வானொலி: அடுத்ததாக, உங்களிடம் ஒரு அரசியல் கேள்வி, பிற்கால இந்தியா எப்படி இருக்கும்?
நாகேஷ்: அது ஒரு டைப்பாத்தான் இருக்கும். இப்ப உங்க ஆஸ்த்திரேலியா இருக்கே, அங்க வந்து கிரிக்கெட், விஞ்ஞானம், கங்காரு, புல்வெளிகள், பால், விவசாயம், இதெல்லாம் முன்னேறிக்கிட்டே இருக்கு. அங்கிருக்கும் தமிழர்கள்....நீங்க தயவு செய்து எனக்காக இல்லை மைக்கு....ஒண்ணு கண்டுபிடியுங்க. அந்த மைக் முன்னால் நின்னு யாராவது பேசுறாங்கன்னா....அவங்க பேசும் போது ஒரு சின்னப் பொய் சொன்னாக் கூட அந்த மைக் டைம் பாம் மாதிரி... வெடிச்சு பேசுறவனுடைய தலை சுக்கு நூறாலகி....செத்துடணும்...on the spot.
ஏன்னு கேட்டா.....இவன் எடுக்கும் போதே....அன்பார்ந்த சகோதரிகளே, தாய்மார்களேன்னுதான் ஆரம்பிக்கிறான். இதில அன்பு இருக்கா? சகோதரி மாதிரிப் பார்க்கிறானா? அப்படின்னு ஆரம்பிக்கும் போதே....டமால் அப்படின்னு வெடி வெடிக்கும். இவன் இருக்க மாட்டான். அனேகமாக மைக் முன்னால பேசுறதுக்கு எவனுமே வரமாட்டான்.
மைக் முன்னால பேசுறத நிறுத்த முடிஞ்சா, சத்தியமா எந்த நாடும் முன்னுக்கு வரும் சார்.
மைக் முன்னால பேசுறத நிறுத்த முடிஞ்சா, சத்தியமா எந்த நாடும் முன்னுக்கு வரும் சார்.
- சிட்னியிலிருந்து ஒலிபரப்பப்படும் , ' தமிழ்முழக்கம் '
வானொலி நிகழ்ச்சிக்கு நாகேஷ் அளித்த பேட்டியிலிருந்து ! ( மீள் பதிவு )
வானொலி நிகழ்ச்சிக்கு நாகேஷ் அளித்த பேட்டியிலிருந்து ! ( மீள் பதிவு )
No comments:
Post a Comment