Karunakaran Sivarasa
அரசியல்
ரீதியாக மேற்கொள்ள வேண்டிய பல விடயங்களைச் செய்யாமல் விட்டுவிட்டு அந்தத்
தவறுகளை மறைப்பதற்காக நீதி மன்றில் வழக்காடி வென்றதாகப் படம் காட்டுவது
தமிழர்களை படு முட்டாளாக்கும் செயற்பாடே...
அரசியல் தீர்மானங்களைச்
சரியாக எடுத்திருந்தால் அல்லது தீர்மானங்களை எடுப்பதற்கு
முயற்சித்திருந்தால் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்திருக்கும்.
இப்படி நீதிமன்றப்படிகளில் ஏறி இடைக்காலத் தடை உத்தரவு என்ற சில்லறைத்
தீர்வுகளைப் பெற வேண்டி வராது...
இதைத்தான் முன்னரும் தமிழ்த் தலைவர்கள் செய்தனர். தங்களுடைய அரசியல்
பணிகளைச் செய்யாமல் அவர்கள் பிரபல சட்டத்தரணிகளாகவே புகழ் பெற்றனர்...
அரசியற் தலைவர்களாகச் செயற்பட்டிருந்தால் பல விடயங்களில் முன்னேற்றமும் மாற்றமும் ஏற்பட்டிருக்கும்.
ஏனென்றால் அரசியல் என்பது வித்தை அல்ல. அது ஒரு விளைவு.
ஆகவே தமிழ்ச்சனங்களின் காதுகளில் பூவைப்பதை விட்டு விட்டு ஆக்கபூர்வமாக -
அரசியல் ரீதியாகச் செயற்பட்டு தீர்வைக் காண முயற்சியுங்கள்.
அரசியலில்
சுமந்திரன் கீழிறங்குவதையும் மனோ கணேசன் மேலுயர்வதையும் பார்க்கிறோம்.
இருவரும் ஆட்சியிலுள்ள ஐ.தே.க அரசாங்கத்தையே ஆதரிக்கின்றனர். மனோ கணேசன்
வெளிப்படையாக ஆதரிக்கிறார். சுமந்திரன் மறைத்துச் சுழித்து விளையாட
முற்படுகிறார். ஆனால் மனோ அரசாங்கத்தை ஆதரிக்க
வேண்டிய இடத்தில் ஆதரிக்கிறார். எதிர்க்க வேண்டிய இடத்தில் எதிர்க்கிறார்.
நெருக்கடியைக் கொடுக்க வேண்டிய இடத்தில் நெருக்கடியைக் கொடுக்கிறார்.
இதுதான் சாணக்கிய அரசியல். அவரே சொல்வதைப்போல தேவைக்கேற்ப ஆதரவாளராகவும்
எதிர்த்தரப்பு ஆளாகவும் செயற்படுகிறார்.
ஆனால், சுமந்திரனோ எப்போதும் ரணிலையும் அவருடைய அரசாங்கத்தையும் பாதுகாப்பதையே குறியாகக் கொண்டிருக்கிறார். ரணிலுக்குத் தலையிடி என்றால் பதறிப்போய் பனடோலும் தண்ணீருமாக ரணலின் காலடியில் நிற்கிறார். இதுதான் சனங்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. இதை மறைப்பதற்கே அவர் நீதி மன்றத்தின் மூலமாகப் போராடுவதாகக் காட்டுகிறார். இதில் இரண்டு வகையான உத்திகளைச் சுமந்திரன் கையாள முற்படுகிறார்.
1. மனோ கணேசன் போன்றவர்கள் ஏற்படுத்துகின்ற நெருக்கடியிலிருந்து ரணிலைக் காப்பாற்றுவது. அதாவது, தமிழர்களுக்குச் சாதகமான அரசியல் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன என சிங்கள மக்களிடம் கேள்வி எழுந்தால், அப்படியெல்லாம் இல்லை. இது நீதி மன்ற நடவடிக்கையே தவிர, அரசியல் ரீதியானதல்ல என்று காட்டுவதற்கு.
2. அரசியல் தீர்மானமாக இவற்றை மாற்ற முடியாதவாறு நீதி மன்ற விவகாரமாக முடக்கி வைத்திருப்பது.
ஆக மொத்தத்தில் தானும் செய்யாமல் மற்றவர்களையும் உருப்படியான காரியங்களைச் செய்ய விடாமல் தடுக்கும் வேலை இது.
ஆனால், இதைச் சனங்கள் உணராத விதமாக தான் இலவசமாக வழக்குப் பேசுவதாகக் காண்பிக்கிறார் சுமந்திரன்.
நஞ்சை இலவசமாகக் குடிக்கக் கொடுப்பதைப் போன்ற காரியம் இது.
இல்லையென்றால் தமிழர்கள் எல்லாம் பௌத்தத்துக்கு முன்னுரிமை அளிப்பதற்குச் சம்மதம் என்று சொல்லியிருப்பாரா? அதுவும் பாராளுமன்றத்தில்....
இதற்குப் பிறகும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தமிழரசுக்கட்சியும் ஈழத்தமிழருடைய அரசியலின் விடிவெள்ளியாகச் செயற்படும் என்று யாராவது கனவு கண்டால் அதை விட முட்டாள் தனம் வேறில்லை.

No comments:
Post a Comment