Search This Blog

Wednesday, March 19, 2014

நாயக்கர்கள் காலம்

வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப்பார்க்கும்போது மதுரை பல்வேறு அரசாட்சியின் கீழ் இருந்தாலும், பாண்டியர்கள் மற்றும் நாயக்கர்கள் காலம்தான் மதுரைக்குப் பொற்காலமாக இருந்திருக்கிறது. கிபி 1 முதல் 5ஆம் நூற்றாண்டு வரையில் சங்ககாலப் பாண்டியர்கள் வசமும், 5 முதல் 13ஆம் நூற்றாண்டு வரையில் இடைக்காலப் பாண்டியர்கள் வசமும் இருந்த மதுரை 14 முதல் 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை டெல்லி சுல்தான்களின் கொடுங்கோல் வசம் இருந்தது. விஜயநகரப் பேரரசு மூலம் அந்த முஸ்லிம் ஆட்சி முறியடிக்கப்பட்டு 1520ல் விஜயநகரர்களின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் நாயக்கர்கள் ஆட்சியில் அமர்ந்தனர். அவர்கள் ஆட்சியாண்டில் 1623முதல் 1659வரையிலான மன்னர் திருமலையின் ஆட்சி மீனாட்சியம்மன் கோயிலுக்கும் மதுரைக்கும் ஒரு பொற்காலமாக இருந்திருக்கிறது. 1736ல் நாயக்கர்கள் வீழ்ச்சியுற, 1801ல் பிரிட்டிஷாரிடம் சென்றது. ஆங்கிலேயர்கள் இவ்விடத்தின் கலைப் பொருட்களை வளர்க்காவிட்டாலும், அழிக்கவில்லை என்று நண்பர்கள் கூறுவதைக் கேட்க ஆறுதல் உண்டாகிறது.
தமிழ்நாட்டில் விஜய நகர ஆட்சியாளர்களை முன்னிறுத்தி ஆண்ட நாயக்கர்கள் ஆட்சிக் காலத்தில் (1564 - 16??) தெலுங்கு மொழியுடனும், தெலுங்கர்களுடனுமான அரசியல், பண்பாட்டு, பொருளாதார, மொழித் தொடர்புகள் வலுப்பெற்றன. தெலுங்கு மொழிக்கும் தெலுங்கர்களுக்கும் தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் இருக்கும் இத்தகைய இறுகிய உறவையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயலைதெலுங்குத் தமிழியல் எனலாம்.
நாயக்கர்கள் தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்தியதால் தெலுங்கு மொழி தமிழ்நாட்டில் ஆதரவு பெற்று தமிழும் அதன் பரிமாறுதல்களை உள்வாங்கியது. தமிழிசை பாடல்களில் தெலுங்கு மொழி ஆதிக்கம் பெற்ற காலமாகவும் நாயக்கர் காலத்தை கருதலாம்.

செஞ்சி நாயக்கர்கள்


தமிழகத்தை ஆண்ட நாயக்க மரபினரில் மிகக் குறைந்த காலமே ஆட்சியில் இருந்தவர்கள் செஞ்சி நாயக்கர்களே. கி.பி.1509 முதல் கி.பி.1649 வரை 140 ஆண்டுகள் மட்டுமே இவர்கள் ஆண்டனர். 


வரதட்சணையால் கிடைத்ததே :
காப்பு கம்பளத்தார் மன்னர் ஒருவர் பலிஜா செட்டியார் இனத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததால் , பெண்ணுக்கு சீர் கொடுக்கும் நாயக்கர் முறைப்படி செஞ்சியை பலிஜாக்களுக்கு கொடுத்தனர் . பலிஜாவிலேயே செட்டியார் பிரிவை சேர்ந்தவர்களாக செஞ்சி நாயக்கர்கள் இருந்தனர் . மதுரை நாயக்கர்களை போல வீரம் இல்லாததால் சிறிது காலமே இவர்களால் ஆட்சி செய்ய முடிந்தது . காரணம் செட்டியார் பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால் இயல்பாகவே சற்று மெல்லிய குணம் கொண்டவர்களாக இருந்து வந்துள்ளனர் . இவர்கள் ஆட்சி செய்த பிறகு தங்களை நாயக்கர்கள் என்று அழைத்து கொண்டனர் . 


செஞ்சி நாயக்கர்கள்


செஞ்சிக் கோட்டை (இராஜகிரி) 
சோழர்களின் காலத்திலேயே தொண்டை மண்டலத்தின் குறிப்பிடத்தக்க பகுதியாக விளங்கியது செஞ்சி. சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின், பாண்டியர்கள், காகதீயர்கள் (தெலுங்கர்), ஹொய்சளர்கள் (கன்னடர்) முதலானவர்களின் ஆட்சிகளின் கீழ் இருந்தது செஞ்சி. செஞ்சியிலுள்ள கோட்டையை முதன்முதலில் அமைத்தவர் ஆனந்தக் கோன் எனும் சிற்றரசர் என்று "கர்நாடக ராஜாக்கள் சவிஸ்தார சரித்திரம்" கூறுகிறது.

