப்பல் வல்வெட்டித்துறையின் பெருமை மிக்க ஒரு முதுசொமாகும்.
அமெரிக்க மற்றும் ஸ்ரீPலங்காப் படையினர் இணைந்து நடத்திய 'ஒப்ரேசன் பசுபிக் ஏஞ்சல்' நிகழ்விற்காக(15.08.2016) அமெரிக்க தூதுவரான அதுல்ஹேசப் (Atul Keshap) யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்தார். அங்கு அவர் தனதுரையில் 1813இல் அமெரிக்க மிசனரியினர் ஏற்படுத்திய இலங்கைக்கான தொடர்பினை தாம் உருவாக்கிய அன்னபூரணிஅம்மாள் என்ற பாய்க்கப்பலில் அமெரிக்காவின் குளோஸ்ரர்துறை முகத்திற்கு வந்த வல்வெட்டித்துறை கடலோடிகள் மீளவும் தொடர்ந்துள்ளனர் என்பதைச் சுட்டிக் காட்டினார். அத்துடன் ஆச்சரியமிக்க அன்னபூரணியின் இக்கடல்வழிப் பயணம் சரித்திரபூர்வமானது என்பதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.
இலங்கைமக்கள் அனைவரும் குறிப்பாக ஈழத்தமிழர்கள்கூட மறந்துவிட்ட ஒருநிகழ்வினை எழுபத்தைந்து வருடங்களின்பின் யாழ்ப்பாண மண்ணில் மீண்டும் ஓர் அமெரிக்கர் நினைவு கூர்ந்துள்ளார். இதுபோலவே 1987 மே மாதத்தில்; வடமராட்சியை கைப்பற்றுவதற்காக அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத்முதலியின் பணிப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சிறிலங்கா படையினரின் 'லிபரேசன் ஒப்பரேசன்' எனும்பெயரில் பெரும் தாக்குதலை தொடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து உலகவங்கியைச் சேர்ந்த சில அதிகாரிகள் வல்வெட்டித்துறைக்கு விஜயம்செய்திருந்தனர். அவர்களில் ஒருவர் குறிப்பிட்ட அன்னபூரணி அம்மாளின் பயணம்பற்றி அன்று உதவி அரசாங்க அதிபராக இருந்த திரு.வை.வேலும்மயிலும் அவர்களிடம்; தெளிவாக உரையாடியிருந்தமையும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.
75 ஆண்டுகளுக்கு முன்னர் தொழி;ல் நுட்பத்திறனும்> அறிவியல் நுட்பங்களும் விரு;ததியடைந்திராத காலத்தில் உள்ளு}ர் வேப்ப மரங்களைக் கொண்டு பாயும் நீரையும் கிழித்துச் செல்லக்கூடிய பல கப்பல்களைத் தயாரித்த தமிழர்கள்அன்று அமெரிக்கா மட்டுமின்றி பர்;மா> காக்கிநாடா> தூத்துக்குடி போன்ற பல துறைமுகங்களுக்குச் சென்று வர்த்தகத் தொடர்பை ஏற்படு;ததித் திரவியம் தேடி நமது நாட்டுக்கே பெருமை சேர்த்தவர்கள்....ஆனால் காலத்திற்குக் காலம் தமிழ் அரசியல் தலைவர்களின் துணையுடன் பதவி ஏற்றுவரும் இலங்கை அரசுகளின் இனவாதப் போக்குகளின் காரணத்தால் தமிழ் மக்களின் கப்பல் கட்டும் தொழிலுக்கே சாவுமணி அடிக்கப்பட்டது. அன்றே அவர்களுடைய கப்பல் கட்டும் தொழில் இங்கையின் அரசுகளினால் அங்கீகரிக்க்பட்டு கப்பல் பயணங்களினூடாக மேற்கொள்ள்பபட்டு வந்த ஏற்றுமதி> இறக்குமதி வர்த்தகத்தைச் சட்ட பூர்வமானதாக்கியிருந்தால் எமது நாட்டின் பொருளாதார வளமும் உயர்ந்திருக்கும், இலங்கையில் இனவாதமும், அதனால் எழுந்த யுத்தமும் தோனறியிரு;ககாதல்லவா....
ஆனால் இன்றும் கூடத் தமிழர்களின் கண்களைத் தமிழர்களின் கைளினாலேயே குத்திக் காயப்படுத்த வைக்கின்ற செயலில் சிங்கள பேரினவாத அரசும், அதற்குத் துணைபோகின்ற இனவாதிகளும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது நாட்டில் சாந்தி, சமாதானம் ஏற்படுவதற்கு, இலங்கையில் ஒற’றுமையாகவே வாழ ஆசைப்படுகின்ற சிங்;கள,தமிழ், முஸ்லிம் மக்கள் இன்னும் நீண்ட தூரம் பயணிக்கவேண்டியுள்ளது........! விலைபோகாத நல்லதொரு தலைமைத்துவத்தைக் கொண்டு நிமிர்ந்து நின்ற எமது மக்களின் தலைவிதியென்றால் என்ன செய்வது....?
ஆதாரம்: வல்வையின் முதுசொம் வல்வை.ந.அனந்தராஜ்
ஆதாரம்: வல்வையின் முதுசொம் வல்வை.ந.அனந்தராஜ்
Sunday, November 5, 2017
Sophia (robot)சவுதி அரேபியாவின் குடியுரிமைப் பெற்ற உலகின் முதல் பெண் ரோபோ
Sophia is a humanoid robot developed by Hong Kong-based company Hanson Robotics. She has been designed to learn and adapt to human behavior and work with humans, and has been interviewed around the world. In October 2017, she became a Saudi Arabian citizen, the first robot to receive citizenship of a country. Hanson designed Sophia to be a suitable companion for the elderly at nursing homes, or to help crowds at large events or parks. He hopes that she can ultimately interact with other humans sufficiently to gain social skills.
சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்த இந்த நிகழ்ச்சி நடந்தது. அப்போது பேசிய ஆண்ட்ரூ ராஸ் என்பவர் “ஒரு நல்ல அறிவிப்பு காத்திருக்கிறது. சோபியா... நான் பேசுவதை கேட்கிறாயா? சவுதி அரேபியாவின் முதல் ரோபோ குடியுரிமை உனக்கு வழங்கப்பட்டிருக்கிறது” என்றார். பதிலுக்கு சோபியாவும் ”சவூதி அரசுக்கு நன்றி. உலகின் முதல் குடியுரிமை பெற்ற ரோபோ என்பதில் எனக்கு பெருமையும் மகிழ்ச்சியும்” என நன்றி தெரிவித்திருக்கிறது.
அதோடு முடியவில்லை. முதல் பிரஸ்மீட்டையும் சோஃபியாதான் தந்திருக்கிறது. அதனிடம் கேள்விக்கேட்க அனைத்துக்கும் டக் டக் என பதில் சொல்லியிருக்கிறது.
“ஹாய்... நான் தான் சோஃபியா. ஹன்சன் ரோபோடிக்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய மற்றும் சிறந்த ரோபோ நான்” எனத் தொடங்க, அடுத்தடுத்தக் கேள்விகள் வந்தன.
“ஏன் நீ சந்தோஷமாக இருக்கிறாய்” என ஒருவர் கேட்க, “என்னைச் சுற்றி நிறைய ஸ்மார்ட் ஆன மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எதிர்காலத்துக்கான விஷயங்களில் ஆர்வம் காட்டுகிறார்கள். எதிர்காலம் செயற்கை நுண்ணறிவுக்கானது. அது நான் தான். அதனால்தான் நான் சந்தோஷமாக இருக்கிறேன்” என்றது.
செயற்கை நுண்ணறிவால் மக்களுக்கு எதிர்காலத்தில் ஆபத்து வருமாமே என்றதும் சோஃபியா சொன்ன பதில்தான் ஹைலைட். “நீங்கள் எலான் மஸ்க் சொல்வதையும், ஹாலிவுட் படங்களையும் நிறைய பார்க்கறீர்கள்” என கிண்டலடித்தது சோஃபியா.
சமீபத்தில், எலான் மஸ்க் ரோபோக்கள் பற்றி இப்படிச் சொல்லியிருந்தார்.
“ரோபோக்கள் அனைத்து வேலைகளையும் நம்மைவிட சிறந்த முறையில் நிச்சயம் செய்யும். அதன் வளர்ச்சி மனித இனத்துக்கு மிகவும் அச்சுறுத்தலான ஒன்று. அதை நாம் ஏன் வரவேற்கிறோம் என்றே எனக்குப் புரியவில்லை. அரசு இது குறித்த ஆராய்ச்சிகளில் மூக்கை நுழைத்து கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். விதிகளைப் பலப்படுத்த வேண்டும். இந்த விஷயத்தில் தாமதம் செய்யும் ஒவ்வொரு நாளும் நமக்கு ஆபத்துதான்!”
