Search This Blog

Monday, September 17, 2012

சோழர்களும் அவர்களின் வரலாறும்




சோழர்கள் பற்றி கேள்விப்படாத தமிழர்களே இருக்க முடியாது. அப்படிப்பட்ட சோழப்பேரரசின் வரலாற்றையும் கலைசிறப்பையும் நான் கற்று தெரிந்தவற்றிலிருந்தும், சில இணையங்களில் இருந்து பெற்றதையும் அடிப்படையாக கொண்டு என்னால் முடிந்தவரை ஓர் தொடர் தொகுப்பை வரையலாம் என நினைக்கிறேன் .
சோழர்களின் தோற்றம் என்பது காவிரியாற்றின் கரையோர பகுதிகளிலும் அவற்றின் கிளையாற்றுப் பிரிவுகளின் அருகாமையிலும் உருவாகியது என்கின்றது வரலாறு. சோழர்களைப் பொறுத்த மட்டில் கரிகால சோழன், இளஞ்செட்சென்னி சோழன் போன்ற கி.பி 2 ஆம் நூற்றாண்டிற்கு முன் வாழ்ந்த சோழமன்னர்களால் சோழர் குலம் பெருமை எய்தி காணப்பட்ட போதும் கி.பி 2 ஆம் நூற்றாண்டிற்கு பின்னர் வந்த சோழ மன்னர்கள் சிற்றரசர்கள் எனும் நிலைக்கு தாழ்ந்து போயினர்.

_____________________________________________

கரிகாலன் காலத்து சோழர் ராஜ்ஜியம் கி.பி 120

பிற்காலத்தில் கி.பி 9 ஆம் நூற்றாண்டளவில் மீண்டும் சோழர்கள் வலிமைபெற்று விளங்கத் தொடங்கினர்.வரலாற்று ஆய்வாளர்களைப் பொருத்தமட்டில் கி.பி 2 ஆம் நூற்றாண்டிலும் அதற்க்கு முந்தைய காலப் பகுதிகளிலும் வாழ்ந்த சோழர்கள் முற்காலச் சோழர்கள் என்றும் கி.பி 9 ஆம் நூற்றாண்டிலும் அதற்க்கு பின்னருமான காலப் பகுதிகளில் வாழ்ந்த சோழர்கள் பிற்காலச் சோழர்கள் என்றும் இனம் காணப் படுகின்றார்கள்.

வரலாற்று சான்றும் சோழர் எனும் பெயர் விளக்கமும்
கிறிஸ்துவுக்கு முன்வாழ்ந்த சோழர்களின் பெயர்களை இலகியம்களும் நூல்களும் கூறினாலும் சோழர்களின் தோற்றத்தையும் அதன் காலப் பகுதியையும் சந்தேகம் இல்லாமல் தெரிந்து கொள்ள போதிய வரலாற்று ஆதாரங்கள் இல்லை என்றே கூற வேண்டும். இருந்தாலும் சங்க கால இலக்கியம்களில் இருந்தும் பிற பல வரலாற்று நூல்களில் இருந்தும், கல்வெட்டு மற்றும் செப்பு பட்டயங்களில் இருந்தும் கிறிஸ்துவுக்கு பின் வாழ்ந்தசோழ மன்னர்களின் பெயர்களுடன் அவர்களின் ஆட்சி காலப் பகுதிகளும் அறியப் படுகின்றன. மேலும் இலங்கையின் மகாவம்சம், தொலமி எனும் புவியியல் ஆராட்சி நிபுணரின் குறிப்புகள், 1 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அலெக்ஸ்சாந்திரியாவைச் சேர்ந்த வணிகன் ஒருவன் எழுதிய எரித்ரேயன் வழிகாட்டி நூலான " PERIPLUS OF THE ERYTHRAEAN SEA " போன்ற சான்றுகளும் சோழர்களின் பெயர்களையும் அவர்களின் ஆட்சி காலப் பகுதியையும் தெளிவாக அறிய உதவுகின்றன.


சோழர்கள் எனும் பெயர் உருவானது எப்படி என்று பலர் பல விதமாக தங்கள் கருத்தை முன் வைத்தாலும் தேவநேயப் பாவாணர் மற்றும் பரிமேலழகர் என்பவர்களின் கருத்துக்களே குறிப்பாக நோக்கப் படுகின்றன. நெல் மிகையாக விளையும் நாடு சோழநாடு என்றும் நெல்லின் மறு பெயரான "சொல்" என்பதே மொழிப் பாவனையால் திரிபுற்று "சோழ" என்று மருவிற்று என்பது தேவநேயப் பாவாணர் கருத்தாகும். பரிமேலழகரை பொறுத்த வரையில் பாண்டியர் குலம்,சேரர் குலம் போன்று சோழர்களும் ஒரு ஆண்டு வந்த குலப் பெயர் ஆகும் என்பது அவரின் கருத்தாகும்.
தொடரும்..............


எதாவது தவறுகள் இருப்பின் அறியத்தரவும்.............

No comments:

Post a Comment