Search This Blog

Wednesday, June 15, 2011

மனித ஆயுளை நிர்ணயிக்கும் மாதம்

ஆராய்சி செய்தி
மனித ஆயுளை நிர்ணயிக்கும் மாதம்

மனிதனின் ஆயுள் மற்றும் ஆரோக்கியம் அவர்கள் பிறக்கும் மாதத்தைப் பொறுத்து அமையும் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
கருவில் இருக்கும் குழந்தைக்கு கிடைக்கும் சூரிய ஒளியின் அளவே இதற்கு காரணம். குழந்தை பிறக்கும் காலநிலைக்கும் அந்த குழந்தையின் வாழ்நாளுக்கும் உள்ள தொடர்பு குறித்து நிபுணர் குழு ஆராய்ச்சி மேற்கொண்டது.
இதில் ஒரு மனிதனின் அறிவாற்றல் முதல் வாழ்நாள் வரை பல்வேறு விடயங்களுக்கும் அவன் பிறக்கும் மாதத்துக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
வசந்த காலத்தில் பிறக்கும் குழந்தைகள் ஆஸ்துமா, ஆட்டிஸம், மனவளர்ச்சி குறைவு, மூளை நோய் உள்ளிட்ட நோயால் பாதிக்க வாய்ப்பு உள்ளது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பிறப்பவர்களை விட ஏப்ரல், மே, ஜுன் மாதங்களில் பிறப்பவர்களின் வாழ்நாள் குறைவாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்காவில் நடத்தப்பட்ட இது போன்ற ஆய்வில் வசந்த காலத்தில் பிறப்பவர்களை விட இலையுதிர் காலத்தில் பிறப்பவர்களின் வாழ்நாள் 160 நாட்கள் அதிகமாக இருக்கும் என தெரியவந்துள்ளது. சூரிய ஒளியில் கர்ப்பிணிகள் நடமாடுவதை பொறுத்து இது கணக்கிடப்பட்டுள்ளது.
சூரிய ஒளியில் உள்ள வைட்டமின் டி கரு வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். கருவுக்கு வைட்டமின் டி குறைவாக கிடைக்கும் போது அந்த குழந்தையின் வாழ்நாள் குறைவதுடன் மனநிலை மற்றும் உடல்நிலையிலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment