Search This Blog

Tuesday, October 11, 2011

Earth Over 650 Million Years in 80 Seconds

.Check this cool video of Earth's ground forming over millions of years. Also shows what the continents will be like in the future. I guess as the continents are all together in the end we may all end up of mixed race..?

கல் தோன்றி, மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடியான தமிழ் குடியின் முதுகுடியினர் பிரமலைக்கள்ளர்கள் (முக்குலத்தோர்) தோன்றிய பகுதி

1. “நேஷனல் ஜீயோகிராபிக் தொலைகாட்சியின் “மனித இனத்தின் பயணம்” என்ற திட்டத்தின் கீழ் மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் பிச்சப்பன் அவர்களன் தலைமையில் ஆய்வு செய்த மரபியல் அறிவியல் விஞ்ஞானிகள் மதுரை உசிலம்பட்டி அருகில் உள்ள ஜோதிமாணிக்கம் என்ற சிற்றூரில் முக்குலத்தினரின் ஒரு பிரிவான பிரமலைகள்ளர் இனத்தை சேர்ந்த விருமாண்டி ஆண்டித்தேவர் என்பவரிடம் மரபியியல் ஆய்வு செய்த போது “எம்130 டி.என்.ஏ” கண்டுபிடிக்கப்பட்டது. இதை ஒத்த மரபணு ஆப்பிரிக்க மக்களிடமும் ஆஸ்திரேலிய அப்ராஜீன் மக்களில் பாதிக்கு மேற்பட்டோருக்கும், பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா போன்ற நாடுகளிலும் “எம்130 டி.என்.ஏ” இருப்பதாக டாக்டர். பிச்சப்பன் 2008 ஆம் வருடம் அறிவித்தார். மேலும் அவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து 70000 ஆண்டுகளுக்கு முன்பு தென்இந்தியாவில் பிரமலைக்கள்ளர்கள் குடியேறியதாக கூறுகின்றனர்.

(“More than half of the Australian aborigines carry this M130 gene. The marker is also present among some people in Philippines and the tribals of Malaysia,” said Dr Pitchappan.)

2. ஆப்பிரிக்காவில் உள்ள சில பழங்குடியினர், ஆஸ்திரேலிய பழங்குடியினர், யூதர்கள், அரேபிய பழங்குடியினர் போன்றவர்களிடம் இருந்த சுன்னத் செய்யும் பழக்கம் பிரமலைக்கள்ளர் சமூகத்திடம் வழக்கத்தில் இருந்தது.

3. ஆப்பிரிக்காவில் சில பகுதிகளிலும், ஆஸ்திரேலியாவிலும் பழக்கத்தில் இருந்த “வளைத்தடி” (பூமராங்) பிரமலைக்கள்ளர்களிடம், புதுக்கோட்டை கள்ளர்களிடமும், வழக்கத்தில் இருந்தது.
அந்தக் காலத்தில் வளரி அல்லது வளரித்தடி என்ற ஆயுதமே கள்ளர்களின் பிரதான ஆயுதமாக இருந்திருக்கிறது. ஒருமுனை கனமாகவும், மறுமுனை இலோசாகவும், கூராகவும் ஒரு பிறைவடிவில் மரத்தினால் அல்லது உலோகத்தினால் இக்கருவி செய்யப்படுகிறது. இந்த மக்கள் இன்றும் தமது வீரர்களுக்கு(முன்னோர்களுக்கு) செய்யும் ஆயுத பூசையில் (முன்னோர் நினைவு வழிப்பாட்டில்)வளரியை காணிக்கையாக வைத்து வழிபடுகின்றனர்.

வளைத்தடியின் மேம்படுத்தப்பட்ட வடிவம் வளரி என்ற ஆயுதமாக முக்குலத்தோர் அனைவரும் போர்களத்தில் 19ம் நூற்றாண்டு வரை பயன்படுத்தினர். சின்ன மருது வளரி வீசுவதில் வல்லவர் என்பது சரித்திரம் அறிந்தவர் அனைவருக்கும் தெரிந்த உண்மை. ராமநாதபுரம் சேதுபதிகளின் அரன்மனையில் அவர்களுடைய படைகளில் பயன்படுத்திய வளரிகள் இன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த மூன்று அடிப்படை கருத்துகளின் ஊடாக செல்லும் ஒரு செய்தி உண்டு. அது என்னவென்றால் நமது இனம் எங்கு தோன்றியது என்பதை பற்றியதாகும். நேஷனல் ஜீயோகிராபிக் தொலைகாட்சியின் “மனித இனத்தின் பயணம்” என்ற ஆய்வின் கருத்தான ஆப்பிரிக்காவில் இருந்து மனிதன் தோன்றினான் என்பது அல்ல.

பழந்தமிழ் ஏடுகள் மற்றும் இலக்கியங்கள் கூறும் காபாடபுரமும், தென்மதுரையும், பஃறுளி ஆறும் கொண்ட பரந்த நிலப் பரப்பான இன்றைய இந்திய பெருங்கடலின் அடியில் மூழ்கி கிடக்கும் குமரிகண்டமே மனித இனம் தோன்றிய இடம் எனும் கருத்துக்கு எடுத்துச் செல்கிறது

No comments:

Post a Comment