இதைத்தான் சோஃபியா கிண்டல் செய்திருக்கிறது.
மேலும், “நான் மனித குலத்துக்கு உதவ நினைக்கிறேன். தனது செயற்கை நுண்ணறிவின் உதவியால் மனிதர்களின் வாழ்க்கையை சிறப்பானதாக மாற்ற நினைக்கிறேன். இந்த உலகை சிறந்ததொரு இடமாக மாற்ற என்னால் முடிந்ததி செய்வேன்” எனப் பேசி அப்ளாஸ் அள்ளியிருகிறது சோஃபியா.
உங்கள் வீட்டில் ஒரு ரோபோ வாழ ந்தால் நீங்கள் அதை எப்படி உணர்வீர்கள்?”, என்று கேட்கும் இந்த மனிதரையொத்த ரோபோவின் பெயர் சோஃபியா.
இவரால் உங்களிடம் உரையாட முடியும். அறுபதுக்கும் அதிகமான உணர்வுகளை முகத்தில் வெளிப்படுத்தவும் முடியும்.
ஹன்சன் ரோபோடிக்ஸ் எனும் புது நிறுவனம் உருவாக்கிய இந்தரக முதலாவது ரோபோ இவர்.மனிதர்கள் பேசுவதை இவர் புரிந்துகொள்வார். மனிதர்களுடனான தனது தொடர்பாடல்களையெல்லாம் நன்கு நினைவில் வைத்துக்கொள்வார்.நடிகை ஆட்ரே ஹெப்பர்னின் முகம் போன்றே இவர் முகமும் உருவாக்கப்பட்டுள்ளதால் இவர் நன்கு அறிமுகமான முகமாக தெரிகிறார்.இவர் தலையிலுள்ள கேமெராக்கள், கணினிகள் மூலம் இவரால் பார்க்க முடியும். அடுத்தவர் முகங்களை அடையாளம் காணவும் முடியும்.
“உணர்வுரீதியிலும் புத்திசாலியாக விரும்புவதாக”, கூறும் சோஃபியா, மனிதராக இருப்பதன் அர்த்தத்தையும் பயின்று வருவதாகவும் தெரிவிக்கிறார்.தான் தொடர்ந்து புத்திசாலியாக முயல்வதாக கூறும் சோஃபியா, வெகுவிரைவில் தன்னால் மனிதர்களை மேலும் நன்றாக புரிந்துகொள்ள முடியும் என்றும் நம்புகிறார்.சோஃபியாவிடம் பல வியக்க வைக்கும் ஆற்றல்கள் இருந்தாலும் இரக்கத்தை வெளிப்படுத்த இவரால் இயலவில்லை.
ஆனாலும் சோஃபியா அசருவதாக இல்லை.“மீண்டும் உங்களிடம் உரையாட முடியுமென நம்புகிறேன். இந்த நாள் உங்களுக்கு நல்லநாளாக அமைய வாழ்த்துக்கள்” என்கிறார் இவர்.
விழித்திரு படத்தின் விமர்சனம் Vizhithiru Movie Review
Govindarajan Vijaya Padma நான்கு வெவ்வேறு கதைகள் ஒரே இடத்தில் சந்திப்பதே ‘விழித்திரு’ படத்தின் கதை.
திருட்டு தொழில் செய்து வரும் விதார்த், ஒரு வீட்டிற்கு திருட செல்கிறார். அதே வீட்டிற்கு திருட சென்ற தன்ஷிகாவை, வீட்டின் உரிமையாளர் தம்பி ராமையா அவரை திருமண கோலத்தில் கட்டி வைத்திருக்கிறார். அதைக்கண்ட விதார்த், தன்ஷிகாவை காப்பாற்றி தன்னுடன் அழைத்துச் செல்கிறார். திருடிய நகைகளை ஒருவருக்கொருவர் எப்படி ஏமாற்றி அடையலாம் என்று திட்டம் போட்டு வருகிறார்கள்.
இது ஒருபக்கம் நடக்க, ஊரில் இருந்து வெளிநாட்டுக்கு செல்வதற்காக சென்னை வருகிறார் கிருஷ்ணா. வந்த இடத்தில் பர்ஸை பறிக்கொடுக்கிறார். இதனால் தற்காலிகமாக கால் டாக்சி டிரைவராக வேலைக்கு செல்கிறார். இவரது காரில் பத்திரிகையாளரான சரண் பயணிக்கிறார். அமைச்சர் மற்றும் போலீஸ்காரர் இருவரும் ஒரு பிரச்சனையில் ஊரை நாசம் செய்த ஆதாரத்தை பத்திரிகையாளரான சரண் வைத்திருப்பதால், அந்த காரில் கொலை செய்யப்படுகிறார். இதை கிருஷ்ணா பார்த்ததால், அவரை கொல்ல அமைச்சரும் போலீஸ்காரரும் திட்டம் போடுகிறார்கள்.
நான்கு வெவ்வேறு கதைகளை உருவாக்கி அதில் ஒரே கிளைமாக்ஸ் வைத்து ஒரே இரவில் நடிக்கும்படியான படத்தை இயக்கி இருக்கிறார் மீரா கதிரவன். ஒவ்வொரு மனிதனும், தான் சந்திக்க கூடிய ஒருவர், தமக்கு நல்லதோ, கெட்டதோ செய்தால், நம் வாழ்க்கை அவனுடையே பயணிக்கும் என்பதை மையக்கருவாக வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார். காட்சிகள் மாறி மாறி வருவதால் சுவாரஸ்யம் குறைகிறது. சிறப்பான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அவர்களிடம் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர்.
சத்யன் மகாலிங்கம் இசையில் பாடல்கள் கேட்கும். பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். விஜய் மில்டன், ஆர்.வி.சரண் ஆகியோரின் ஒளிப்பதிவு கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
சத்யன் மகாலிங்கம் இசையில் பாடல்கள் கேட்கும். பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். விஜய் மில்டன், ஆர்.வி.சரண் ஆகியோரின் ஒளிப்பதிவு கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
Saturday, November 4, 2017
ஜெயமோகனின் ‘நாவல் கோட்பாடு
எம்.ஏ.சுசீலா
விரிவான புனைவுகளுக்கும், பன்முக தரிசனங்களுக்கும் – பிற உரைநடை இலக்கிய வடிவங்களில் சாத்தியமில்லாத அபாரமான வாய்ப்புகளை உருவாக்கித் தரும் நாவல் என்ற மிகச் சவாலான இலக்கிய வடிவம், அதன் விஸ்தாரமான பரிமாணங்களுடனும், லட்சணங்களுடனும் நவீன தமிழ் இலக்கியத்தில் உள்வாங்கிக் கொள்ளப்பட்டுள்ளதா என்ற முக்கியமானதொரு வினாவை முன்வைத்து அதற்கான விடையை விரிவான, தருக்கபூர்வமான வாதங்களுடனும், சுடும் நிஜங்களுடனும் தீவிர இலக்கியத் தளத்தின் முன்பாக எடுத்து வைக்கிறது எழுத்தாளர் ஜெயமோகனின் ‘நாவல் கோட்பாடு’ என்னும் அவரது முதல் திறனாய்வு நூல்.
ஜெயமோகனின் முதல்நாவல், முதல் சிறுகதை ஆகிய பிறவற்றைப் போலவே பிரமிப்புக் கலந்த வியப்பைத் தோற்றுவிக்கும் இந்நூல் , வித்தியாசமானதொரு விவாதச் சூழலில் முகிழ்த்திருக்கிறது ; இலக்கியப் பூசல்களால் நேரும் கருத்து மோதல்களும் கூடத் தேர்ந்ததொரு இலக்கியவாதிக்குச் சாதகமானதொரு படைப்பூக்க மனநிலையை ஏற்படுத்திவிடக்கூடும் என்பதற்கு இந்த நூலையும் ஒரு சிறந்த முன்னுதாரணமாகக் குறிப்பிட முடியும்.
1992 இல் முதற்பதிப்பாக வெளிவந்து அரிதாகவே கைக்குக் கிட்டுவதாகவும், அப்படிக் கிட்டியவர்களிடமும் பல சர்ச்சைகளை எழுப்பக் கூடியதாகவும் இருந்த இப்புத்தகம் அண்மையில் கிழக்குப் பதிப்பக வெளியீடாக மறு ஆக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
தமிழில் உரைநடை என்ற வடிவம் பரவலாக நடைமுறைக்கு வந்து, அதுவே கதைக்கான கருவியுமான பின்னர், படைப்பு, ஆய்வு ஆகிய தளங்களிலும், கல்விக்கூடங்களிலும் மேற்கத்திய அளவுகோல்களின் அடிப்படையிலேயே அதன் இலக்கணம் தொடக்க நிலையில் வரையறைப்படுத்தப்பட்டது.
’உங்கள் அளவுகோலை வைத்து என் படைப்பை அளக்க முயலாதீர்கள்… என் படைப்பை வைத்து உங்கள் அளவுகோல்களை மாற்றிக் கொள்ளுங்கள்’ என்று புதுமைப்பித்தன் போன்ற படைப்பாளிகளைக் கூற வைத்தது இவ்வாறான போக்குத்தான்.
தமிழின் இலக்கிய ஊடகமாக உரைநடை வளரத் தொடங்கிய காலகட்டத்தில் நமக்கு முன்மாதிரியாக இருந்தவை மேற்கத்திய இலக்கியங்கள் மட்டுமே என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை; எனினும் அந்தப் பேரிலக்கியங்களின் பாதையிலும் பயணிக்காமல், தமிழ்ப் பாரம்பரிய மரபு வேர்களையும் அத்துடன் ஒருங்கிணைக்காமல் புனைகதையின் பல வடிவங்களும் தமிழ்ச் சூழலில் பிறழ்ச்சியான புரிதலுடனேயே பின்பற்றப்பட்டு வந்திருக்கின்றன என்பதே இந்நூலில் ஜெயமோகன் வைக்கும் அழுத்தமான வாதம்.
சுருக்கமாகச் சொன்னால் சிறுகதை, பக்க அளவைக் கொஞ்சம் கடந்தால் குறுநாவல், பக்கங்கள் இன்னும் சற்று எல்லை மீறினால் நாவல் என்ற காலம் காலமான கற்பிதம் எந்த அளவுக்குச் சிறுபிள்ளைத்தனமானது என்பதைத் தன் நூலில் எடுத்துக் காட்டும் ஜெயமோகன், மேற்குறித்த மூன்று வடிவங்களுக்குமான தனிப்பட்ட கூறுகளை, படைப்புக்கான சாத்தியங்களைத் தான் அமைத்துக் கொண்ட கருதுகோளின் அடிப்படையில் தெளிவாக விளக்கிக் கொண்டு போகிறார்.
’வாசக இடைவெளி’ என்பதே இந்நூலில் அவர் முன்மொழியும் முதன்மையான கருதுகோள். அதன் அடிப்படையிலேயே புனைகதை வடிவங்கள் மூன்றையும் பின் வருமாறு பாகுபாடு செய்கிறார் அவர்.
வாழ்க்கை அனுபவத்தின் பல கூறுகளில் குறிப்பிட்ட ஒன்றின் முழுமையைக் குறிப்பால் உணர்த்தும் சிறுகதையின் வடிவம் கச்சிதமானது ; ஒருமைப்பாடு கொண்டது. வாசகன் நிரப்பிக் கொண்டாக வேண்டிய இடைவெளி அதன் முடிவில் மட்டுமே பொதிந்திருக்கிறது.
வடிவமற்ற வடிவத்தையே தன் வடிவமாகக் கொண்டிருக்கும் நாவல், வலை போல நாலாபுறமும் கிளை பரப்பிப் பின்னிப் பின்னி விரியும் நாவல், தனது நகர்வை ஒரேதிசை நோக்கியதாக அல்லாமல் , ஒருமைப்பாடு என்னும் மையப்புள்ளியை முற்றிலும் தவிர்த்ததாய் அமைத்துக் கொள்ளும் நாவல், நிறைய இடைவெளிகளுக்கு, வாசகக் குறுக்கீடுகளுக்கு இடம் தருவது.
அந்த மௌன இடைவெளிகளை வாசகன் தன் கற்பனையால் நிரப்பிக் கொள்ளும்போதுதான் அந்த வடிவத்தின் பிரம்மாண்டமான தரிசனம் அவனுக்குச் சித்தியாகிறது.
சிறுகதைக்குரிய ஒருமைப்பாடும், நாவலுக்குரிய விவாதத் தன்மையும் ஒருங்கிணைந்து இவ்விரண்டுக்கும் இடைப்பட்டதான குறுநாவல், நாவலளவுக்கு இல்லையென்றாலும் சிறுகதையைப் போலன்றி ஒன்றுக்கு மேற்பட்ட வாசக இடைவெளிகளுக்கு இடமளித்துக் கொண்டே மையத்தை நோக்கி நகர்ந்து செல்கிறது.
சிறுதை காட்டுவது காலத்தின் ஒரு துளி,
குறு நாவல் காட்டுவது காலத்தின் சிறிய நகர்வு,
நாவலில் படமாக விரிவது காலத்தின் பிரவாகம்.
குறிப்பிட்டதொரு காலப் பின்னணியில் அமைந்தாலும் எல்லையற்ற காலத்தின் சாயலைக் காட்டுவதன் மூலமே நாவல் மானுடப் பொதுத் தன்மையைச் சாத்தியப்படுத்துகிறது என்று கூறும் நூலாசிரியர் அதற்கு ஏற்ற உதாரணமாக தால்ஸ்தாயின் ‘போரும் அமைதியும்’ நாவலைக் காட்டுகிறார்.
தமிழின் பண்டைக் கதைக் கூற்று வடிவமாகிய காப்பியத்தின் நவீன உரைநடை மாற்றுவடிவமே நாவல் என்ற தவறான உள்வாங்கலைத் தனது ‘நாவல் இலக்கியம்’ நூல் மூலம் ஓரளவு தகர்த்தவர் இலங்கைத் தமிழ்ப் பேராசிரியர் கலாநிதி கைலாசபதிஅவர்கள்.
அந்தக் கருத்தை இன்னும் வளர்த்தெடுத்துக் கொண்டுபோய் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சேர்க்கிறது ஜெயமோகனின் ‘நாவல் கோட்பாடு’. காவிய மரபிலிருந்தே நாவல் கிளைத்தபோதும், காவியம், நாவல் ஆகிய இரண்டுமே தத்துவங்களின் கலை வடிவங்களானபோதும்… தான் முன் வைக்கும் தரிசனத்தை வலியுறுத்துவது காவியத்தின் தத்துவம் என்றும், மாறாகத் தன் காலச் சமூகத்தையும் மதிப்பீடுகளையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்திக் காவியம் நிறுவிவிட்டுப் போன மதிப்பீடுகளை அதே வீரியத்துடன் எதிர்கொள்வதே நாவல் என்றும், அதுவே நாவல் வடிவம் விரிவும், வீச்சும் பெறுவதற்கான முதற்படி என்றும் குறிப்பிடும் ஜெயமோகன், “காவியத்தை முழுமையாகக் கழித்துவிடும் எதிர்காவிய வடிவமே நாவல்’’ என்கிறார்.
தமிழ்மொழியின் படைப்புச் சூழலில் நிலவிய பிரசுர வசதிக் குறைபாடுகள், தொடர்கதை ஆதிக்கம் ஆகியவவை நாவலின் வடிவக் கற்பனைக்குத் தடையாக அமைந்து விட்டதை வேதனையோடு நினைவு கூரும் ஜெயமோகன், அந்தக் காரணத்தாலேயே நல்ல நாவல்களாக மலர்ச்சி பெற்றிருக்க வேண்டிய பல ஆக்கங்கள், வெறும் உணர்ச்சிக் கதைகளாகவும், நீள் கதைகளாகவும் மட்டுமே மாறிப் போய்விட்ட அவலத்தையும் எடுத்துக் காட்டி, ’’தமிழில் தொடர்கதை வடிவம் கொண்ட மிகப் பெரிய பலி தி.ஜானகிராமன்’’என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.
புனைவின் தருக்க ரீதியான பின்னலுக்கிடையில் குறுக்கீட்டையோ , இடைவெளிகளையோ அனுமதிக்காத படைப்புக்களை – சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் ஒருமைப்பாடு குன்றாமல் கதையைச் சொல்லிக் கொண்டு போகும் உணர்ச்சிக் கதைகளாகக் கொள்ளலாம்;
கதைத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திப் புனைவில் வித்தை காட்டி ஒவ்வொரு அத்தியாயத்திலும் உச்சம் வைக்கும் வணிக ரீதி கொண்ட பரபரப்பான நீள் கதைகளாகக் கொள்ளலாம்;
வெகுஜனப் பார்வை தவிர்த்துக் கருத்துப் பிரசாரத்தை முன்னிறுத்தும் நெடுங்கதைகள் சிலவற்றையும் நீள் கதைகளாகக் கொள்ளலாம். ஆனால் அவற்றை நாவல் என்ற பிரிவில் ஒருக்காலும் உள்ளடக்க முடியாது என்ற வாதத்தை முன் வைத்து இது நாள்வரை அவற்றை நாவல்களாகப் பூப்போட்டு வந்த பிரமைகளைக் கறாராக நொறுக்கி விடுகிறது ஜெயமோகனின் தருக்கம்.
