குறிஞ்சிப்பாட்டு - "ஆரியவரசன் பிரகத்தனுக்குத் தமிழறிவித்தற்குப் பாடியது" - கபிலர் என்கிற யக்ஞவல்கியர்! வேள்வி என்பது யக்ஞத்துக்கு - யாகத்துக்கு முன்னர் செய்யப்படுவது. வேள்வி என்பது பிராமணருடனும் கலந்துபேசி முடிவெடுப்பது. யக்ஞ்சம் - யாகம் என்பது வேள்வியில் எடுக்கப்பட்ட முடிவை - இலக்கை அடையவேண்டி; திட்டமிட்டுச் செயல்படுத்துவது. வேள்வியில்மட்டுமே பிராமணர்கள் பங்குபெறுவர். யக்ஞம் என்பது போருக்கு முன்னர் காலாற்படை முதல் சேனாதிபதி படைநடத்துநர் வரை தேர்வுசெய்து வழிமுறைகளை வகுத்து; இலக்கைநோக்கி அனைவரையும் செலுத்தி; இறுதியில் வெற்றியை ஈட்டுவது. சத்திரியர்க்கே உரியது. பிரகத் ஆரண்யக உபநிஷத்: உண்மையில் ஆதியில் இந்த உலகம் பிரம்மமாக இருந்தது; ஒன்றாக இருந்ததால் அது வளர்ச்சிபெற்றிருக்கவில்லை. எனவே இதைக்கட்டிலும் சிறந்த வடிவத்தைப் பிரம்மம் எடுத்தது. அதற்கு சத்ரியத்துவம் என்று பெயர். இந்திரன் வருணன் சோமன் ருத்ரன் பர்சன்யன் யமன் ம்ருத்யு ஈசானன் ஆகியோரும் இவ்வடிவத்தவரே. சத்ரியத்துவத்தைக்கட்டிலும் சிறந்தது வேறெதுவும் இல்லை. அதனால்தான் ராசசுயயாகத்தில் சத்திரியர்க்குக் கீழே பிராமணர் அமர்கின்றனர். சத்ரியத்துவத்தின் கீழ்தான் பிராமணனுக்கு மரியாதை கிடைக்கிறது. அனால் சத்ரியத்துவத்தின் தோற்றுவாய் பிராமணத்துவம் என்பது உண்மையே. எனவேதான் அரசன் உயர்ந்தவனாக இருந்தாலும் பிராமணத்துவத்தையே மூலமாகக் கொள்ளவேண்டியுள்ளது. ஆகவே எவனொருவன் பிராமணனைத் தாக்குகிறானோ அவன் தன்னையே தாக்கிக்கொள்கிறவன் ஆகிறான். தன்னைக்கட்டிலும் சிறந்தவனுக்குக் கேடுவிளைவிக்கிறவன் அதைவிட மோசமான கேட்டைத் தனக்குத்தானே விளைவித்துக்கொள்கிறான். சத்பத பிராமணங்கள்: (சுருக்கமாகக் காண்பொம்) xiv. 4.2.23: முன்னர் இந்த பிரமா; அண்டம் ஒன்றாகமட்டுமே இருந்து; வீரியவடிவத்தில் சத்ரியரை உண்டாக்கினார்; அதாவது கடவுளர்களுள் சக்திமிக்கவர்களாக இந்திரன் வருணன் சோமன் ருத்ரன் பர்ஜனியன் யமன் மிருத்யு ஈசானன் முதலானோர் தோன்றினர். எனவே ராஜசுய யாகத்தில் பிராமணர் சத்ரியர்க்குக் கீழேதான் அமர்வர். அவர் சத்ரியர்க்கு அரசசக்தியைத் தருகிறார். பிரமாதான் சத்ரியரின் பிறப்பிடம். ஆயினும் பிராமணரைத் தனது உயர்வுக்கு மூலாதாரமாகக் கருதி நாடினார். யாரொருவர் பிராமணரை அழிக்கிறார்களோ அவர்கள் தங்களையே