இரண்டு சக்கர வாகனம் பயன்படுத்திவிட்டு பொருளாதாரம் சற்று முன்னேறியவுடன்
நடுத்தர மக்கள் அடுத்து வாங்குவது நான்கு சக்கர வாகனம் என்று சொல்லக்கூடிய
கார் (Car). கார் வாங்குவதை விட அதில் ஏற்படும் சிறிய பழுதுகள் கூட பெரிய
அளவில் செலவுகளை வைத்துவிடும் நமக்கும் அதைப்பற்றி விபரமாக தெரியாது
என்பதால் கேட்கும் தொகையை கொடுத்து நடையை கட்ட வேண்டியது தான் என்று
சொல்லும் நம்மவர்களுக்கு காரில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க வழி
சொல்கிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
புதிதாக கார் வாங்குபவர்களுக்கும் ஏற்கனவே கார் வைத்திருப்பவர்களுக்கும்
உதவும் வகையில் இத்தளம் வந்துள்ளது, அடிக்கடி காரில் ஏற்படும் பிரச்சினைகள்
என்ன என்பதை பட்டியலிட்டு எப்படி அந்த பிரச்சினைகளை சரி செய்யலாம் என்பதை
எளிதாக சொல்கிறது இந்தத்தளம்.
இணையதள முகவரி : http://www.automd.com/
இத்தளத்திற்கு சென்று காரில் இருக்கும் ஒவ்வொரு பகுதியையும் எப்படி சரி
செய்ய வேண்டும் என்று தெளிவாக சொல்லி கொடுக்கின்றனர், உதாரணமாக பிரேக்-ல்
பழுதை எப்படி சரி செய்ய வேண்டும் என்று வீடியோவுடன் சொல்லி கொடுக்கின்றனர்,
Body & Interior , Engine , Transmissions & Drivetrains, Brakes,
Steering & Suspension, Preventive Maintenance , பழுதான பொருளுக்கு
மாற்றாக புதிய பொருள் வாங்குவதாக இருந்தால் எவ்வளவு செலவாகும் என்பதை
துல்லியமாக சொல்கின்றனர், பல சிறிய பிரச்சினைகளை கூட நாமே எளிதாக சரி
செய்யும் படி விளக்கி சொல்கின்றனர், இதைத்தவிர ஒரு பொருள் பழுதாவதற்கு
முன்பு ஆரம்பத்தில் என்ன பிரச்சினைகள் எல்லாம் வரலாம் என்பதையும் தெளிவாக
சொல்கின்றனர். கண்டிப்பாக கார் வைத்திருக்கும் அனைவருக்கும் , மெக்கானிக்
படிக்கும் நண்பர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
இரண்டு சக்கர வாகனம் பயன்படுத்திவிட்டு பொருளாதாரம் சற்று முன்னேறியவுடன் நடுத்தர மக்கள் அடுத்து வாங்குவது நான்கு சக்கர வாகனம் என்று சொல்லக்கூடிய கார் (Car). கார் வாங்குவதை விட அதில் ஏற்படும் சிறிய பழுதுகள் கூட பெரிய அளவில் செலவுகளை வைத்துவிடும் நமக்கும் அதைப்பற்றி விபரமாக தெரியாது என்பதால் கேட்கும் தொகையை கொடுத்து நடையை கட்ட வேண்டியது தான் என்று சொல்லும் நம்மவர்களுக்கு காரில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க வழி சொல்கிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
புதிதாக கார் வாங்குபவர்களுக்கும் ஏற்கனவே கார் வைத்திருப்பவர்களுக்கும் உதவும் வகையில் இத்தளம் வந்துள்ளது, அடிக்கடி காரில் ஏற்படும் பிரச்சினைகள் என்ன என்பதை பட்டியலிட்டு எப்படி அந்த பிரச்சினைகளை சரி செய்யலாம் என்பதை எளிதாக சொல்கிறது இந்தத்தளம்.
இணையதள முகவரி : http://www.automd.com/
இத்தளத்திற்கு சென்று காரில் இருக்கும் ஒவ்வொரு பகுதியையும் எப்படி சரி செய்ய வேண்டும் என்று தெளிவாக சொல்லி கொடுக்கின்றனர், உதாரணமாக பிரேக்-ல் பழுதை எப்படி சரி செய்ய வேண்டும் என்று வீடியோவுடன் சொல்லி கொடுக்கின்றனர், Body & Interior , Engine , Transmissions & Drivetrains, Brakes, Steering & Suspension, Preventive Maintenance , பழுதான பொருளுக்கு மாற்றாக புதிய பொருள் வாங்குவதாக இருந்தால் எவ்வளவு செலவாகும் என்பதை துல்லியமாக சொல்கின்றனர், பல சிறிய பிரச்சினைகளை கூட நாமே எளிதாக சரி செய்யும் படி விளக்கி சொல்கின்றனர், இதைத்தவிர ஒரு பொருள் பழுதாவதற்கு முன்பு ஆரம்பத்தில் என்ன பிரச்சினைகள் எல்லாம் வரலாம் என்பதையும் தெளிவாக சொல்கின்றனர். கண்டிப்பாக கார் வைத்திருக்கும் அனைவருக்கும் , மெக்கானிக் படிக்கும் நண்பர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
Related Posts : Good to Read
No comments:
Post a Comment