Search This Blog

Friday, March 2, 2012

40 வயதிலும் மிக அழகாக தோற்றமளிக்க


மிக அழகான, ஆரோக்கியமான மேனியை பெறுவதற்கு உடற்பயிற்சி செய்வது மிக அவசியம்.
ஒரு வாரத்திற்கு குறைந்தது மூன்று முதல் ஆறு மணி நேரமாவது கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
நடைப் பயிற்சியோ அல்லது ஓட்டப் பயிற்சியோ அல்லது வேறு பிற விளையாட்டோ இவை ஏதாவது ஒன்றின் மூலமாகவாவது கட்டாயம் உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்யும் உடற்பயிற்சி மூலம் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாது, உங்களது தசை மற்றும் தாங்குதிறன் மேலும் பலப்படும். முகம் ஊடுதல் அழகுடனும் காணப்படும்.
இளம் வயதில் செய்யபடும் உடற்பயிற்சி மிகுந்த நன்மை பயக்கும். மிக முக்கியமாக 40 வயதுகளில் ஏற்படுகிற பல பிரச்சினைகளுக்கு மூல காரணமான மன அழுத்தம் குறையும் இதனால் மாரடைப்பு மற்றும் இருதய நோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கான சாத்தியம் குறையும்.
நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் கட்டாயம் பல விட்டமின்கள் மற்றும் தாதுச்சத்துக்கள் அடங்கியிருக்க வேண்டும். கார்போஹைட்ரேட் மற்றும் புரதச்சத்து உணவுகள் எடுத்துக் கொள்வது வழக்கமானது தான் என்றாலும், போதுமான விட்டமின்களை எடுத்துக் கொள்ளாமல் போனால் ஆராக்கியத்திருந்து நீங்கள் வெகு தூரம் விலகிச் சென்றுவிடுவீர்கள்.
உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு இந்த விட்டமின்களும், தாதுக்களும் மிக முக்கியமானவை. 40 வயதை எட்டிவிட்டால் நோய்களும் கூடவே ஒட்டிக் கொண்டு வந்து விடும் பல உடல் உபாதைகள் எட்டிப் பார்க்க தொடங்கி விடும். ரத்த அழுத்தம், சர்ச்சரை நோய், உடல் பருமன், மூட்டு வலி என பல பிரச்சினைகளின் தொடக்கம் 40 வயதுதான்.
நீங்கள் காலையில் எழுந்ததும் வாக்கிங் செல்வதன் மூலம் உங்கள் கால்களை திடப்படுத்த முடியும், 40 வயதில் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக இருப்பது உங்களது 20 வயதுகளில் நீங்கள் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட்டீர்களோ, எந்த மாதிரியான வாழ்க்கை முறையை பின்பற்றினீர்களோ எவ்வளவு உடற் பயிற்சி செய்தீர்களோ அதை பொறுத்துதான் அமைகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
40 வயதுகளில் ஆரோக்கியமாக இருக்க 20 வயதிலிருந்தாவது நடைப்பயிற்சி போன்றவற்றை கட்டாயம் தொடங்கிவிட வேண்டும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment