திருநள்ளாறு இந்தியாவின் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின், காரைக்கால் அருகில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். இது அண்டை மாநிலமான தமிழ்நாட்டிற்குள்ளே அமைந்துள்ளது. இந்த நகரத்தை சாலை மூலம் சென்றடையலாம். சிவனின் வடிவமான சனீசுவர பகவானுக்கு என்று திருநள்ளாறில் ஒரு கோவில் உள்ளது. சனி பெயர்ச்சி அன்று தர்ப்பாரண்யேசுவரர் கோயிலுக்கு லட்ச கணக்கான பக்தர்கள் இங்கு வருவர்.
தர்ப்பாரண்யேசுவரர் கோயில்
முதன்மைக் கட்டுரை: திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்
திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர்
மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் காரைக்கால் வட்டத்தில் அமைந்துள்ளது.
இத்தலத்தில் இடையனுக்கு இறைவன் காட்சியளித்தார் என்பது தொன்நம்பிக்கை.
இங்குள்ள சனிபகவான் சந்நிதி பிரசித்தி பெற்றதாகும்.
No comments:
Post a Comment