அழித்துக்கொள்வதாகும். அவர் வசுக்களைச் சிருஷ்டித்தார். கடவுளர் வகுப்பைச்சேர்ந்த அவர்கள் வசுக்கள் ருத்ரர் ஆதித்தியர் விசுவதேவர் மருத்துகள் ஆகிய சைனியங்களாகப் பெயரிடப்பட்டனர். அவர் சூத்ரர்(புஷன்) வகுப்பைப் உண்டாக்கினார். பூமிதான் புஷனி; அவள் உலகில் வாழ்வன அனைத்தையும் வாழ்விக்கிறாள். அவர் பேரார்வத்தோடு ஒப்பற்ற வடிவில் நியாய(தருமத்)தை உண்டாக்கினார். எனவே சத்ரா -ஆள்பவர்; சத்ராவை ஆள்பவர்தான் நீதிதேவதை. எதுவும் நீதிக்கு மேற்பட்டவையல்ல. இதுதான் பிராமணர் சத்ரியர் வைஷியர் மற்றும் சூத்ரர். அக்னியின் மூலம் கடவுளரிடையே பிரமாவும்; மனிதர்களிடையே பிராமணரும்; மானிட சத்ரியரிடையே தெய்வீகச் சத்திரியரும், மானிட வைசியரிடையே தெய்வீக வைசியரும் மானிடசூத்ரரிடையே தெய்விகச்சூத்ரரும் உருவானார்கள். ஆகவே இவர்கள் கடவுளரிடையே அக்னியிடமும், மானிடரிடையே பிராமணரிடமும் வாழ்வைத் தேடி அலைந்தார்கள். ரிக்வேதம்; iii -34.5: " சோமபௌமன்(சந்திரகுல நகுஷ=செழியன்) தனது கறுப்பு நிறத்தைக் களைந்து ஒளிவீசும் நிறத்தை மேற்கொண்டான்; அதனால் சுக்கிலவருணம்(வெண்மை நிறம்) அதிகரிப்பதாற்கு வகைசெய்தது" சந்தோக்கிய உபநிஷத் குறிப்பிடும் தகவல் வியப்பளிப்பதாகும்; தாழ்ந்த வருணத்தைச்சேர்ந்த சண்டாளன் நாய்களோடும் பன்றிகளோடும் சமமானவனா மிக எளிதில் ஒப்பிட்டுப்பேசப்படுகிறான். பிரகத் ஆரண்யக உபநிஷத்தின் கர்த்தா ஞானி யக்ஞவல்கியர் அக்காலத்தின் சூழ்நிலைகளை வரலாற்றுநோக்கில் நாம்காண உதவுகிறார். இவற்றுள் ஒரே ஆட்சியாளன் இருந்து மக்களும் ஒரே இனம் / வருணம் சார்ந்தோராக இருந்ததையும்; பின்னர் பிராமணரின் / அந்நியரின் வரவால் பல கலப்பினங்கள் உருவாகிக் குழப்பங்கள் ஏற்பட்டு சண்டைசச்சரவுகள் பெருகியதால் சத்திரியர் என்ற பெயரில் தலைமை ஆட்சியாளனையும் அவனுக்குத்துணையாக மேலும் அவனுக்கீழ் கட்டுப்பட்ட சத்திரியராக எட்டுப்பேரை உருவாக்கி ராசசூயயக்ஞத்தைச் செய்துள்ளனர். அப்போது பிராமணர் தங்களுக்கு அந்த யாகத்தில் உரிய இடத்தைக் கோரியபோது சில கருத்துவேற்றுமைகள் உருவாகியிருக்கவேண்டும். முதலிடத்துக்கான கோரிக்கையெனத்தெரிகிறது. ஆயினும் யாகத்தில் முதலிடத்தைச் சத்திரியருக்குக் கொடுப்பதாக முடிவுசெய்துள்ளனர். ஆயினும் பிராமணர் வேண்டாவெறுப்புடனனே இதனை ஏற்றுள்ளபோதிலும் தாங்களே உயர்ந்தவர்கள் என அறிவித்துக்கொண்டதைக் காண்கிறோம். இச்சரவின் வளர்ச்சியை