விஜயநகரப் பேரரசு நிறுவனர் புக்கரது மகன் குமார கம்பணர், படைவீட்டு அரசர் இராஜ நாராயணச் சம்புவராயரைத் தோற்கடித்து தொண்டை மண்டலத்தை வெற்றிகொண்ட நாள் முதல் செஞ்சி விஜயநகரப் பேரரசின் கீழ் வந்தது. குமார கம்பணரின் காலத்தில் தொண்டை மண்டலப் பகுதியின் தலைநகராக விளங்கியது செஞ்சி. கி.பி.1363 முதல் 1509 வரை விஜயநகரப் பேரரசின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட மண்டலேசுவரர்களாலேயே ஆளப்பட்டது.

துவக்கத்தில் வடக்கே நெல்லூர் முதல் கொள்ளிடம் நதி வரையிலான பகுதிகள் செஞ்சி நாயக்கர்களின் கீழ் இருந்தன. பின்னர், விஜயநகரப் பேரரசின் ஆரவீடு மரபினர் வேலூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆளத் துவங்கியதும் வடக்கே பாலாறு முதல் தெற்கே கொள்ளிடம் வரையிலானதாக செஞ்சி நாயக்கர்களின் ஆட்சி எல்லை சுருங்கியது.

பெத்த கிருஷ்ணப்ப நாயக்கர்


செஞ்சிக் கோட்டை தானியக் கிடங்கு & கல்யாண மகால் 
விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் ஆட்சிக் காலத்திலேயே செஞ்சியில் தனி நாயக்கர் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. கி.பி.1509-இல் முதல் செஞ்சி நாயக்கராக அமர்த்தப் பட்டவர் துப்பகுல கிருஷ்ணப்ப நாயக்கர் எனும் பெத்த கிருஷ்ணப்ப நாயக்கர் ஆவார்.செஞ்சி நாயக்க மரபினர் பலிஜா நாயுடு வகுப்பின் இணைப் பிரிவான தெலுங்கு பேசும் முற்பட்ட பலிஜா செட்டி வகுப்பைச் சேர்ந்தவர்கள். மதுரை, தஞ்சாவூர் நாயக்க மரபினர்கள் தெலுங்கு பேசும் முற்பட்ட பலிஜா கம்பளத்து  நாயுடு வகுப்பைச் சேர்ந்தவர்கள். செஞ்சி நாயக்கர்களின் ஆட்சிமொழி தெலுங்கே.

கிருஷ்ணதேவராயரது நன்மதிப்பைப் பெற்ற அவரது படைத் தளபதியான கோனேரி வையப்ப நாயக்கரின் மகனே பெத்த கிருஷ்ணப்ப நாயக்கர். செஞ்சி நாயக்கர்களில் குறிப்பிடத் தக்கவர் இவரே. இவர் பெயரால் செஞ்சி கிருஷ்ணாபுரம் எனப் பெயர் மாற்றம் பெற்றது. இன்றுள்ள வடிவில் செஞ்சிக் கோட்டையை வடிவமைத்தவர் பெத்த கிருஷ்ணப்பரே. செஞ்சிக் கோட்டையிலுள்ள தானியக் கிடங்குகள், கல்யாண மஹால், செஞ்சியிலுள்ள மூன்று குன்றுகளையும் உள்ளடக்கி எழுப்பப் பட்டுள்ள பெருஞ்சுவர்கள் ஆகியவை இவரால் கட்டுவிக்கப்பட்டவையே. 


ஸ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாள் கோவில் 
செஞ்சியை அடுத்துள்ள சிங்கவரத்தில் வேங்கடரமணர் மற்றும் வேணுகோபால சுவாமி கோவில்கள், திருக்கோவிலூரை அடுத்துள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் பூவராகப் பெருமாள் கோவில், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் மலர்த் தோட்டம் ஆகியவை பெத்த கிருஷ்ணப்ப நாயக்கரால் கட்டுவிக்கப்பட்டன. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் 217 அடி உயரமுள்ள இராஜகோபுரம் கட்டுவிக்கும் பணி கிருஷ்ணதேவராயரின் உத்தரவுப்படி பெத்த கிருஷ்ணப்பரின் மேற்பார்வையில் துவக்கப்பட்டது என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனினும் அக்கோபுரத்தைக் கட்டுவித்தவர் தஞ்சை செவ்வப்ப நாயக்கரே என்று பல்வேறு வரலாற்று ஆவணங்களும் உறுதி செய்கின்றன. இச்செய்தி பாடலாக இன்றும் அக்கோவிலில் காணப்படுவதாகக் குறிப்பிடுவார் பேரா. மங்கள முருகேசன்.