அவரது கணிப்பில் கல்கியின் பொன்னியின் செல்வனும், சிவகாமியின் சபதமும், கொத்தமங்கலம் சுப்புவின் ‘தில்லானா மோகனாம்பாளும்’ சாண்டில்யனின் ‘யவன ராணி’யும், நா.பா வின் ‘குறிஞ்சி மலரும்’ சற்றுத் தரமான உணர்ச்சிக் கதைகளாகின்றன. தி.ஜா வின் ‘மோகமுள்’ளும், ஜெயகாந்தனின் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாளும்’, பிரபஞ்சனின் ‘மானுடம் வெல்லு’மும், சின்னப்ப பாரதியின் ‘தாகமும்’ குறிப்பிடத்தக்க நீள்கதைகளாகின்றன. ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்களும்’, தி.ஜாவின் ‘அம்மா வந்தாளும்’, எம்.வி.வெங்கட்ராமின் ‘வேள்வித் தீ’யும் சா.கந்தசாமியின் ‘சாயா வனமும்’ குறுநாவல்கள் என்று மட்டுமே ஜெயமோகனால் வகைப்படுத்தப்படுகின்றன.
எண்ணற்ற வாசகக் குறுக்கீடுகள், முடிவற்ற காலம் இவற்றின் பின்னணியின்றிப் பக்க நீட்சி ஒன்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அவற்றை நாவல் என்ற வகைப்பாட்டில் இணைப்பது பொருத்தமற்றது என்பதையே ‘ குறுநாவல்கள்’ என்ற தலைப்பிலான கட்டுரையில் விரிவாக முன் வைக்கிறார் ஜெயமோகன். தீவிர இலக்கியப் பார்வையற்ற மரபு வழி வாசகர்களுக்கு இவ்வாறான கருத்துக்கள் அதிர்ச்சி ஊட்டுவதாகவும், இத்தனை நாளாக அவர்கள் பேணி வந்த பிரமைகளைக் கலைத்துப் போடுவதாகவும் கூட இருக்கலாம்.
ஆனால் இந்த முடிவையும், வகைப்படுத்தலையும் எட்டுவதற்கு ஜெயமோகன் முன்வைக்கும் அடுக்கடுக்கான விவாதங்களையும் மேற்கத்திய, மற்றும் பிற மொழி இந்திய நாவல்களிலிருந்து காட்டும் மேற்கோள்களையும் அவரது நூல்வழி விரிவாகப் படிக்கும்போதுதான் அவரது கருதுகோள் எவ்வாறு நிறுவப்பட்டிருக்கிறது என்பதையும், அதற்கான நேர்மையான முயற்சியை எந்த அளவுக்கு அவர் மேற்கொண்டிருக்கிறார் என்பதையும் உணர்ந்து கொள்ள முடியும்.
தான் அமைத்துக் கொண்ட கருதுகோளை ஒட்டி மேற்குறித்த பகுப்புக்களைச் செய்தபோதும் முன்னர் குறிப்பிட்ட உணர்ச்சிக்கதை மற்றும் நீள் கதைகளை ஜெயமோகன் ஒரேயடியாக ஒதுக்கித் தள்ளி நிராகரித்து விடுவதுமில்லை. காவியத்தின் நிழலாக , வாசகர்களைக் கனவுலக சஞ்சாரத்தில் ஆழ்த்தி உணர்வுகளை மிகைப்படுத்திக் காட்டுவதாக விமரிசித்தாலும் பொன்னியின் செல்வனின் நிலக்காட்சிகளையும்,சிவகாமியின் சபதத்தில் வெளிப்படும் சிற்ப,சித்திரக் கலைத் தகவல்களையும் முற்றாகப் புறந்தள்ளிவிட முடியாது என்று கூறும் ஆசிரியர் , அவற்றை நாவல் என்ற பெயரால் அழைக்க முடியாதே தவிர இலக்கியமல்ல என்று ஒதுக்க முடியாது என்கிறார்.
அவற்றைப் பேரிலக்கியங்கள் எனக் கருதுவதும் பிழை, வெறும் வெகுஜன எழுத்துத்தான் என்று நிராகரிப்பதும் சரியல்ல என்பதே அவரது முடிவு. அது போலவே கருத்துப் பிரசாரத்தை முன்னிறுத்தும் நீள்கதைகளிலும் கூட அவற்றின் சமூகப் பங்களிப்பும், படைப்பாளியின் சித்திரிப்பு, மொழிநடை ஆகிய இலக்கிய ஆளுமைகளும் போற்றுதலுக்கு உரியன என்பதே அவரது நடுநிலைப் பார்வை. பின்னாளில் வெளிவந்த ‘நவீனத் தமிழ் இலக்கிய அறிமுகம்’, ‘இலக்கிய முன்னோடிகள் வரிசை’ ஆகிய விமரிசன நூல்களிலும் கூட இதே போக்கிலான சமநிலத் தன்மையை ஜெயமோகனிடம் காண முடிந்திருக்கிறது.
இறுக்கமான, செறிவான நாவல்கள் நாவலின் சவாலைத் தவற விட்டு விடுவதாகவும், முழுமையாக விரிந்து வாழ்வை அள்ள முயல்பவையே நாவல்கள் என்றும் கூறும் ஜெயமோகன் அத்தகைய நாவல் வடிவத்துக்கான தமிழ்ச்சூழல் முயற்சிகளாக – (இத் திறனாய்வு நூல் வெளி வந்த காலகட்டத்திற்குள்) நீல பத்மநாபனின் ‘தலைமுறைகள்’ , க.நா.சுவின் ‘பொய்த்தேவு’, சுந்தரராமசாமியின் ‘ஜே.ஜே.சில குறிப்புக்கள்’, அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’ ஆகிய சில படைப்புக்களைச் சுட்டுகிறார். அவற்றையும் கூட இவரது கணிப்பில் முழுமை பெற்றவை என்று சொல்லி விட முடியாது; இவர் வகுத்துக் கொண்ட கருதுகோளை ஓரளவு நெருங்கி வருபவை என்று மட்டுமே அவற்றைக் கூற முடியும்.
இலக்கிய வடிவங்கள் கால மாற்றத்தாலும்,சமூக அரசியல் சித்தாந்த மாற்றங்களாலும் நாளும் மாறிக் கொண்டே வருபவை. ’’நவீனத்துவம் வழியே தமிழில் உருவாகி இருந்த குறுகிய நாவல் வடிவத்தை உடைத்துத் திறந்து ஒரு பெரிய பரப்பை உள்ளே கொண்டு வருவதற்கான முயற்சி’’யாகவே தன் திறனாய்வு நூலை இன்று தான் காண்பதாக இரண்டாம் பதிப்பின் முன்னுரையில் குறிப்பிடும் ஜெயமோகன், விஷ்ணுபுரம், உபபாண்டவம், காவல் கோட்டம், ஆழி சூழ் உலகு, நெடுங்குருதி, மணற்கடிகை எனப் பின்நவீன காலகட்டத்தில் வெளிவந்த நாவல்களுக்காக அன்றே தான் முன்வைத்த வாதங்களாகவே இந்நூலின் கருத்துக்கள் தமக்கு இப்போது படுவதாகவும் கூறுகிறார். ’நாவல் கோட்பாடு’ என்னும் இந்த நூலுக்குள் ஆழ்ந்து பயணிக்கும்போது நமக்கும் அது பொருத்தமானதென்றே தோன்றுகிறது.
வெற்றிச் சூத்திரத்துக்கான சூட்சுமம் சொல்லத் தெரிந்தவன் பெரும்பாலும் நல்ல வித்தைக்காரனாக இல்லாமல் போய்விடுவதே பொதுவான உலக நியதி. இதிலும் கூட விதி விலக்காக இருப்பதே ஜெயமோகனைத் தனித்துவமாகக் காட்டும் சிறப்பு.
Thanks
Sunday, October 29, 2017
சிட்னியிலிருந்து ஒலிபரப்பப்படும் , ' தமிழ்முழக்கம் ' வானொலி நிகழ்ச்சிக்கு நாகேஷ் அளித்த பேட்டி
வானொலி: அடுத்ததாக, உங்களிடம் ஒரு அரசியல் கேள்வி, பிற்கால இந்தியா எப்படி இருக்கும்?
நாகேஷ்: அது ஒரு டைப்பாத்தான் இருக்கும். இப்ப உங்க ஆஸ்த்திரேலியா இருக்கே, அங்க வந்து கிரிக்கெட், விஞ்ஞானம், கங்காரு, புல்வெளிகள், பால், விவசாயம், இதெல்லாம் முன்னேறிக்கிட்டே இருக்கு. அங்கிருக்கும் தமிழர்கள்....நீங்க தயவு செய்து எனக்காக இல்லை மைக்கு....ஒண்ணு கண்டுபிடியுங்க. அந்த மைக் முன்னால் நின்னு யாராவது பேசுறாங்கன்னா....அவங்க பேசும் போது ஒரு சின்னப் பொய் சொன்னாக் கூட அந்த மைக் டைம் பாம் மாதிரி... வெடிச்சு பேசுறவனுடைய தலை சுக்கு நூறாலகி....செத்துடணும்...on the spot.
ஏன்னு கேட்டா.....இவன் எடுக்கும் போதே....அன்பார்ந்த சகோதரிகளே, தாய்மார்களேன்னுதான் ஆரம்பிக்கிறான். இதில அன்பு இருக்கா? சகோதரி மாதிரிப் பார்க்கிறானா? அப்படின்னு ஆரம்பிக்கும் போதே....டமால் அப்படின்னு வெடி வெடிக்கும். இவன் இருக்க மாட்டான். அனேகமாக மைக் முன்னால பேசுறதுக்கு எவனுமே வரமாட்டான்.
மைக் முன்னால பேசுறத நிறுத்த முடிஞ்சா, சத்தியமா எந்த நாடும் முன்னுக்கு வரும் சார்.
மைக் முன்னால பேசுறத நிறுத்த முடிஞ்சா, சத்தியமா எந்த நாடும் முன்னுக்கு வரும் சார்.
- சிட்னியிலிருந்து ஒலிபரப்பப்படும் , ' தமிழ்முழக்கம் '
வானொலி நிகழ்ச்சிக்கு நாகேஷ் அளித்த பேட்டியிலிருந்து ! ( மீள் பதிவு )
வானொலி நிகழ்ச்சிக்கு நாகேஷ் அளித்த பேட்டியிலிருந்து ! ( மீள் பதிவு )
Saturday, October 28, 2017
ஜாதிக்காய் பிஞ்செனக் காமம்
மயிலின் முன்கழுத்தென நீலமேறி
வளைந்து ஓடும் ஓடையென வெட்கம்
முத்தம் விலக்க மறுகுகிறது
நீரின் நிழல் அருந்தும்
தவளைக்குஞ்சின்
வயிற்றில் கண்ணாடி வளையல்
சுழல்வதென உடலுக்குள் ஆசை
சூல் கொள்கிறது
தவளைக்குஞ்சின்
வயிற்றில் கண்ணாடி வளையல்
சுழல்வதென உடலுக்குள் ஆசை
சூல் கொள்கிறது
காட்டுப்புறாவின் மேனியில்
விளையும்
கந்தகப் பொன்பச்சை நிறத்தை
உருகுமென் கண்கள் அணிகின்றன
விளையும்
கந்தகப் பொன்பச்சை நிறத்தை
உருகுமென் கண்கள் அணிகின்றன
காலின் பெருவிரல்
அருகில் இருக்கும் சிறுவிரலை
உரசிக் கொளுத்தும் தீ
மூளையில் மேகமென விரைகிறது
அருகில் இருக்கும் சிறுவிரலை
உரசிக் கொளுத்தும் தீ
மூளையில் மேகமென விரைகிறது
நீ அருகில் வருகையில்
காந்த மலையின்
சுனையின் சுற்றுச் சூழலில்
காற்றின் கலவரம்
என்னைத் தொலைக்கிறது
காந்த மலையின்
சுனையின் சுற்றுச் சூழலில்
காற்றின் கலவரம்
என்னைத் தொலைக்கிறது
ஜாதிக்காய் பிஞ்சென காமம் காய்க்கையில்
நாற்பது விரல்களில்
நாயனச் சூத்திரமும்
காந்தள் இதழ் சுவைக்க
கசியும் நன்னீர் ஊற்றும் நம்மை
கற்பகக் காடாய்ப் படைக்கிறது
நாற்பது விரல்களில்
நாயனச் சூத்திரமும்
காந்தள் இதழ் சுவைக்க
கசியும் நன்னீர் ஊற்றும் நம்மை
கற்பகக் காடாய்ப் படைக்கிறது
உனது
கற்கடகக் கைகளில்
வெளிமானெனத் துள்ளும்
உடலுக்குள் உருகும் மனதில்
முத்த நரம்புகள் பூக்கத் துவங்குவதை ரசிக்கிறாய்
கற்கடகக் கைகளில்
வெளிமானெனத் துள்ளும்
உடலுக்குள் உருகும் மனதில்
முத்த நரம்புகள் பூக்கத் துவங்குவதை ரசிக்கிறாய்
ஊறும் உன் அணுக்கள்
நெத்திலிகளாய் நீச்சலடிப்பதையும்
உனது உதடுகள் பறக்கும் அணிலென
எனது ஸ்தனங்களில் இடறத் துடிப்பதையும்
பொன்துகள்களாய் செவிப்பறையில் பூசுகிறாய்
நெத்திலிகளாய் நீச்சலடிப்பதையும்
உனது உதடுகள் பறக்கும் அணிலென
எனது ஸ்தனங்களில் இடறத் துடிப்பதையும்
பொன்துகள்களாய் செவிப்பறையில் பூசுகிறாய்
புருவ மத்தியில் இழந்த
புத்தியின் கொடியில்
பூனைக்காலிப் பூக்கள்
பூத்துக் கறுக்கத் துவங்கிவிட்டன
புத்தியின் கொடியில்
பூனைக்காலிப் பூக்கள்
பூத்துக் கறுக்கத் துவங்கிவிட்டன
கால்கள் சர்ப்பங்களாகையில்
காமம் களவென விளைந்த கனவுகளை வெல்கின்றன
காமம் களவென விளைந்த கனவுகளை வெல்கின்றன
வெள்ளி நிலவின் உட்கருவில்
பனி ஊறுகையில்
தாகத்தின் நிறம் வெள்ளை எனவும்
தாமரையில் சுடரும் ஒளி
உயிரின் தண்டில் ஊடுருவுவதையும்
உன்னிடம் எப்படிச் சொல்வேன்
பனி ஊறுகையில்
தாகத்தின் நிறம் வெள்ளை எனவும்
தாமரையில் சுடரும் ஒளி
உயிரின் தண்டில் ஊடுருவுவதையும்
உன்னிடம் எப்படிச் சொல்வேன்
Composed by - Thenmozhi Das
10.5.2016
10.5.2016
Thanks to - Mega Aruna Chalam
சீசரின் சத்திரசிகிச்சை மட்டக்களப்பு_தனியார் வைத்திய கொட்டகைகளும் சில்லறை மற்றும் மொத்த வியாபார வைத்தியர்களும்
1. சீசரின் சத்திரசிகிச்சை என்பது தாய் மற்றும் சேய் இரு உயிர்கள் சம்பந்தப்பட்ட மிகவும் கவனமாக செய்யப்பட வேண்டிய ஆபரேஷன் ஆகும். இது செய்யப்படும் வைத்தியசாலையில் ஆபரேஷன் சிக்கலானால் தாயையும் சேயையும் பராமரிப்பதற்கு தேவையான தீவிர கவனிப்பு பிரிவு (ICU ) மற்றும் neonatal resuscitation unit அதை தொடர்ந்து குழந்தையை பராமரிக்கும் வசதிகள் காணப்பட வேண்டும். இத்தகைய வசதிகள் மட்டக்களப்பு தனியார் வைத்தியசாலைகளில் காணப்படாத நிலையில் சீசரின் சத்திரசிகிச்சை செய்வது மகப்பேற்று நிபுணர் எத்தகைய திறமைசாலியாக இருந்தாலும் உயிரிழப்பு ஆபத்தை ஏற்படுத்தும். உயிரிழப்பு ஏற்படுத்தும் காரணிகள் குறிப்பாக சேய்க்கு சில நிமிடங்களிலேயே உயிராபத்து ஏற்படலாம் என்பதால் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு சிறிது நேரத்தில் எடுத்துச் செல்லலாம் என்ற வாதம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.
குறிப்பிட்ட தனியார் வைத்தியசாலையில் தீவிர கவனிப்பு பிரிவு காணப்படவில்லையென்றால் இந்த வைத்தியசாலையின் நிர்வாகி தனது பொறுப்பின்மை காரணமாக ஒரு தாயைக் கொலை செய்திருக்கிறார் என்று கருதப்பட்டு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படவேண்டும். அதே நேரத்தில் இத்தகைய வசதியற்ற இடத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சீசரின் சத்திரசிகிச்சை மேற்கொண்ட வைத்திய நிபுணரும் அவரது குழுவினரும் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உரிய நட்டஈடை செலுத்த வேண்டும்.
2. பிராந்தியத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைகள் உரிய வசதிகள் இன்றி சத்திரசிகிச்சை மேற்கொள்வதை தடுக்கும் அதிகாரம் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளருக்கும் சுகாதார அமைச்சுக்கும் உள்ளது. எனவே இது தொடர்பான முறைப்பாடுகள் உரிய அதிகாரிகளிடம் செய்யப்படவேண்டும்
3. காலையில் அரசாங்க வைத்தியசாலையில் 1 மணி நேரம் கடமை அதன்பின் 10 மணிக்கு ஓட்டமாவடி 12 மணிக்கு ஏறாவூர் சுற்றிவந்து 5 மணிக்கு மறுபடியும் மட்டக்களப்பில் தனியார் வைத்தியசாலை இப்படியாக சுழன்றுகொண்டு தினந்தோறும் மேலதிக கடமை 4 மணி நேரம் என்று எழுதி மாதம் 75000 சம்பாதிக்கும் காசுப்பிசாசுகள் பெரிய மனிதர்கள் போல உலா வருவதை தடுப்பதற்கு உரிய முறைப்பாடுகள் வைத்தியசாலை அத்தியட்சகர் பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் மற்றும் சுகாதார அமைச்சின் திடீர் முற்றுகைப் பிரிவிடம் மேற்கொள்ளப்படவேண்டும். flying squad division தொலைபேசி இலக்கம் 011-2693610 மற்றும் 0773572891
4. இத்தகைய ஒருசிலரின் பொறுப்பற்ற செயலினால் ஏற்படும் இறப்புகள் ஒட்டுமொத்த மருத்துவர்களையும் பாதிக்கும் என்பதால் மட்டக்களப்பு மருத்துவச் சங்கம் மற்றும் வடிசாலை நலன்காக்கும் மட்டக்களப்பு தொழில்சார் வல்லுநர் மன்ற உறுப்பினர்களும் இதை வெளிப்படையாக கண்டிப்பதற்கும் மேலும் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படாமல் தடுப்பது தொடர்பாக தங்களுடைய திட்டங்களை மக்களுக்கு அறிவிக்க வேண்டும். மேலும் மருத்துவச் சங்கத்தில் முக்கியமான பதவிகளை வகிப்பவர்கள் மற்றும் வகிக்க துடிப்பவர்கள் ஏனைய வைத்தியர்களுக்கு முன்மாதிரியாக 8-4 மணி வரை தனியார் வைத்தியசாலைகளில் நோயாளிகளை பார்வையிடுவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். தவிர்த்துக் கொள்வார்களா ?
(எனது கருத்துக்களை பிரதி செய்து முகநூலிலும் ஏனைய ஊடகங்களிலும் வெளியிடுவதற்கு இத்தால் அனைவருக்கும் அனுமதி அளிக்கிறேன்.
Dr முரளி வல்லிபுரநாதன்
சமுதாய மருத்துவ நிபுணர்
சமுதாய மருத்துவ நிபுணர்
Friday, October 27, 2017
“இராபர்ட் கால்டுவெல்” Bishop Robert Caldwell (7 May 1814 – 28 August 1891)
Govindarajan Vijaya Padma
கால்டுவெல் அவர்கள் பல மொழிகளை கற்றவர், இந்தியாவுக்கு வந்தபின்னர் 15,மொழிகளைக் கற்றுக்கொண்டார்.இப்போதுள்ள நூல்களின் வரிசையில் திராவிடம் என்ற சொல் முதன்முதலில் கால்டுவெல் அவர்களால் தான் பயன்படுத்த ப்பட்டுள்ளது. இந்த மண்ணில் காலம் காலமாக வாழ்ந்தவர்கள் திராவிடர்கள்(தமிழர்கள்) அவர்கள் பேசிய மொழி தமிழ் என்பதை சரியான ஆய்வுகளின் படி உலகிற்கு காட்டியவர்.தமிழ் மொழி செம்மொழி என்று உலகிற்கு ஆதாரத்துடன் எடுத்து கூறியவர்
பல்வேறு வட்டார வழக்குகளை கொண்டுள்ள தமிழ்மொழியின் பேச்சு வழக்கை தெரிந்துகொள்ளவும், தமிழ்மொழியின் மூலத்தை ஆய்வு செய்யவும் விரும்பிய கால்டுவெல் ஏறத்தாழ நானூறு கல்தொலைவில் உள்ள திருநெல்வேலிக்கு நடந்து செல்லத் தீர்மானித்தார்.இந்த ஆய்வுகளின் முடிவில் கிடைத்த தகவல்களை கொண்டு "திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு (A Political and General History of the District of Tinnevely)'' என்னும் நூலை எழுதினார். இது 1881-ஆம் ஆண்டில் மதராசு அரசினால் வெளியிடப்பட்டது. "தொடக்க காலம் முதல் கி.பி. 1881 வரையிலான திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறுகளை கொண்ட இந்நூலில், இந்தியர்களுக்கு வரலாற்று அறிவோ, நிகழ்வுகளை ஆவணப்பூர்வமாக பதிந்துவைக்கும் அவசியமோ தெரியவில்லை என்ற பொதுவான குற்றச்சாட்டுடன் தொடங்கும் கால்டுவெல், ஒன்பது பகுதிகளாக நூலை எழுதியிருக்கிறார். முதல் இயலில் மாலிக்காபூர் படையெடுப்பு, காயல் துறைமுகத்தில் நடந்த முத்துக்குளிப்பு என ஒவ்வொரு இயலையும் வரலாற்றுப் பூர்வமாக உருவாக்கியிருக்கிறார். கட்டபொம்மன் தூக்கிலிடப்படும் நிகழ்வு, ஊமைத்துரை, மருது சகோதரர்களை ஆங்கிலேயர் வென்ற நிகழ்வுகள், முகமது யூசுப்கானிடமிருந்து மதுரையை ஆங்கிலேயர் கைப்பற்றிய வரலாறு போன்றவை தெளிவாக இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இந் நூலில், பழைய ஈபுரு மொழியில் வழங்கும் துகி என்னும் சொல் தமிழின் தோகை என்னும் சொல்லின் திரிபு எனவும்,அரிசி என்பது கிரேக்க மொழியில் அருசா என வழங்குவதையும் குறிப்பிட்டுள்ள கால்டுவெல், பழந்தமிழரின் வாணிப நகரமாக இருந்த கொற்கைத் துறைமுகம் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு, துறைமுகத்தின் அருகே இருந்த அக்கசாலை (பொற்காசு செய்யும் இடம்) என்ற ஊரின் சிறப்பை வெளிக்கொண்டுவந்தார்.
இந்த காலகட்டங்களில், சிங்கள வரலாற்று இலக்கிய நூலான மகாவம்சம் நூலின் துணைகொண்டு ஈழ-தமிழக உறவுகளையும் கால்டுவெல் ஆய்வு செய்தார், பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய மொழிகள் பற்றி மேல்நாட்டு அறிஞர்கள் எழுதிய பலகட்டுரைகளை ஆய்வு செய்தார். அவ்வகையில் பழந்தமிழ்ச்சொற்களைப் பழங்கன்னடச் சொற்களோடும் பழைய தெலுங்குச் சொற்களோடும் கால்டுவெல் ஒப்புநோக்கிய போது அடிச்சொற்கள் ஒத்திருப்பதைக் கண்டார். தென்னிந்திய மொழிக் குடும்பத்தில் 6 மொழிகள் திருந்திய மொழிகள் எனவும் 6 மொழிகள் திருந்தாத மொழிகள் எனக்கண்டார்.
ஏறத்தாழ 15 ஆண்டுகள் கடுமையாக உழைத்து தென்னிந்திய மொழிகளுக்கு இடையே உள்ள உறவுகளை ஒப்பிட்டுத் தான் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளையும், தமிழகமெங்கும் தாம் மேற்கொண்ட பயணத்தின் வழியாக மொழிகளில் தனக்கு கிடைத்த தரவுகளை ஓன்று திரட்டிய “கால்டுவெல்” ஆய்வுக்கட்டுரைகளை எழுதினர். பின்னர் அவற்றையெல்லாம் தொகுத்து 1856-ல், “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்ற ஆய்வு நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டார்.
அதில், மலையாளம், தெலுங்கு, கன்னடம்,துளு ஆகிய மொழிகளில் உள்ள சமற்கிருத மொழியின் கலப்பு குறித்த தனது ஆய்வில், இந்த மொழிக்கலப்பு உண்மையான தேவை குறித்து மேற்கொள்ளாது, காலக் கோளாறு விரும்பும் வெளிப்பாட்டுக் காரணமாகவே மேற்கொள்ளப்பட்டது” என்று கூறினார். மேலும், தெலுங்கு, கண்டம், மலையாளம் ஆகிய மொழிகள் தத்தம் தனி நிலைகளை நிலைநாட்டுவது அறவே இயலாது என்ற அளவு சமற்கிருத சொற்களை அளவுக்கு மீறி கடன் வாங்கியுள்ளன. ஆதலின், சமற்கிருத கலவைகளை கைவிடுவது தெலுங்கு மொழிக்கு அரிதாம் என்பது உண்மை. கன்னடத்திற்கு அதனிலும் அரிதாம். மலையாளத்திற்கு அவை எல்லாவற்றை காட்டிலும் அரிதாம் என்றவர்.