மேலும் பல வேதப்பாடல்கள் எடுத்துரைக்கின்றன. பின்னரே சட்டங்களும் நீதிகளும் உருவக்கப்பட்டுள்ளன என்பதையும் காண்கிறோம். அதன்பின்னரும் கலப்பினத்தில் உருவானோரிடையே அமைதியில்லை என்பதைக் காண்கிறோம். இந்நிலையில்தான் கலப்பினமாக சத்ரியன் சந்திரகொற்றனுக்கும் தாழ்ந்த இனப்பெண்ணுக்கும் பிறந்தவனாகக் கருதப்பட்ட பிம்பிசாரன் கலப்பினத்தில் உருவானோரின் உதவியுடன் - குறிப்பாக மிளேச்சருடன்சேர்ந்து சோழநட்டு சத்திரிய இனப்பெண்ணைப் புணர்ந்து கெடுத்துள்ளான். அதற்குத் துணைநின்ற ஆரியவரசனே பிரகத்தன். அவனே ஆரியப்பேடியாகவும் அமணத்துறவிபோன்ற வேடமிட்டுப் போர்க்களத்திலிருந்து தப்பியோடியதாகவும் சிலப்பதிகாரத்தில் காண்கிறோம். "ஆரியவரசன் பிரகத்தனுக்குத் தமிழறிவித்தற்குப் பாடியது" என்ற குறிப்பு கபிலனின் குறிஞ்சிப்பட்டில் காணப்படுகிறது. எனவே பிரகத்தனுக்கு அறிவுறுத்தியவர் புலவர் கபிலரே. அவராலேயே பிரகத் ஆரண்யக உபநிஷத் உருவாக்கப்பட்டது என்பது உறுதியாகிறது. ஆயினும் அதன் ஆசிரியரின் பெயர் யக்ஞவல்கியர் எனக்கொடுக்கப்பட்டுள்ளது. தொல்தமிழ்ப்பாடல்களில் வேள்விகுறித்து கபிலரால் பாடப்பட்ட பாடல்கள் பல உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பரசுராமனால் பாதிரிப்புலியூரிலிருந்து விரட்டப்பட்ட தமிழந்தணர்கள் கரிகால்சோழன் அகத்தியனாக வாழ்ந்த அன்றைய சேரலத்தின் மலைநாட்டில் வாழ்ந்துள்ளான் என்பதையும்; விரட்டப்பட்ட அந்தணர்கள் அவனது உதவியைநாடிச்சென்றனர் என்பதையும் பெரியபுராணம் உறுதிப்படுத்துகிறது. தமிழ் அந்தணருக்காக மலைக்காடுகளைக்கடந்து சென்று அவர்களின் வருத்தத்தைப்பொக்க முயன்ற கபிலரையும் சிலப்பதிகாரத்தில் காண்கிறோம். பிராமணருக்கும் தமிழ் அந்தணருக்கும் இடையே நிகழ்ந்த பூசலின் வெளிப்பாட்டையே வேதங்களும் உபநிஷத்களும் விரிவாகப்பேசுகின்றன. ரிக்வேதத்தின் 10ஆம் மண்டலமான புருஷசூக்தத்திலும் புருஷனே முதல்வனாகவும் எட்டு வசுக்களாக மேலே குறிப்பிட்டோரும் இடம்பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இதில் புருஷ் என இடம்பெற்றவனே சந்திரகொற்றனின் தந்தை போரஸ்! போரஸ் என்பதையே புருஷ் என மாற்றியுள்ளனர். சாந்தோக்கிய உபநிஷத் குறிப்பிடும் சண்டாளர்களும் பன்றிகளும் நாய்களும் சில மாறுபட்ட இனமக்களையே குறிக்கும். அத்தகையோரை அடையாளப்படுத்துவது இன்றைய சூழ்நிலைக்கு