Search This Blog

Wednesday, August 7, 2013

ஆகாச கருடன் கிழங்கு.!



கட்டிப் போட்டால் குட்டி போடும் என்றழைக்கப்படும் ஆகாச கருடன் கயிற்றில் கட்டித் தொங்கவிட்டால், காற்றில் உள்ள ஈரக் காற்றை உறிஞ்சிக் கொண்டே கொடி வீசித் தளிர்க்கும். இது வெகு சீக்கிரம் தழைத்து வளர்ந்தால் வீடு சுபிட்சமாக இருக்கும். இந்தக் கிழங்கு ஒரு கருடனுக்குச் சமம். அதாவது கருடன் வந்தால் அந்த இடத்தில் எந்த விஷ ஜந்துக்களும் அணுகாது. அப்படி வந்தால் அவற்றின் விடம் பங்கப்படும். அவ்வளவு சக்தியுள்ளது இந்த ஆகாச கருடன் கிழங்கு.

கருடன் கிழங்கு இருக்கும் இடத்தில் ஏவல், பில்லி சூனியம்,செய்வினை போன்றவை அணுகாது.அப்படி மீறிய சக்தி வந்தால் இந்த ஆகாச கருடன் தன்னுயிரை விட்டு நம்மைக் காத்துவிடும். அதாவது இதை மீறிய சக்தி நம்மைத் தாக்க வந்தால் ஆகாச கருடன் அதன் உயிரை அச்சக்திக்கு பலியாக இட்டு நம்மைக் காக்கும். (மீச்சக்திக்கு பலியான கிழங்கு கருகி அழுகிவிடும்).

அரையாப்பு வெள்ளை யகலாக் கொறுக்கை
கரையாத கட்டியிவை கானார்- வரையிற்
றிருடரெனச் செல்லும்விடஞ் சேர் பாம்பு
கருடன் கிழங்கதனைக் கண்டு.

- சித்தர் பாடல்.

No comments:

Post a Comment