ஒரு தேன்கூடு அதில் ராணித் தேனீக்கு ஒரு கவலை தேன் கொள்ளச் செல்லும் தேனீக்களில் சில திரும்பி வருவதில்லை என்று.... காரணமும் அறிந்தது ராணி !
நடு வானில் கூட்டம் என கட்டளையிட்டது ராணி. தேனீக் கள் கூடின ராணிக்கு முன்னே... அனைத்தும் காற்றில் தங்களை நிலைப்படுத்திக்கொண்டன. ராணி ஆரம்பித்தது,
ஈக்களே! தேன் கொள்ளச் செல்லும் நம்மவர்களில் சிலர் திரும்பாததால் கூட்டை முழுதாக்குவது கடினம் என்றுரை த்தது திரும்பாதல் காரணம் அறிவீர்களா என வினவியது தேன்கொள்ள தூர தேசம் செல்லுவது என்றது ஒரு தேனீ இல்லையென்றது ராணி
வேறு கூட்டிற்கு மாறுவது என்றது இன்னொரு தேனீ மறுத்தது ராணி பிறரிடம் போரிட்டு மடிவது என்றது மற்றொரு தேனீ மீண்டும் மறுத்து ராணி சொன்னது என் பின்னே பறந்து வாருங்கள் உங்களுக்கு விடை கிடைக்கும் என்று ராணி பறந்தது தேனீக் கள் பின் தொடர்ந்தன....
ராணி வந்தடைந்த இடம் தேன் கொள்ளும் பூவயல் ராணி முன்னேயும் தேனீக்கள் பின்னேயும் பூவயலின் மேல் பறந்தன.... மறுபடியும் ராணி ஆரம்பித்தது ஈக்களே ! நமக்கென்று தேன் கொள்ள இந்த பூவயலில் நிறைய செடிகளின் பூக்கள் உள்ளன அதில் மட்டும் தேன் கொள்ளல் நம் எல்லையாகும்
அதோ தனியாக தெரியும் அந்த செடியின் பூக்கள் மிகவும் கவர்பவை ஆனால் அதன் தேன் கொண்டு திரும்புதல் கடினம் அது நம்மை அழித்துவிடும் அதில் தேன் கொள்ள முயலுவது வரம்பு மீறலாகும் அதுவே நம்மில் சிலர் திரும்பாத காரணமாகும் . வரம்பு மீறல் : அழிவின் வாசல் என உணர்த்தியது ராணி
No comments:
Post a Comment