உகந்ததாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் நகுஷன் என்பவனைக் குறித்து விரிவான தகவல்களை மாபாரதமும் புராணங்களும் கொடுக்கின்றன. அவனிடம் கரிகால்சோழனின் நாடு தண்டனைக்கலம் முடியும்வரை ஒப்படைக்கப்பட்டது என்பதையும் பரசுராம மாறிசனுடன் சேர்ந்து தானே இந்திரனாக முயன்றதையும் சோழநட்டையும் மதுரையையும் மாறிச பரசுராமனிடம் ஒப்படைத்துவிட்டு சோலநாட்டை ஆள்வதற்கான ஆரங்களுடன் இலங்கைக்குத் தப்பியோடிய நகுஷனே இராவண செழியன் என்பதைத் தொல்தமிழ்ப்பாடல்களும் தெளிவாகக் காட்டுகின்றன. மணிமேகலையும் உறுதிப்படுத்துகிறது. கபிலரான யக்ஞவல்கியரின் பிரகத் ஆரண்யக உபநிஷத் நூலில் உள்ள கருத்துக்களுக்கு மேலும் சில கருத்துக்களைச் சேர்த்து 'யக்ஞவல்கிய ஸ்மிருதி' என்ற நூலில் இருபிரப்பாளரான சத்திரியரும் பிராமணரும் மட்டுமே பிரம்மம் - ஆன்மா குறித்த சிந்தனைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற வாசகம் சேர்க்கப்பட்டுள்ளது வியப்பளிப்பதாகும். இதேகருத்து மாபாரத்திலும் திருதராஸ்ற்றன் பிரம்மத்தைப்பற்றி விதுரனிடம் விளக்கம் கேட்டபோது "நான் சூத்திரன் என்பதால் அதைப்பற்றி நான் பேசமுடியாது" எனக் குறிப்பிடுவதையும் காண்கிறோம். இந்த விதுரனின் மகனே நகுச இராவண செழியன். அவனையே பின்னர் சத்திரியனாக முயன்றனர் என்பதை ரிக்வேதத்திலும் தொல்தமிழ்ப்பாடல்களிலும் விரிவாகக் காண்கிறோம். இந்நிலையிலேயே முகம்மதியருக்கான அதர்வவேதம் வெளிப்பட்டிருக்கவேண்டும். அதர்வேதத்தை வெகுகாலத்துக்க வேதமாக எவரும் ஏற்கவில்லை என்பதையும் வேதங்களின் வரலாற்றில் காணலாம்! கபிலரான யக்ஞவல்கியர் - யக்ஞங்களைச்செய்வதில் வல்லவர்; அவரது சிந்தனைகளும் கருத்துக்களும் சாக்ரட்டீஸின் சிந்தனைகளிலும் பிளேட்டோவின் சிந்தனைகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை பருவா அவர்கள் குறிப்பிட்டதை வட இந்தியர் எவரும் பொருட்படுத்தவில்லை என்பதுதான் வருந்தத்தக்கது. மேலும் பருவா அவர்களின் நூலில் கிரேக்கச் சிந்தனையாளர்கள் பலரும் தமிழரின் தத்துவங்களையே தங்களுடையதாக மாற்றிக்கொண்டனர் என உணர்த்துவதையும் காணலாம்! அவரது முழுநூலையும் தமிழில் வெளியிட்டுள்ளார்களா? அறிய இயலவில்லை. விரிவான வரலாற்றைச் சான்றுகளுடன் காணவிரும்புவோர்
http://nhampikkai-kurudu.blogspot,com தளத்தில் காணலாம்!sariya Chandrasekaran
No comments:
Post a Comment