துப்பகுல சூரப்ப நாயக்கர்

பெத்த கிருஷ்ணப்பருக்குப் பின், அவரது ஒரு மனைவி வெங்கலாம்பாவின் மகன் துப்பகுல சூரப்ப நாயக்கர் அரசுரிமை ஏற்றார். இவரது அரண்மனைப் புலவர் இரத்தினகேது ஸ்ரீனிவாச தீட்சிதர் என்பவர்  ஸாஹித்ய ஸஞ்சீவினி, ரஸார்ணவா,  அலங்கார கௌஸ்துபா, காவ்ய தர்ப்பணா, காவ்ய ஸார ஸங்க்ரஹா, ஸாஹித்ய ஸூக்ஷ்ம சரணி முதலான சம்ஸ்கிருத உரைநடை நூல்களும், பவன புருஷோத்தமம் என்ற சமஸ்கிருத நாடகமும் இயற்றினார்.

முதல் & இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர்கள் 

சூரப்ப நாயக்கருக்குப் பின் பெத்த கிருஷ்ணப்பரின் மற்றொரு மனைவி லட்சுமாம்பாவின் மகன் முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் எனும் துப்பகுல வேங்கட கிருஷ்ணப்பர் கி.பி.1557-இல் அரசரானார். கி.பி.1565 தக்காண சுல்தான்களுக்கும் விஜயநகரப் பேரரசுக்கும் இடையில் நடந்த தலைக்கோட்டைப் போரில் பேரரசருக்குத் துணையாக நின்று போரிட்டவர் வேங்கட கிருஷ்ணப்ப நாயக்கரே. 

வேங்கட கிருஷ்ணப்பருக்குப் பின் அரசேற்றவர் அவரது மகன் இரண்டாம் கிருஷ்ணப்பர் எனும் துப்பகுலத் திரயம்பக கிருஷ்ணப்ப நாயக்கராவார். தலைக்கோட்டைப் போருக்குப் பின் பலவீனமுற்றிருந்த விஜயநகரப் பேரரசை எதிர்த்துப் பெரும் கிளர்ச்சி செய்த இரண்டாம் கிருஷ்ணப்பர் பேரரசர் இரண்டாம் வேங்கடவரது படையால் கைது செய்யப்பட்டதாகவும், தஞ்சை இரகுத நாயக்கரின் தலையீட்டின் பேரில் விடுவிக்கப்பட்டதாகவும் கூறுவார் ஹீராஸ் பாதிரியார். 

இரண்டாம் கிருஷ்ணப்பர் காலத்தில் செஞ்சிக்கு வருகை புரிந்த பிமெண்டா பாதிரியார், செஞ்சியைக் கிழக்கு டிராய் என்றும், இந்திய நகரங்களில் மிகப் பெரியதான செஞ்சி, லிசுபன் தவிர பிற போர்ச்சுகல் நகரங்கள் அனைத்தையும் விடப் பெரியது என்றும் வருணித்தார்.

இரண்டாம் கிருஷ்ணப்பருக்குப் பின் முறையே துப்பகுல வரதப்ப நாயக்கர், துப்பகுல வேங்கடப் பெருமாள் நாயுடு, துப்பகுல பெத்த ராமபத்திர நாயுடு, துப்பகுல ராமகிருஷ்ணப்ப நாயுடு ஆகியோர் செஞ்சி நாயக்கர்களாய் இருந்தனர். 

2 comments:

  1. செஞ்சிநாயக்கர்கள்(பலிஜ குல யாகசத்திரிய தேசாதிபதிதெலுங்கர்கள்)இவர்கள் ஆட்சி ஆரம்பித்தது 1508.மதுரை நாயக்கர் கம்மவார் ஆட்சி ஆரம்பித்து 1529 அப்படி இருக்கும் சமயத்தில் எப்படி மதுரை நாயக்கர்கள் செட்டிபலிஜாகளுக்கு செஞ்சியை வரசட்ஜணையாக தந்திருக்க முடியும்.தவறான கருத்து திருத்தி உண் மை தகவலை பதிவிடவும்.உங்கள் கருத்து படி பலிஜசெட்டி என்பவர்கள் ராஜ்புட்ஷ்சாக அறியப்பட்ட யாகசத்திரிய குல 24மனை தேசாதிபதிதெலுங்கள் ஆவார்கள்.(ஆதாரம் பலிஜவாறு புராணம்,வீரபாண்டிசெப்பேடு.நன்றி வணக்கம்)

    ReplyDelete
    Replies
    1. Super pangu unmaiyaana thagavalai
      Sonnatharkku ivanunga eppa paathalum ethavathu poi history poduvaanunga......

      Delete