Search This Blog

Friday, November 22, 2024

"ஒரே ராகம்" தர்மவதி ராகத்தில் அமைந்த திரை இசைபாடல்கள்

 தர்மவதி கருநாடக இசையின் 59வது மேளகர்த்தா இராகமாகும். எப்பொழுதும் பாடக்கூடிய இராகம். அசம்பூர்ண மேளபத்ததியில் இந்த இராகத்திற்கு தாமவதி என்று பெயர்.

 

இலக்கணம்

 

தர்மவதி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

ஆரோகணம்: ஸ ரி222 ப த2 நி3 ஸ்

அவரோகணம்:   ஸ் நி32 ப ம22 ரி2

"திசி" என்றழைக்கப் படும் 10வது சக்கரத்தில் 5 வது மேளம்.

இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

சிறப்பு அம்சங்கள்

பிரத்தியாகத கமக சஞ்சாரங்களும், தாட்டு சுரப்பிரயோகங்களும் இந்த இராகத்திற்கு அழகைக் கொடுக்கின்றன.

நிஷாதம் நன்கு தீர்க்கமாகவும், கமகமாகவும் பிடிக்கப்படுகின்றது.

23வது மேளமாகிய கௌரிமனோகரியின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும்.

மூர்ச்சனாகாரக மேளம். இதன் ரிஷப, பஞ்சம மூர்ச்சனைகள் முறையே சக்ரவாகம் (16), சரசாங்கி (27) ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கும்.

உருப்படிகள்

கிருதி : ஓடோடி வந்தேன் : ஆதி : அம்புஜம் கிருஷ்ணா.

கிருதி : பரந்தாமவதீ : ரூபகம் : முத்துசாமி தீட்சிதர்.

கிருதி : ஒரு நாள் வாழ்வே : மிஸ்ர ஜம்பை : பெரியசாமி தூரன்.

கிருதி : கந்தா பக்த : மிஸ்ரசாபு : கோடீஸ்வர ஐயர்.

கிருதி : பஜனசேயராதா : ரூபகம் : மைசூர் வாசுதேவச்சாரியார்.

ஜன்ய இராகங்கள்

தர்மவதியின் ஜன்ய இராகங்கள் கீழ் வருமாறு.

 

ரஞ்சனி

ஹம்சநாதம்

சாரங்கதரங்கிணி

கைகவசி

தௌம்யராகம்

தீரகுந்தலி

சுத்தநவநீதம்

விஜயநாகரி

லலிதசிம்ஹாரவமு

சுவர்ணாம்பரி

மதுவந்தி

திரையிசைப் பாடல்கள்

No comments:

Post a Comment