..............................
ஒல்லியான முகவாட்டம் கொண்ட நீங்கள்,
தாடி வளர்த்துக்கொண்டால் பெரும்பாலான பெண்கள்
ஓட்டளிப்பார்கள் என்கிற ஒரு சிறுமியின் கருத்தை, நன்றி
சொல்லி ஏற்றவர், தன் இறுதி நாள்வரை உலகிற்கு தன்னை
அதுப்படித்தான் வெளிப்படுத்திகொண்டார்.
இவர், ஜனாதிபதி ஆனதும் ஓர் உறுப்பினர்,
‘‘லிங்கன் அவர்களே உங்கள் அப்பா தைத்த செருப்பு
இன்னமும் என் கால்களை அலங்கரிக்கிறது!’’
என நக்கலாக சொல்ல,
‘‘அது என் அப்பாவின் உழைப்பின் சிறப்பை
அல்லவா காட்டுகிறது.
பிய்ந்தால் கொடுங்கள் தைத்து தருகிறேன்.
அதே சமயம்,
செருப்பு தைத்தவரின் மகனுக்கு நாடாளவும் தெரியும்’’
என்றார் தனக்கே உண்டான அமைதியுடன்.
அமெரிக்கவாழ் கறுப்பின மக்கள் இன்றளவும் போற்றும் ஒரு மகத்துவமான தலைவராக விளங்கிய லிங்கன் 3 முறை அமெரிக்க ஜனாதிபதியாக களம் கண்டு வெற்றி பெற்றவர்.
அடிமை மக்கள் என்கிற ஓர் வர்க்கமே இனி அமெரிக்காவில் இருக்கக் கூடாது;
எல்லோரும் ஒரே சமமான அமெரிக்க பிரஜைகள் என்கிற ஓர்
மகத்துவத்திற்காக போராடியவர்.
தன் தந்தையிடமிருந்து நல்ல குணத்தையும் போராடும்
முறையையும் கற்றிருந்த இவர், 1865 ஆம் ஆண்டு ஆகஸ்ட்
14 ந்தேதி தனது மனைவியுடன்,
"அவர் அமெரிக்கன் கசின்" என்ற நாடகத்தை
ரசித்துகொண்டிருந்தபோது ஜான் வில்ஸ் பூத் (john wilkes booth)
என்ற ஒரு நடிகன் அதிபர் லிங்கனை குறி வைத்து சுட
அமெரிக்காவின் பெருந்துன்ப நிகழ்வு அப்போது
அரங்கேறியது.
ஆம், மறுநாள் காலை 56 வயதான லிங்கனின் உயிர் பிரிந்தது.
காலங்கள் மாறின.
பிரிந்து போன வட தென் அமெரிக்க மாநிலங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தன.
தென் பகுதி அமெரிக்க அடிமைக் கறுப்பருக்கு எல்லாம் விடுதலை கிடைத்தது.
ஆனால் வரலாற்று முக்கியத்துவம் உள்ள அந்த
மகிழ்ச்சிகரமான வெற்றியை கண்டுகளிக்க அவற்றின் ஆக்க
மேதையான ஆபிரகாம் லிங்கன் மட்டும்
அப்போது உயிரோடு இல்லை..
-உடுமலை.சு.தண்டபாணி
No comments:
Post a Comment