Search This Blog

Wednesday, July 31, 2013

சிதம்பர ரகசியம்

சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல்,பொறியியல்,புவியியல்,கணிதவியல்,மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.

முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன், அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்."

(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ).

(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் " திருமூலர்"

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே

என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.

உலகில் உள்ள எல்லா ATOM REACTOR களும், சிவனின் லிங்க வடிவில் மட்டுமே உள்ளது என்ற செய்தியுடன் இந்த பகுதியை துவங்குவோம், அதாவது அணு என்பது தான் உலகின் தொடக்கம், அதனால் உலகை அழிக்கவும் முடியும்.

ஒவ்வொரு அணுவிற்குள்ளும் உள்ள பரமாணு (Sub atomic particle) (ப்ரோட்டான் =>குவார்க் =>க்ளுவான்), ஒரே இடத்தில் இல்லாமல் நகர்ந்து கொண்டே இருக்கும் தன்மையுடையது, இந்த செயலின் மூலம் ஆக்கல்,அழித்தல் என்ற இரண்டு செயல்பாடுகளுமே நடைபெறுகின்றது. இது இயற்பியல் விதி. இந்த உலகம் என்பதே தடை ஏதுமில்லாத நகர்ந்துகொண்டிருக்கும் அணுக்களால் ஆனதே. தில்லை நடராஜரின் இந்த "ஆனந்த தாண்டவம்" என்ற நிலையை, உலகின் பல இயற்பியல் அறிஞர்கள் "COSMIC DANCE" என்று அழைக்கின்றனர். அறியாமையை காலில் மிதித்துக்கொண்டு ஆனந்த தாண்டவ கோலத்தில் நடராஜர் நான்கு கைகளுடன் ஆடிக்கொண்டிருப்பதை அணுவின் செயல்பாட்டுடன் ஒப்பிடுகின்றனர்.

அதாவது அணுவின் கட்டமைப்பான (Sub atomic particle ) எப்படி ஒரே இடத்தில் இல்லாமல் நகர்ந்து கொண்டே உள்ளதோ, அதே போன்று "ஆடல் கடவுள்" என்று அழைக்கப்படும் நடராஜர் ஒரே இடத்தில் இல்லாமல் ஆடிக்கொண்டே இருக்கிறார்.

1) வலது புற மேல் கையில் உடுக்கையை கொண்டிருப்பது இந்த உலகம் ஒலியின் மூலம் துவங்கியது என்பதை காட்டுகின்றது. இன்றைய அறிவியல் அறிஞர்கள் இதை தான் BIG BANG THEORY என்று அழைக்கின்றனர்.

2) இடது புற மேல் கையில் உள்ள நெருப்பு எந்நேரமும் அழித்து விடுவேன் என்ற எச்சரிக்கையை கொடுக்கின்றது.

3) வலது புற கீழ் கையில் காப்பாற்றுவதை குறிப்பதை போன்று, பயப்படாதே நான் இருக்கிறேன் என்று கூறுகின்றது.

4) இடது புற கீழ் கையால், உயர்த்தி இருக்கும் காலைக் காட்டி, தன்னிடம் அடைக்கலம் புகுவோருக்கும், தன்னை வணக்கும் பக்தர்களுக்கான இடம் என்பதை உணர்த்துகிறது.

இந்த நடனத்தில் ஆக்கல், அழித்தல், காத்தல் என்ற அணுவின் இயற்பியல் விதியின் அனைத்து செயல்களோடும் ஒத்துப்போகின்றது. உலகின் பெரிய அணு ஆராய்ச்சி அமைப்பான Geneva வில் உள்ள CERN (European Organization for Nuclear Research,the biggest particle physics laboratory in the world) என்ற இடத்தில், இந்த நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது என்பது ஏற்கனவே பலருக்கு தெரிந்ததே.

Fritjof Capra ஆஸ்திரியாவில் பிறந்த அமெரிக்க விஞ்ஞானி இவர். (The Tao of Physics) என்ற இவரது நூல் உலகப்பிரசித்தி பெற்றது. இந்த நூல் 1975ல் வெளிவந்தது. 23 மொழிகளில் 43 பதிப்புகளாக வெளிவந்த இந்த நூலை லட்சக்கணக்கானோர் படித்தனர், பாவம் தமிழர்களுக்கு தான் இது குறித்து தெரியாமல் போனது!. அந்த புத்தகத்தில் நடராஜரின் இந்த ஆனந்த தாண்டவத்தை மிக அழகாக இவ்வாறு விவரிக்கிறார் "every subatomic particle not only performs an energy dance, but also is an energy dance; a pulsating process of creation and destruction…without end…For the modern physicists, then Shiva's dance is the dance of subatomic matter. As in Hindu scriptures, it is a continual dance of creation and destruction involving the whole cosmos; the basis of all existence and of all natural phenomena."

உலகின் மிகப் பெரும் இயற்பியல் விஞ்ஞானிகளில் ஒருவர் கார்ல் சகன்.(பிறப்பு 9-11-1934; மறைவு 20-12-1996).சிறந்த விஞ்ஞான எழுத்தாளராகவும் விளங்கியது இவரது தனிச்சிறப்பு!

அமெரிக்காவில் ஒளிபரப்பப்பட்டு உலகெங்கும் உள்ளோர் பார்த்த 'காஸ்மாஸ்' என்ற பிரபஞ்சம் பற்றிய தொடரை எடுக்கும் மாபெரும் பொறுப்பை இவர் மேற்கொண்டார்.13 எபிசோடுகளில் பிரபஞ்சத்தைப் பற்றி விளக்க வேண்டும். January 1982 தனது 13 ஆம் எபிசோடில் நடராஜரை இப்படி விவரிக்கிறார். 'The answer lies in Hindu Cosmology." நடராஜரின் சிலையில் உள்ள உடுக்கை காட்டியபடி "This symbolizes creation of the universe, stars, galaxies and the human being." ஒரு கையில் இருந்த நெருப்பை காட்டியபடி "This symbolizes destruction of what has been created." என்று அவரின் உரையை தொடர்கிறார்...

தான் ஏன் இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதை தேடி இந்தியா வந்தேன் என்பதற்கு சுவாரசியமான பதிலை இவ்வாறு கூறுகிறார். அதாவது.........

அணுவில் பயணிப்போம்...

- Sasi Dharan
Photo: சிதம்பர ரகசியம்! பகுதி-2 

No comments:

Post a Comment