************************
நாத விந்து கலாதி நமோ நம
வேத மந்திர ஸ்வரூபா நமோ நம
ஞான பண்டித ஸ்வாமி நமோ நம வெகுகோடி
நாம சம்பு குமாரா நமோ நம
போக அந்தரி பாலா நமோ நம
நாக பந்த மயூரா நமோ நம பரசூரர்
சேத தண்ட வினோதா நமோ நம
கீத கிண்கிணி பாதா நமோ நம
தீர சம்பிரம வீரா நமோ நம கிரிராஜ
தீப மங்கள ஜோதி நமோ நம
தூய அம்பல லீலா நமோ நம
தேவ குஞ்சரி பாகா நமோ நம அருள்தாராய்
ஈதலும் பல கோலால பூஜையும்
ஓதலும் குண ஆசார நீதியும்
ஈரமும் குரு சீர்பாத சேவையும் மறவாத
ஏழ்தலம் புகழ் காவேரியால் விளை
சோழ மண்டல மீதே மனோஹர
ராஜ கம்பீர நாடாளு நாயக வயலூர
ஆதரம் பயிலாரூரர் தோழமை
சேர்தல் கொண்டவரோடே முன்னாளினில்
ஆடல் வெம்பரி மீதேறி மாகயிலையிலேகி
ஆதி அந்தவுலாவாசு பாடிய
சேர்தல் கொங்குவை காவூர் நன்னாடதில்
ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே
2
போத கந்தரு கோவே நமோநம
நீதி தங்கிய தேவா நமோநம
பூத லந்தனை யாள்வாய் நமோநம பணியாவும்
பூணுகின்றபி ரானே நமோநம
வேடர் தங்கொடி மாலா நமோநம
போத வன்புகழ் ஸ்வாமீ நமோநம அரிதான
வேத மந்திர ரூபா நமோநம
ஞான பண்டித நாதா நமோநம
வீர கண்டை கொள் தாளா நமோநம அழகான
மேனி தங்கிய வேளே நமோநம
வான பைங்கொடி வாழ்வே நமோநம
வீறு கொண்ட விசாகா நமோநம அருள்தாராய்
பாத கஞ்செறி சூராதி மாளவெ
கூர்மை கொண்டயி லாலே போராடியே
பார அண்டர்கள் வானொடு சேர்தர- அருள்வோனே
பாதி சந்திர னேசூடும் வேணியர்
சூல சங்கர னார்கீத நாயகர்
பார திண்புய மேசேரு சோதியர் கயிலாயர்
ஆதி சங்கர னார்பாக மாதுமை
கோல அம்பிகை மாதா மநோமணி
ஆயி சுந்தரி தாயான நாரணி அபிராமி
ஆவல் கொண்டுவி றாலே சீராடவே
கோம ளம்பல சூழ்கோயில் மீறிய மீறிய
ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே
3
வாரணந்தனை நேரான மாமுலை
மீதணிந்திடு பூணார மாரொளி
வால சந்திர னேராக மாமுக மெழில்கூர
வாரணங்கிடு சேலான நீள்விழி
ஓலை தங்கிய வார்காது வாவிட
வான இன்சுதை மேலான வாயித ழமுதூறத்
தோரணஞ் செறி தார் வாழையேய் தொடை
மீதில் நின்றிடை நூல்போலு வாவியெ
தோகை யென்றிட வாகாக வூரன நடைமானார்
தோக கந்தனை மாமாயை யேவடி
வாக நின்றதெ னாஆய வோர்வது
தோணிடும்படி நாயேனுள் நீயருள் புரிவாயே
காரணந்தனை யோராநி சாசரர்
தாமடங்கலு மீறாக வானவர்
காவலிந்திர னாடாள வேயயில் விடும்வீரா
கார்விடந்தனை யூணாக வானவர்
வாழ்தரும்படி மேனாளி லேமிசை
காளகண்டம் காதேவ னார்தரு முருகோனே
ஆரணன்றனை வாதாடி யோருரை
ஓதுகின்றென வாராதெ னாவவ
ணாணவங்கெட வேகாவ லாமதி டும்வேலா
ஆதவன் கதி ரோவாது லாவிய
கோபுரங்கிளர் மாமாது மேவிய
ஆவினன்குடி யோனேசு ராதிபர் பெருமாளே.
