Search This Blog

Monday, September 17, 2018

வாழ்வோம் வாழவைப்போம்...

கருணை உள்ளம் கொண்ட பல புலம் பெயர் தமிழர்கள் ஊருக்கு வரும் போது போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் இல்லங்களுக்கு செல்கிறார்கள்.
அவர்களுக்கு அன்றைய உணவுக்கான செலவுகளை ஏற்றுக் கொள்கிறார்கள்.
உண்மையில் இது பாராட்டப்பட வேண்டிய விடயம்.
ஆனால் அதையும் விட புலம் பெயர் தமிழர்கள் மட்டுமல்ல, ஊரில் இருக்கும் வசதி படைத்தவர்கள் இன்னும் எவ்வளவோ வினைத்திறன் மிக்க விடயங்களை செய்யலாம் .
ஒரு வசதி படைத்த குடும்பம் ஒரு குழந்தைக்கான அனைத்து செலவுகளையும் பொறுப்பெடுக்கலாம்.
இதற்கு ஆரம்பத்தில்மாதம்
5000 - 10000 ரூபாய் மட்டுமே செலவாகும்.
வசதி படைத்தவர்களக்கு இது ஒரு பெரிய தொகை அல்ல.
அந்த குழந்தை தன் சொந்த காலில் நிற்கும் வரைக்கும் இதை செய்யலாம் .
ஆகக் குறைந்தது அந்த குழந்தையின் கல்விச் செலவையாவது கையில் எடுக்கலாம்.
பாதுகப்பற்ற
ஓலைக் குடிசையில் வாழும் ஒரு சிறு குடும்பத்திற்கு 500 சதுர அடிக்கு குறைவான அடிப்படையான கல் வீட்டைக் கட்டிக் கொடுக்கலாம்.
இதற்கு 10 இலட்சத்திற்கும் குறைவான செலவே யாகும்.
அவர்களுக்கு நிரந்தர தொழிலாக 10 பால் மாடுகளையோ 50 கோழிகளை யோ வழங்கலாம்.
அல்லது சிறு பெட்டிக்கடை ஒன்றை போட்டுக் குடுக்கலாம்.
இன்னும் எவ்வளவோ நிரத்தர உதவிகளை செய்யலாம் .
ஒரு நாள் உணவு புண்ணியம் என்றால் நிரந்தர உதவி மகா புண்ணியம்.
இப் பதிவு வசதியானவர்களுக்கு மட்டுமானதே.
ஒரளவு வசதி படைத்தவர்கள் கூட தங்கள் வசதிக்கேற்ப சிலவற்றை செய்யலாம் .

Sivaratnam Navatharan


No comments:

Post a Comment