ஆனால், திராவிட மொழிகளில் அனைத்திலும் உயர் தனிச் செம்மொழியாய் நிலைபெற்று விளங்கும் “தமிழ்” தண்ணிடையே இடம் பெற்றிருக்கும் சமற்கிருத சொற்களை அறவே ஒழித்துவிட்டு தனித்து உயிர் வாழ்வதோடு அவற்றின் துணையை ஒரு சிறிதும் வேண்டாமல், வளம் பெற்று வளர்வதும் இயலும், அவ்வாறு கைவிடுவது ஒன்றினாலேயே, தமிழ் மொழி முன்னைய நிலையிலும் சிறந்த உயர் தனிச் செம்மொழியாக பெரு நிலையை பெற்றுவிடும் என்று கூறினார்.
“கால்டுவெல்” பெருமகனாரின் இந்த ஆய்வு நூல், தேவ பாஷையான சமற்கிருதம் தான் இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி, மற்றதெல்லாம் நீஷ மொழிகள் என்று எளனம் செய்துகொண்டிருந்த வடமொழி ஆசிரியர்கள் எல்லோரையும் அடித்து தள்ளியது.
உலக அரங்கில் இருந்த அனைத்து மொழி அறிஞர்களும் “கால்டுவெல்” அவர்களின் ஆய்வு முடிவுகளை ஏற்றனர். கால்டுவெல்லின் ஆய்வுகளில் மொழி ஆய்வு அனைவராலும் போற்றப்பட்டது. கால்டுவெல் பெருமகனாரின் ஆய்வுப்பணிகளைக் கண்ட “கிளாஸ்கோ” பல்கலைக்கழகம் அவருக்கு முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. அதன் பிறகுதான், தமிழ் மொழியும் செம்மொழி தான் என்று உலகமே ஒத்துக் கொண்டது.
Born: 7 May 1814, Clady, United Kingdom
Died: 28 August 1891, Kodaikanal, India
Education: University of Glasgow
Known for: Bishop in South India
Bishop Robert Caldwell (7 May 1814 – 28 August 1891) was a missionary and linguist, who academically established the Dravidian family of languages. He served as Assistant Bishop of Tirunelveli from 1877. He was described in The Hindu as a "pioneering champion of the downtrodden" and an "avant-garde social reformer". The Government of Tamil Nadu has created a memorial in his honor and a postage stamp has been issued in his name. a statue of Caldwell was erected in 1967 near to Marina Beach, Chennai, as a gift of the Church of South India.
கால்டுவெல் அவர்கள் பல மொழிகளை கற்றவர், இந்தியாவுக்கு வந்தபின்னர் 15,மொழிகளைக் கற்றுக்கொண்டார்.இப்போதுள்ள நூல்களின் வரிசையில் திராவிடம் என்ற சொல் முதன்முதலில் கால்டுவெல் அவர்களால் தான் பயன்படுத்த ப்பட்டுள்ளது. இந்த மண்ணில் காலம் காலமாக வாழ்ந்தவர்கள் திராவிடர்கள்(தமிழர்கள்) அவர்கள் பேசிய மொழி தமிழ் என்பதை சரியான ஆய்வுகளின் படி உலகிற்கு காட்டியவர்.தமிழ் மொழி செம்மொழி என்று உலகிற்கு ஆதாரத்துடன் எடுத்து கூறியவர்
பல்வேறு வட்டார வழக்குகளை கொண்டுள்ள தமிழ்மொழியின் பேச்சு வழக்கை தெரிந்துகொள்ளவும், தமிழ்மொழியின் மூலத்தை ஆய்வு செய்யவும் விரும்பிய கால்டுவெல் ஏறத்தாழ நானூறு கல்தொலைவில் உள்ள திருநெல்வேலிக்கு நடந்து செல்லத் தீர்மானித்தார்.இந்த ஆய்வுகளின் முடிவில் கிடைத்த தகவல்களை கொண்டு "திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு (A Political and General History of the District of Tinnevely)'' என்னும் நூலை எழுதினார். இது 1881-ஆம் ஆண்டில் மதராசு அரசினால் வெளியிடப்பட்டது. "தொடக்க காலம் முதல் கி.பி. 1881 வரையிலான திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறுகளை கொண்ட இந்நூலில், இந்தியர்களுக்கு வரலாற்று அறிவோ, நிகழ்வுகளை ஆவணப்பூர்வமாக பதிந்துவைக்கும் அவசியமோ தெரியவில்லை என்ற பொதுவான குற்றச்சாட்டுடன் தொடங்கும் கால்டுவெல், ஒன்பது பகுதிகளாக நூலை எழுதியிருக்கிறார். முதல் இயலில் மாலிக்காபூர் படையெடுப்பு, காயல் துறைமுகத்தில் நடந்த முத்துக்குளிப்பு என ஒவ்வொரு இயலையும் வரலாற்றுப் பூர்வமாக உருவாக்கியிருக்கிறார். கட்டபொம்மன் தூக்கிலிடப்படும் நிகழ்வு, ஊமைத்துரை, மருது சகோதரர்களை ஆங்கிலேயர் வென்ற நிகழ்வுகள், முகமது யூசுப்கானிடமிருந்து மதுரையை ஆங்கிலேயர் கைப்பற்றிய வரலாறு போன்றவை தெளிவாக இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இந் நூலில், பழைய ஈபுரு மொழியில் வழங்கும் துகி என்னும் சொல் தமிழின் தோகை என்னும் சொல்லின் திரிபு எனவும்,அரிசி என்பது கிரேக்க மொழியில் அருசா என வழங்குவதையும் குறிப்பிட்டுள்ள கால்டுவெல், பழந்தமிழரின் வாணிப நகரமாக இருந்த கொற்கைத் துறைமுகம் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு, துறைமுகத்தின் அருகே இருந்த அக்கசாலை (பொற்காசு செய்யும் இடம்) என்ற ஊரின் சிறப்பை வெளிக்கொண்டுவந்தார்.
இந்த காலகட்டங்களில், சிங்கள வரலாற்று இலக்கிய நூலான மகாவம்சம் நூலின் துணைகொண்டு ஈழ-தமிழக உறவுகளையும் கால்டுவெல் ஆய்வு செய்தார், பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய மொழிகள் பற்றி மேல்நாட்டு அறிஞர்கள் எழுதிய பலகட்டுரைகளை ஆய்வு செய்தார். அவ்வகையில் பழந்தமிழ்ச்சொற்களைப் பழங்கன்னடச் சொற்களோடும் பழைய தெலுங்குச் சொற்களோடும் கால்டுவெல் ஒப்புநோக்கிய போது அடிச்சொற்கள் ஒத்திருப்பதைக் கண்டார். தென்னிந்திய மொழிக் குடும்பத்தில் 6 மொழிகள் திருந்திய மொழிகள் எனவும் 6 மொழிகள் திருந்தாத மொழிகள் எனக்கண்டார்.
ஏறத்தாழ 15 ஆண்டுகள் கடுமையாக உழைத்து தென்னிந்திய மொழிகளுக்கு இடையே உள்ள உறவுகளை ஒப்பிட்டுத் தான் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளையும், தமிழகமெங்கும் தாம் மேற்கொண்ட பயணத்தின் வழியாக மொழிகளில் தனக்கு கிடைத்த தரவுகளை ஓன்று திரட்டிய “கால்டுவெல்” ஆய்வுக்கட்டுரைகளை எழுதினர். பின்னர் அவற்றையெல்லாம் தொகுத்து 1856-ல், “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்ற ஆய்வு நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டார்.
அதில், மலையாளம், தெலுங்கு, கன்னடம்,துளு ஆகிய மொழிகளில் உள்ள சமற்கிருத மொழியின் கலப்பு குறித்த தனது ஆய்வில், இந்த மொழிக்கலப்பு உண்மையான தேவை குறித்து மேற்கொள்ளாது, காலக் கோளாறு விரும்பும் வெளிப்பாட்டுக் காரணமாகவே மேற்கொள்ளப்பட்டது” என்று கூறினார். மேலும், தெலுங்கு, கண்டம், மலையாளம் ஆகிய மொழிகள் தத்தம் தனி நிலைகளை நிலைநாட்டுவது அறவே இயலாது என்ற அளவு சமற்கிருத சொற்களை அளவுக்கு மீறி கடன் வாங்கியுள்ளன. ஆதலின், சமற்கிருத கலவைகளை கைவிடுவது தெலுங்கு மொழிக்கு அரிதாம் என்பது உண்மை. கன்னடத்திற்கு அதனிலும் அரிதாம். மலையாளத்திற்கு அவை எல்லாவற்றை காட்டிலும் அரிதாம் என்றவர்.
ஆனால், திராவிட மொழிகளில் அனைத்திலும் உயர் தனிச் செம்மொழியாய் நிலைபெற்று விளங்கும் “தமிழ்” தண்ணிடையே இடம் பெற்றிருக்கும் சமற்கிருத சொற்களை அறவே ஒழித்துவிட்டு தனித்து உயிர் வாழ்வதோடு அவற்றின் துணையை ஒரு சிறிதும் வேண்டாமல், வளம் பெற்று வளர்வதும் இயலும், அவ்வாறு கைவிடுவது ஒன்றினாலேயே, தமிழ் மொழி முன்னைய நிலையிலும் சிறந்த உயர் தனிச் செம்மொழியாக பெரு நிலையை பெற்றுவிடும் என்று கூறினார்.
“கால்டுவெல்” பெருமகனாரின் இந்த ஆய்வு நூல், தேவ பாஷையான சமற்கிருதம் தான் இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி, மற்றதெல்லாம் நீஷ மொழிகள் என்று எளனம் செய்துகொண்டிருந்த வடமொழி ஆசிரியர்கள் எல்லோரையும் அடித்து தள்ளியது.
உலக அரங்கில் இருந்த அனைத்து மொழி அறிஞர்களும் “கால்டுவெல்” அவர்களின் ஆய்வு முடிவுகளை ஏற்றனர். கால்டுவெல்லின் ஆய்வுகளில் மொழி ஆய்வு அனைவராலும் போற்றப்பட்டது. கால்டுவெல் பெருமகனாரின் ஆய்வுப்பணிகளைக் கண்ட “கிளாஸ்கோ” பல்கலைக்கழகம் அவருக்கு முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. அதன் பிறகுதான், தமிழ் மொழியும் செம்மொழி தான் என்று உலகமே ஒத்துக் கொண்டது.
Saturday, October 14, 2017
The Tribe Film
The Tribe (Ukrainian: Плем'я, Plemya) is a 2014 Ukrainian drama film written and directed by Myroslav Slaboshpytskiy. Starring Hryhoriy Fesenko, Yana Novikova and Roza Babiy, the film is set in a boarding school for deaf teenage students, where a novice scholar is drawn into an institutional system of organized crime, involving robbery and prostitution. He crosses a dangerous line when he falls for one of the girls to whom he's assigned to pimp. The film is entirely in Ukrainian Sign Language with no subtitles. It won the Nespresso Grand Prize, as well as the France 4 Visionary Award and the Gan Foundation Support for Distribution Award at the 2014 Cannes Film Festival's International Critics' Week section.
Harmata Film Production with the support of Hubert Bals Fund, Ukrainian State Film Agency, Rinat Akhmetov Foundation For Development of Ukraine co-financed the film. Cinematographer and editor Valentyn Vasyanovych shot the film in 1:2.39 aspect ratio and on 35mm film. Filming commenced in early 2013 in Kyiv.
The Tribe was widely admired and considered a contender for the Academy Award for Best Foreign Language Film at the 87th Academy Awards. There was some controversy over the voting process after The Guide was nominated by Ukraine.
காது
கேளாதோருக்கான பள்ளி அது. மாணவர்கள் மத்தியில் ஏற்கனவே இருக்கும் போதை
பழக்கம், விபச்சாரம், அதை நிர்வகிக்கும் ஒரு கேங்க்ஸ்டர் கூட்டம். அங்கு
தங்கி படிக்க வரும் புது மாணவன்.
வெகு விரைவில் கேங்க்ஸ்டர் கூட்டத்தில் கலப்பவன், இரண்டு மாணவிகளுக்கு Pimp'ஆக நியமிக்கபடுகிறான். அதில் ஒருத்தியுடன் காதல் வர, அதனால் ஏற்படும் பிரச்சனைகள். முடிவில் என்ன ஆனது என்பது தான் படம்.
மொத்த படமும் காது கேளாதோர் பள்ளி என்பதால் ஒரு டயலாக் கிடையாது. படத்துக்கு சப்டைட்டில் கூட இல்லை. அவர்கள் சைகை பாஷை பேசுவதை வைத்து மட்டுமே நாம் புரிந்து கொள்ள வேண்டும். பின்னனியில் இயற்கையான சத்தங்கள் தவிர்த்து இசை என்பது மருந்துக்கும் இல்லை... ஒரு பேரமைதியுடன் படம் பயணிக்கிறது. சிறிது நேரத்திலேயே அவர்கள் உலகுக்குள் நம்மையும் இழுத்து கொள்கிறார்கள். இசை இல்லாமல் நடக்கும் கருக்கலைப்பு காட்சி நம்ம வயிற்றில் ஏதோ செய்கிறது.
காது கேளாத, வாய் பேச முடியாத நபர்களின் வாழ்க்கை முறை, அவர்களுக்குள் ஏற்படும் காதல், காமம், ஆசை, வன்முறை, திருட்டுத்தனம், பெண்கள் இடைவிடாமல் 'பேசி'க்கொண்டே இருப்பது என மனித சுபாவங்கள் அனைத்தும் சிறிய குறைபாட்டினால் எந்த அளவிலும் வேறுபடாமல் கொடுக்கப்பட்டிருக்கிறது.
கதையில் காது கேட்காததால் ஏற்படும் பிரச்சனைகளை காட்சி படுத்திய விதம் அருமை.
கலவியின் ஆரம்பத்தில் முத்தமிட சம்மதிக்காத பெண், முடிவில் சம்மதிப்பாள். பொதுவா உடலுறவுக்கு சம்மதிக்கும் பாலியல் தொழிலாளிகள், முத்தமிட சம்மதிக்க மாட்டார்கள் என கேள்விப் பட்டிருக்கிறேன். முத்தம் காதலுக்கானது. வார்த்தைகளற்ற அவர்கள் மத்தியில் மலரும் காதலை இப்படி காட்சிபடுத்தியிருப்பார் இயக்குனர். செம.. :)
படத்தோட துணை தலைப்பு இப்படி சொல்கிறது.. No Subtitles, No Voice over, because for love and hatred you don't need translation......

The History of Atomic - Model
Aristotle (350 B.C.) disagreed with Democritus's model of the atom in Aristotle was a Greek philosopher. Many of his ideas were more thought based than scientifcially based. For this reason, Aristotle strongly disagreed with Democritus. He felt that there was no smallest part of matter and that different substances were made of earth, fire, air, and water. Aristotle did not have an atomic model due to the fact that he thought atoms did not exist.
Democritus was the first scientist to create a model of the atom. He was the first one to discover that all matter is made up of invisible particles called atoms. He created the name "atom" from the Greek word "atomos", which means uncuttable. He also discovered that atoms are solid, insdestructable, and unique. HIs model was just a round solid ball. Democritus didn't know about a nucleus or electrons, all he knew was that everything is made of atoms.
Lavoisier was a French nobleman that founded several elements and put the first table of elements together. He used Aristotle's ideas of fire, earth, air, and water to create experiments invesigating combustion and oxidation. By using previous knowledge of atomic bonding, he discovered important elements like oxygen, hydrogen, and sulfur. He discovered that water was made of oxygen and hydrogen, and air included nitrogen. Lavoisier also created the first chemistry textbooks and tables.
Dalton's atomic theory
John Dalton developed an atomic theory in the 1800s. He did experiments, worked out some atomic weights and invented symbols for atoms and molecules. His most important conclusions are summarised below:
- All matter is made of atoms
- Atoms cannot be broken down into anything simpler
- All the atoms of a particular element are identical to each other and different from the atoms of other elements
- Atoms are rearranged in a chemical reaction
- Compounds are formed when two or more different kinds of atoms join together
Dalton's theory was developed and changed as new evidence was discovered.
JJ Thomson's discovery of the electron
JJ Thompson discovered the electron in 1897. This showed that the atom contained smaller pieces, whereas Dalton had thought that atoms could not be broken down into anything simpler.
Rutherford's nuclear atom
In 1911 Ernest Rutherford used experimental evidence to show that an atom must contain a central nucleus. This was further evidence that an atom contained smaller pieces.
Bohr's electron orbits
Niels Bohr further developed Rutherford's nuclear atom model. He used experimental evidence to support the idea that electrons occupy particular orbits or shells around the nucleus of an atom.
The development of the theory of atomic structure is an example of:
- How a theory may change as new evidence is found
- How a scientific explanation is provisional but may become more convincing when predictions based on it are confirmed later on.
Marie and Pierre Curie were a European couple that contributed to atomic chemistry by exploring the mysteries of radioactivity. After radiation was discovered by Henri Baquerel, Marie decided to look further into this discovery. Through this she and her husband discovered the elements radium and polonium and won the Nobel Peace Prize for their works in radioactivity. Her discovery later added to the atomic model.
http://www.bbc.co.uk/schools/gcsebitesize/science/add_ocr_gateway/periodic_table/atomstrucrev5.shtml
Sunday, October 8, 2017
Subscribe to:
Posts (Atom)