Search This Blog

Thursday, November 21, 2024

இடிபஸுக்கு எதிராக நூலிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட பகுதிக்கான விளக்கம்:

 


குடும்பத்தை முன்னெடுப்பதன் மூலமே உளவியல் சிக்கலைத் தீர்க்க முடியும் என்று கொண்டிருக்கும் உளவியலாளர்களுக்கான தீவிர விளக்கமாக நூலாசிரியர்கள் இந்தப் பகுதியில் சொல்கிறார்கள். குடும்பவாதம் மூலம் உளப்பகுப்பாய்வாளர்கள் எளிமையாக உளவியல் சிக்கல்களுக்குத் தீர்வு கண்டுவிடலாம் என்ற பொதுமைப்படுத்தலை மேற்கொள்கின்றனர் என்பதை நூலாசிரியர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
பெற்றோர்களுக்கான பங்கு வெறும் தூண்டல்களைச் செய்பவர்கள் என்று பார்ப்பதில் உளப்பகுப்பாய்வாளர்களுக்குப் பெரும் சிக்கல் உள்ளதை நூலாசிரியர்கள் எடுத்துக்காட்டுகிறார்கள். குடும்பம் என்பது அப்பாலையான நிலை கொண்டது என்பதையும் அவர்கள் ஏற்க முடியாமல் தவிக்கிறார்கள். அதனால் அவர்கள் குடும்பத்தை முன்வைத்து மட்டுமே உளவியல் சிக்கல்களுக்குத் தீர்வு காண முடியும் என்று தங்கள் ஆய்வுப் பரப்பைச் சுருக்கிக் கொண்டுவிடுகிறார்கள் என்று நூலாசிரியர்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.
அது மட்டுமல்லாமல் குடும்பத்தை முன்னெடுக்க ஒவ்வொரு தனிமனிதரின் விருப்பத்தின் போக்கை நசுக்கி, குடும்பத்திற்குள் மட்டுமே அவர்கள் தங்களின் வேட்கைகளுக்குத் தீர்வு காணவேண்டும் என்று இடிபலை நோக்கி உளவியல் சிக்கலுள்ள நோயாளிகளைத் திசை திருப்புகிறார்கள் என்பதையும் நூலாசிரியர்கள் தெளிவாக வரையறுக்கிறார்கள்.
இந்த விளக்கத்தை வாசித்த பின் கீழ்க்கண்ட மொழிபெயர்ப்பை வாசிக்கலாம்:
……………….
இடிபஸுக்கு எதிராக-முதலாளித்துவமும் மனச்சிதைவும் –ஜைல் டெல்யூஜ் & பிலிக்ஸ் கத்தாரி (மொழிபெயர்ப்பு: முபீன் சாதிகா & நிஜந்தன்)
இதைவிட மோசமானதும் இருக்கிறது: அத்தகைய ஒரு முன்னுரிமையைப் பயன்படுத்துவதன் மூலம் ஒருவர் எந்த வகையிலும் குடும்பவாதத்தைக் கறாரான அர்த்தத்தில் கைவிடுவதில்லை என்பது தெளிவாகிறது, இது உளப்பகுப்பாய்வு அனைத்திற்கும் சுமையாக உள்ளது; மாறாக, அதன் மூலம் ஒருவர் குடும்பவாதத்திற்குள் ஆழமாக மூழ்கி அதைப் பொதுமைப்படுத்துகிறார்.
ஓர் அலட்சியமான இயல்பின் தூண்டு பொறிகளாக, நனவிலியின் செயல்பாடுகளுக்குள் தங்கள் உண்மையான இடங்களில் பெற்றோர்கள் வைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் உருவாக்குபவரின் பங்கு, குறியீட்டுக் கட்டமைப்பு அல்லது இன்னும் குடும்பத்துடையதும் அதன் இடிபல் அணியின் ஒரு பகுதியாக இருப்பதுமான கட்டமைப்புக் கூறுகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குடும்பத்தை அப்பாலை நிலை கொண்டதாக மாற்றுவதற்கான வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்ற எளிமையான அறியாமையால் மீண்டும், தப்பிக்க வேறு ஒரு வழி இல்லாமல் ஒருவர் அகப்பட்டுவிடுகிறார்.
உளப்பகுப்பாய்வின் குணப்படுத்த முடியாத குடும்பவாதம், இடிபஸுக்குள் நனவிலியை அடைத்தல், அனைத்து முக்கிய ஓட்டங்களையும் துண்டித்தல், விருப்ப-உற்பத்தியை நசுக்குதல், நோயாளியை அப்பா-அம்மாவுக்கு பதிலளிக்க ஏற்றதாக மாற்றுதல், எப்போதும் அப்பா-அம்மா என்பதையே நுகர வேண்டும் என்று ஆக்குதல் ஆகியவையாகத்தான் இருக்கின்றன.
Thanks

Mubeen Sadhika

No comments:

Post a Comment