4
மூல மந்திர மோதலிங்கிலை
யீவ திங்கிலை நேய மிங்கிலை
மோகன மிங்கிலை ஞான மிங்கிலை மடவார்கள்
மோக முண்டதி தாக முண்டப
சார முண்டப ராத முண்டிடு
மூக னென்றொரு பேருமுண்டருள் பயிலாத
கோல முங்குண வீனதுன்பர்கள்
வார்மை யும்பல வாகிவெந்தெழு
கோர கும்பியி லேவிழுந்திட நினைவாகிக்
கூடு கொண்டுழல் வேனை யன்பொடு
ஞான நெஞ்சினர் பாலிணங்கிடு
கூர்மை தந்தினி யாளவந்தருள் புரிவாயே
பீலி வெந்துய ராவி வெந்துவ
சோகு வெந்தமண் முகர் நெஞ்சிடை
பீதி கொண்டிட வாது கொண்டருள் எழுதேடு
பேணி யங்கெதி ராறு சென்றிட
மாற னும்பிணி தீரவஞ்சகர்
பீறு வெங்கழு வேற வென்றிடு முருகோனே
ஆலமுண்டவர் சோதி யங்கணர்
பாக மொன்றிய வாலை யந்தரி
ஆதி யந்தமு மான சங்கரி குமரேசா
ஆரணம்பயில் ஞான புங்கவ
சேவ லங்கொடி யான பைங்கர
ஆவினன்குடி வாழ்வு கொண்டருள் பெருமாளே.
5
வேயி சைந்தெழு தோள்கள் தங்கிய
மாதர் கொங்கையி லேமு யங்கிட
வீணிலுஞ் சில பாதகஞ் செய அவமேதான்
வீறு கொண்டுட னேவ ருந்தியு
மேயு லைந்தவ மேதிரிந்துள
மேக வன்றறி வேக லங்கிட வெகுதூரம்
போய லைந் தழலாகி நொந்து பின்
வாடிநைந் தென தாவி வெம்பியே
பூதலந் தனிலே மயங்கிய மதிபோகப்
போது கங்கையினீர் சொரிந் திரு
பாத பங்கயமே வணங்கியெ
பூசையுஞ் சிலவே புரிந்திட அருள்வாயே
தீயிசைந் தெழ வேயிலங்கையில்
ராவணன் சிரமேயரிந்தவர்
சேனையுஞ் செலமாள வென்றவன் மருகோனே
தேசமெங்கணு மேபுரந்திடு
சூர்மடிந்திட வேலின் வென்றவ
தேவர் தம்பதியாள அன்புசெய் திடுவோனே
ஆயி சுந்தரி நீலி பிங்கலை
போக அந்தரி சூலி குண்டலி
ஆதியம்பிகை வேத தந்திரி இடமாகும்
ஆலமுண்டரனாரி தைஞ்சவொர்
போத கந்தனை யேயு கந்தருள்
ஆவி னன்குடி மீதி லங்கிய பெருமாளே.
6
கோல குங்கும கற்புர மெட்டொன்
றான சந்தன வித்துரு மத்தின்
கோவை செண்பக தட்பம கிழ்ச்செங் கழுநீரின்
கோதை சங்கிலியுற்ற கழுத்தும்
பூஷணம் பல வொப்பனை மெச்சுங்
கூறு கொண்ட பணைத்தனம் விற்கும் பொதுமாதர்
பாலுடன் கனி சர்க்கரை சுத்தந்
தேனெனும் படி மெத்தருசிக்கும்
பாத கம்பகர் சொற் களிலிட்டம் பயிலாமே
பாதபங்கய முற்றிட வுட் கொண்
டோதுகின்ற திருப்புகழ் நித்தம்
பாடுமன் பது செய்ப்பதியிற்றந் தவனீயே
தால முன்பு படைத்த ப்ரபுச்சந்
தேகமின்றி மதிக்க வதிர்க்குஞ்
சாகரஞ் சுவறக்கிரி யெட்டுந் தலைசாயச்
சாடுகுன்றது பொட்டெழ மற்றுஞ்
சூரனும் பொடி பட்டிட யுத்தஞ்
சாத கஞ் செய்திருக் கைவிதிர்க்கும் தனிவேலா
ஆல முண்ட கழுத் தினிலக்குந்
தேவரென்பு நிரைத் தெரியிற் சென்
றாடுகின்ற தகப்பனுகக் குங் குருநாதா
ஆட கம்புனை பொற் குடம் வைக்குங்
கோபுரங்களினுச் சியுடுத்தங்
காவினன்குடி வெற்பினினிற்கும் பெருமாளே.
No comments:
Post a Comment