எப்படியாவது Computer Programming மொழிகளைக் கற்று பல்வேறு வகையான திட்டங்களுக்கென புரோகிராமிங் செய்திட வேண்டும் என்பதே பல இளைஞர்களின் கனவாக உள்ளது.
வேலை வாய்ப்பு, அதிக சம்பளம், பதவி உயர்வு, வெளிநாட்டில் பணி எனப் பல ஈர்ப்புகள் இதன் அடிப்படையாய் உள்ளன.
இவை தவிர புரோகிராமிங் செயல்பாடு தரும் சவாலும் ஒரு காரணம். பலர் இதில் மனநிறைவு பெறுவதற்காகவே புரோகிராமிங் பாடங்களைக் கற்றுக் கொள்ளத் திட்டமிடுகின்றனர். இவர்களுக்காக இணையத்தில் ஓர் இலவச தளம் இயங்குகிறது.
இதன் பெயர் கோட் அகடமி(Code Academy). புரோகிராம் எழுதுவதனை கோடிங்(coding)எனக் கூறுவார்கள். எனவே அந்தப் பெயரிலேயே இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் தரப்படும் பாட திட்டங்களுக்கென இதில் அக்கவுண்ட் திறக்கும் முன்னர், புரோகிராமிங் எப்படி இருக்கும் என நமக்கு மிக, மிக எளிதான முறையில் பயிற்சி முறையில் விளக்கப்படுகிறது.
நம் பெயரை எழுதச் சொல்லி தொடங்கும் பாடம், அப்படியே கொஞ்சம் கொஞ்சமாகநம்மை புரோகிராமிங் என்றால் இவ்வளவு எளிதானது என்று உணர வைக்கிறது.
இது இலவசம். ஒரு மின்னஞ்சல் முகவரி, பேஸ்புக் தளத்தில் அதன் தொடர்பு என ஏதாவது ஒன்று இருந்தால் போதும். பதிந்த பின்னர் தான் பாடங்கள் விறுவிறுப்பாகக் கற்றுத்தரப் படுகின்றன. பாடங்களும் கற்றுத் தரும் முறையும் மிகவும் வியப்பாக உள்ளன.
புரோகிராமிங் செய்திடும் பயிற்சியில் நமக்கு டிப்ஸ் தரப்பட்டு வழி காட்டப்படுகிறது. பாடங்களைக் கற்றுக் கொள்வதில் முன்னேற்றம் ஏற்படுகையில், நாம் பெறும் மதிப்பெண்கள், அதற்கான பதக்க அட்டைகள் காட்டப்படுவது, நம் கற்றுக் கொள்ளும் செயல்பாட்டினத் தூண்டுகிறது. ஆர்வம் இருந்தால் அனைவரும் புரோகிராமிங் கற்றுக் கொள்ளலாம்.
|
Search This Blog
Friday, March 2, 2012
புரோகிராமிங் கற்றுத்தரும் இணையம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment