Karunakaran Sivarasa
கூட்டணி அல்லது கூட்டமைப்பு என்பது பல தரப்புகளின் பங்கேற்பு அல்லது கூட்டுச் செயற்பாட்டுக்கான களமாகும்.
இதை அதற்குரிய அர்த்தத்துடன், பெறுமானங்களோடு அணுகுவதற்குப் பதிலாக,
நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக, இது ஏதோ தமக்கு வழங்கப்பட்ட தயவு,
வாய்ப்பு, கொடை, ஆதரவு, சலுகை என்கிற மாதிரியே பல கட்சிகளும் (தலைவர்களும்)
செயற்படுவதைக் காண்கிறோம்.
இதனால்தான் ரெலோவும் புளொட்டும்
தமிழரசுக் கட்சிக்கு முன்னால் தம்முடைய சுயத்தையும் ஆற்றலையும் இழந்து
கைகட்டிக் கொண்டு நிற்கின்றன.
இவ்வாறே ஐக்கிய தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற – அதற்கு
ஆதரவளிக்கின்ற சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை மக்கள் காங்கிரஸ்,
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஜாதிக ஹெல உறுமய, இலங்கை மக்கள் கட்சி போன்றவை
எல்லாம் ரணில் – ஐ.தே.கவின் முன்னால் பவ்வியம் கொள்கின்றன.
இப்படிக் கையைக் கட்டி, வாயைப் பொத்திப் பவ்வியம் கொள்வதற்கு ஏன் தனிக்கட்சி என்ற அடையாளங்கள்? கட்சித் தலைமை என்ற சலுகைகளைப் பெறுவதற்கு மட்டும்தானா?
தனி அடையாளம் என்பது ஒரு அரசியற் கட்சிக்கும் தலைமைக்கும் முக்கியமானது. தொடர்ந்தும் தனித்துவத்துக்கு இடமின்றி உள்ளடங்கியிருக்க முடியாதென்பதால்தான் ஈ.பி.ஆர்.எல்.எவ்வும் (சுரேஸ்) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் (கஜேந்திரகுமார்) கூட்டமைப்பிலிருந்து வெளியேறின என்பது கவனத்திற்குரியது..

No comments:
Post a Comment