Search This Blog

Monday, July 16, 2012

மறைக்கப்பட்ட வரலாறு (திருநங்கை)




கி.மு இருபத்தி இரண்டாம் வருடங்களிலேயே சுமேரிய நாகரிகத்தில் திருநங்கைகள் பொது மற்றும் வீட்டு விழாக்களில் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருக்கிறார்கள். நீதிமன்றப் பணியாளர்கள், பாடகர்கள், ராணுவ அதிகாரிகள், பெண்களைப் பாதுகாக்கும் அந்தப்புர அதிகாரிகள், மத பூசாரிகள், ராஜாங்க ஆலோசகர்கள் என்று பல உயர்பதவிகளை வகித்தார்கள். ( ஆனாலும் அவர்களின் சமூக அந்தஸ்து கீழான நிலையிலேயே தான் இருந்தது.)

அசிரியப் பேரரசு, கிளியோபாட்ராவின் டாலமிப் பேரரசு போன்றவற்றிலும் செல்வாக்காக இருந்தார்கள் திருநங்கைகள். சீனாவில் மிங் வம்ச அரசு முடிவுக்கு வந்த போது இம்பீரியல் அரண்மனையில் சுமார் 70,000 திருநங்கைகள் பணியில் இருந்தார்களாம். செங் ஹி என்கிற சீனாவின் புகழ்பெற்ற கப்பற்படைத் தளபதி ஒரு திருநங்கை. வியட்நாம் ராஜ குடும்பங்களிலும் அவர்கள் ஊடுருவி இருந்தார்கள்.

ரோம சக்கரவர்த்தி கான்ஸ்டான்டினச் சுற்றி திருநங்கைகளின் ஆலோசனைக் கூட்டமே இருந்தது. பைபிளில் அவர்களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது ( சொர்க்கத்தின் ராஜாங்கத்தில் அவர்களுக்கான இடம் உண்டு ) வாத்ஸ்யாயனரின் காமசாஸ்திரம் அவர்களை "தேர்ட் செக்ஸ்" என்று குறிப்பிடுகிறது.

காகிதத்தைக் கண்டுபிடித்த காய் லுன் என்பவர் ஒரு சீன தேசத் திருநங்கை. ல ங் கியட் வியட்நாமின் முதல் சுதந்திர பிரகடனத்தில் கையெழுத்திட்ட தேசிய ஹீரோ. அவரும் ஒரு திருநங்கையே. முகம்மது கான் காஜர் 1794ம் வருடம் பெர்ஷியாவின் மன்னராகி காஜர் வம்சத்தயே தோற்றுவித்தார். அவரும் திருநங்கைதான். இவர்கள் எல்லாருமே சரித்திரத்தில் மறக்கப்பட்டவர்கள். அல்ல மறைக்கப்பட்டவர
கள்.


No comments:

Post a Comment