Search This Blog

Friday, August 16, 2013

இனி, செல்போனை 20 வினாடிகளில் சார்ஜ் செய்ய முடியும்...: இந்திய-அமெரிக்க மாணவி சாதனை


வாஷிங்டன்: 20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவியை கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளார் 18 வயதான அமெரிக்க வாழ் இந்தியப் பெண் ஒருவர். இதன் மூலம் மிகப் பெரிய வர்த்தக நிறுவனமான கூகுளின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். ஆறாம் விரலாய் மாறிப்போன செல்போன்களில் ஒவ்வொரு நாளும் புதுப்புது அதி நவீன வசதிகள் அறிமுகமாகிய வண்ணமே உள்ளன. ஆனால், எந்திர வாழ்க்கையில் செல்போனிற்கு சார்ஜ் போடுவதற்குத் தான் நம்மில் பலருக்கு நேரம் இருப்பதில்லை. இதற்கு ஒரு விடிவு காலமாக 20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யும் கருவியை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment