எடுத்த எடுப்பிலேயே உங்கள் காதலன் / கணவன் உங்கள் எல்லா எதிர் பார்ப்புகளையும் நீங்கள் சொல்லாமலேயே புரிந்து கொண்டு ,உங்களோடு நகமும் சதையுமாக இருப்பான் என்று கனவு கண்டு காலத்தை வீணடிக்காதீர்கள் . அவன்
ஆரம்பத்தில் அரைகுறையாகத்தான் இருப்பான் .ஆனால் ,நீங்கள் சளைக்காமல் பாராட்டி ,ஊக்குவித்து ,அவன் குறைகளை நாசுக்காக கையாண்டு ,அவனுடைய ஆண் ஈகோவை சேதம் செய்யாமல் ,அவனை மென்மையாக கையாண்டீர்கள் என்றால் ..., அவனால் ஆகாதது எதுவுமே இல்லை .அவன் நீங்கள் எதிர் பார்த்த குணங்கள் அனைத்தும் நிரம்பிய ஆணாக ஒருநாள் மாறி இருப்பான் .அது வரை ,ஒரு ரிங் மாஸ்டர் ஆக அலுத்துக் கொள்ளாமல் ,தனக்கு கொடுக்கப் பட்ட சிங்கத்தை மெள்ள பழக்கி ,சாகசங்களைப் புரிய பயிற்ருவிப்பது போல ,நீங்களும் 'அவன் இப்படித்தான் .அதற்காக அவனை கோபித்துக் கொள்ளக் கூடாது .குறை சொல்லிக் கொண்டே இருந்து அவனுடைய மென்மையான மனதை காயப் படுத்தக் கூடாது ' என்கிற புரிதலுடன் ,மாறாத குணங்களை எப்படி சலனமில்லாமல் ஏற்றுக் கொள்வது ..?என்று முதிர்சசியோடும் சிந்தித்தால் போதும் ....அனாவசிய சண்டை ...,சசசரவு எதுவுமே எட்டிப் பார்க்காது .அதன் பிறகு ,குடும்பத்தின் பிற உறுப்பினர்கள் ...,நண்பர்கள் நாட்டாமைகளாக வந்து நின்று நடத்தும் பஞ்சாயத்துக்களும் தேவைப் படாது .
டாக்டர் . ஷாலினி
No comments:
Post a Comment