Search This Blog

Thursday, June 23, 2011

கறுப்புப் பணத்தைப் பதுக்கியவர்களுக்கு ஆப்பு!!! சுவிஸ் வங்கிகளில் புதிய நடைமுறை.

கறுப்புப் பணத்தைப் பதுக்கியவர்களுக்கு ஆப்பு!!! சுவிஸ் வங்கிகளில் புதிய நடைமுறை.
செய்தி:- Monday, 20 June 2011 11:20
வரிப்பணம் கட்டாது, சுவிஸ் வங்கிகளில் சட்டவிரோதமாக பணத்தை பதுக்கி வைத்திருப்போர் பற்றி இந்தியா உட்பட அந்தந்த நாடுகளுக்கு இலகுவாக தகவல்களை வழங்குவதற்கு சுவிற்சர்லாந்து பாராளுமன்றத்தில் சட்ட மூலம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. சுவிற்சர்லாந்தின் மேல் சபையில் நிறைவேற்றப்பட்ட இரட்டை வரி அனுமதிக்கான சட்டமூலத்தில் DTAAs இன் மூலம் இந்த சலுகைககள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியா, ஜேர்மனி, கனடா, ஜப்பான், நெதர்லாந்து, கிரீஸ், துருக்கி, உருகுவே, கஜகிஸ்தான், போலாந்து ஆகிய நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக சுவிஸ்வங்கிகளில் பணத்தை வைப்பிடுவோரின் தகவல்களை இலகுவாக அந்தந்த நாடுகளது அரசுக்கள் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

IBAN இலக்கம் அல்லது சமூகபாதுகப்பு இலக்கம் மூலம் இவ்வாறு இத்தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். எனினும் தற்போது இச்சட்டமூலம் வாக்கெடுப்புக்கு விடப் படுவதுடன், இன்னமும் 100 நாட்களுக்குள் இதற்கான இறுதி முடிவு பெறப்பட்டு விரைவில்அமல்படுத்தப்படவிருக்கிறது. சுவிஸ்வங்கிகளில் பெருமளவான இந்தியர்களின் கறுப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியும் மீட்பதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்திய சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், சுவிற்சர்லாந்தில் இச்சட்ட மூலம் நடைமுறைப் படுத்தப்படவிருக்கிறது.

No comments:

Post a Comment