வீரபாண்டிய கட்டபொம்மன்" படத்தை ஆப்பிரிக்க ஆசிய திரைப்பட விருதுக்காக அனுப்பி வைக்க இந்திய அரசு முடிவு செய்தது. விழா நடந்த எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவிற்கு சிவாஜி அவர்கள் சென்றார்கள். அவருடன் பி.ஆர். பந்துலு, பத்மினி ஆகியோரும் சென்று கலந்துக் கொண்டனர். சிறந்த நடிகர், சிறந்த இசை, சிறந்த நடன கலைஞர், சிறந்த கதை என்று பல விருதுகள் பெற்றது. சிறந்த நடிகருக்கான விருதைப் பெறுவதற்காக மேடைக்கு சிவாஜி கணேசன் சென்றபோது எல்லோரும் எழுந்து நின்று ஐந்து நிமிடம் தொடர்ந்து கைதட்டி தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்தார்கள்.
இந்த படத்தின் மூலம் எகிப்து மக்களிடம் இருந்து தனக்கு கிடைத்த மரியாதை மதிப்பும் அன்பும் சிவாஜி தொடர்ந்து தக்க வைத்து கொண்டார். இதன் தொடர்ச்சியாக சென்னை வந்த எகிப்து அதிபர் நாசருக்கு வரவேற்ப்பு வழங்கும் அளவிற்கு அவர் அந்த மக்களிடையே புகழ் பெற்று விளங்கினார்.
சென்னை வந்த எகிப்து அதிபர் நாசருடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்!!!
Related Posts : Good to Read,
Tamil Cinema
No comments:
Post a Comment