Search This Blog

Thursday, September 12, 2013

ஆண்மையை பெருக்கும் அமுக்கிரா(அஸ்வகந்தா) கிழங்கு !!

அமுக்கிரா (Ashwagandha)
Ashvagandha.jpg

உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
துணைத்திணை:Tracheobionta
பிரிவு:பூக்கும் தாவரம்
வகுப்புஇருவித்திலையி
துணைவகுப்பு:Asteridae
வரிசை:கத்தரி வரிசை
குடும்பம்:கத்தரிக் குடும்பம்
பேரினம்:Withania
இனம்:W. somnifera
இருசொற்பெயர்
Withania somnifera
(லி.) Dunal, 1852
வேறு பெயர்கள்
Physalis somnifera



ஆண்மையைசெயல்பட வைக்கும் மூலிகை வேர்தான் அஸ்வகந்தா என்று அழைக்கப்படும் அமுக்கிரா கிழங்கு ஆகும்.



ஆண்குறின் இரத்த ஒட்டத்தை பெருக்கி உடலுறவின் போது அதீத உத்வேகத்தைத் தரும். இது சீமை அமுக்கிரா, நாட்டு அமுக்கிரா என்று இரண்டு வகைப்படும்.இதில் சீமை அமுக்கிரா கிழங்கு ஆண்கள் உடலுறவு கொள்ளும் போது அதிக நேரம் தாக்குப்பிடிக்க இது உதவுகிறது. இதை ஒரு மூலிகை “வயாக்ரா” சொன்னால் அது மிகையாகாது.அமுக்கிரா மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. மூளையின் அழற்ச்சி, வயோதிகம், போன்றவற்றில் இருந்து மூளை விடுபட பெரிதும் உதவுகின்றது. சீமை அமுக்கிர பொடியை நெய்யுடன் கலந்து கலந்து சாப்பிட்டால் விந்து பெருகும். குழந்தை பேரு இல்லாதவர்கள் இதை பொடி செய்து தேனுடன் சாப்பிட்டு வந்தால் குழந்தை பேரு உண்டாகும்.

உடல் ரீதியாக, மன ரீதியாக ஏற்படக் கூடிய பல பிரச்சனைகளை இது தீர்க்க உதவும். இது உடலின் வலிமையை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்க வல்லது. மூளையின் செயல்பாட்டினை அதிகரித்து ஞாபக சக்தியை உண்டாக்கும். நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் அதே வேளையில் மூட்டுகளின் வீக்கத்தைக் குறைத்து மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணமாக விளங்கும்.

கோல 

நகுட வெருண்டுதிர நாட்டுவையேன் மேலை 

நகுட வெருண்டு று வாழ் நாள் .. அகத்தியர் குணபாடம்.



சமீப கால ஆராய்ச்சிகளிலிருந்து அஸ்வகந்தா மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. மூளையின் அழற்ச்சி, வயோதிகம், போன்றவற்றிற்கு பெரிதும் உதவுகின்றது எனவும் உடலில் உள்ள Free Radicals ஐ வெளியேற்றி உடலை உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.
அஸ்வகந்தா பல ஆராய்ச்சிகளில் ஜின்செங்கை (Panax Schinseng) ஒத்த செயல்பாடுகளை உடையதாகவும் கண்டறியப்பட்டுள்ளது
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்படக் கூடிய பல பிரச்சனைகளை சரி செய்யவல்லது அஸ்வகந்தா
அஸ்வகந்தாவின் நன்மைகள்
· உங்கள் திறமைகளையும் உடல் வலிமையையும் அதிகரிக்கும்.
· உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
· உங்கள் மூளையின் செயல்பாட்டினை பெருக்கும், ஞாபக சக்தி மற்றும்        திறமையை அதிகரிக்கும்.
· உங்கள் நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
· உங்கள் மூட்டுகளின் வீக்கத்தைக் குறைக்கும்
· உங்களுக்கு குதிரை போன்ற உடல் வலிமையைத் தரும்
· உங்களது இன பெருக்க உறுப்புகளுக்கு இரத்த ஒட்டத்தை பெருக்கி           உத்வேகத்தைத் தரும் (குறிப்பாக ஆண்களுக்கு)
மருத்துவ குணங்கள்
அஸ்வகந்தாவின் முழுச்செடியுமே மருத்துவ குணங்கள் கொண்டது. ஆயுப்வேத மருத்துவத்தில் அஸ்வகந்தாவின் வேர்கள் (கிழங்குகள்) மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. அஸ்வகந்தாவின் பழங்கள் பாலை சீஸ்1£ க மாற்ற பாலை கட்டிப்படுத்த பயன்படுகிறது. சமஸ்கிருத மொழியில் அஸ்வகந்தா என்பது குதிரையின் நாற்றம் என பொருள்படும்.

No comments:

Post a Comment