Search This Blog

Sunday, November 5, 2017

விழித்திரு படத்தின் விமர்சனம் Vizhithiru Movie Review



இரவு என்பது மிகவும் அழகான திரில் . எத்தனை பேர் சென்னையில் இரவில் சுற்றி வந்து இருப்பீர்கள் என தெரியாது . உங்களுக்கு அந்த அனுபவம் இல்லையென்றால் " விழித்திரு" திரைப்படம் பார்க்கலாம் .அமைதியாக இருக்கும் இரவு , விரிச்சோடி கிடைக்கும் சாலைகள் இவைகளை தாண்டி எங்கோ ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்து கொண்டுதான் இருக்கும் . சிலருக்கு அந்த இரவு வாழ்வை முடித்து விடும் கோரத்துடன் அணுகி கொண்டு இருக்கும் . அது காலையில் நாம் காபி சாப்பிட , சுவையான செய்தியாகி கையில் நிற்கும் .இப...்படிப்பட்ட இரவில் நடக்கும் சம்பவங்களை உங்களை தியேட்டர் இருளில் அமரவைத்து ,வெளிச்சம் போட்டு காட்டுகிறார் இயக்குனர் மீரா கதிரவன் .ஒவ்வொரு சம்பவங்களும் , பார்க்கும் நம்மை பதற வைக்கிறது இரவில் துவங்கி விடியலுக்குள் முடிந்து விடுவதாக நான்கு சம்பவங்களை கோர்வையாக்கி அமைக்கப் பட்ட திரைக்கதை . கொஞ்சம் சவாலான பின்னல் தான் . அதை சாமர்த்தியமாக செய்திருக்கிறார் இயக்குனர் . படம் சமூக அக்கறையுடன் கூடிய விஷயத்தை முன்னிறுத்தினாலும் , கமர்ஷியல் ரசிகர்களுக்கான விருந்தாகத்தான் இருக்கிறது . இரவில் படம் பிடிக்க எவ்வளவு சிரமப் பட்டிருப்பார்கள் என்பது புரிகிறது . தன்ஷிகா ,விதார்த் , கிருஷ்ணா , வெங்கட்பிரபு , தம்பி ராமையா , அபிநயா என்று திரை நிரம்பி நட் ச்சத்திரங்கள் இருந்தாலும் , அத்தனை பேரையும் நன்றாக வேலை வாங்கி நடிக்க வைத்து இருக்கிறார் இயக்குனர் . மில்டனின் கேமரா அருமை .புதிய இசையமைப்பாளர் சத்யன் மகாலிங்கம் பிண்ணனி இசையை உறுத்தாமல் செய்திருக்கிறார் . காட்சிக்கு சில இடங்களில் இசை வலிமை சேர்க்கிறது . நல்ல திரைப்படம் . சரியான மழை நேரத்தில் வெளி வந்திருக்கிறது . ஆனாலும் தியேட்டரில் ஆர்வத்துடன் வந்து பார்க்கும் ரசிகர்களை காணும் போது நல்ல திரைப்படத்தை ரசிக்க மக்கள் தயாராகவே இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது .
Govindarajan Vijaya Padma நான்கு வெவ்வேறு கதைகள் ஒரே இடத்தில் சந்திப்பதே ‘விழித்திரு’ படத்தின் கதை.

திருட்டு தொழில் செய்து வரும் விதார்த், ஒரு வீட்டிற்கு திருட செல்கிறார். அதே வீட்டிற்கு திருட சென்ற தன்ஷிகாவை, வீட்டின் உரிமையாளர் தம்பி ராமையா அவரை திருமண கோலத்தில் கட்டி வைத்திருக்கிறார். அதைக்கண்ட விதார்த், தன்ஷிகாவை காப்பாற்றி தன்னுடன் அழைத்துச் செல்கிறார். திருடிய நகைகளை ஒருவருக்கொருவர் எப்படி ஏமாற்றி அடையலாம் என்று திட்டம் போட்டு வருகிறார்கள்.

இது ஒருபக்கம் நடக்க, ஊரில் இருந்து வெளிநாட்டுக்கு செல்வதற்காக சென்னை வருகிறார் கிருஷ்ணா. வந்த இடத்தில் பர்ஸை பறிக்கொடுக்கிறார். இதனால் தற்காலிகமாக கால் டாக்சி டிரைவராக வேலைக்கு செல்கிறார். இவரது காரில் பத்திரிகையாளரான சரண் பயணிக்கிறார். அமைச்சர் மற்றும் போலீஸ்காரர் இருவரும் ஒரு பிரச்சனையில் ஊரை நாசம் செய்த ஆதாரத்தை பத்திரிகையாளரான சரண் வைத்திருப்பதால், அந்த காரில் கொலை செய்யப்படுகிறார். இதை கிருஷ்ணா பார்த்ததால், அவரை கொல்ல அமைச்சரும் போலீஸ்காரரும் திட்டம் போடுகிறார்கள்.

நான்கு வெவ்வேறு கதைகளை உருவாக்கி அதில் ஒரே கிளைமாக்ஸ் வைத்து ஒரே இரவில் நடிக்கும்படியான படத்தை இயக்கி இருக்கிறார் மீரா கதிரவன். ஒவ்வொரு மனிதனும், தான் சந்திக்க கூடிய ஒருவர், தமக்கு நல்லதோ, கெட்டதோ செய்தால், நம் வாழ்க்கை அவனுடையே பயணிக்கும் என்பதை மையக்கருவாக வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார். காட்சிகள் மாறி மாறி வருவதால் சுவாரஸ்யம் குறைகிறது. சிறப்பான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அவர்களிடம் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர்.

சத்யன் மகாலிங்கம் இசையில் பாடல்கள் கேட்கும். பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். விஜய் மில்டன், ஆர்.வி.சரண் ஆகியோரின் ஒளிப்பதிவு கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.


No comments:

Post a Comment