Search This Blog

Tuesday, June 14, 2011

மூச்சுக் காற்றை வைத்து மனிதனைக் கண்டறியும் கொசுக்கள்

மூச்சுக் காற்றை வைத்து மனிதனைக் கண்டறியும் கொசுக்கள்

மூச்சுக் காற்றை வைத்து தான் நமது இருப்பிடத்தை கொசு கண்டுபிடிக்கிறது என்று கூறும் விஞ்ஞானிகள் கொசுவை குழப்புவதற்காக சில ரசாயன பொருட்களை கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவின் ரிவர்சைடு நகரில் உள்ளது கலிபோர்னியா பல்கலைக்கழகம். அனந்தசங்கர் ரே என்ற இந்தியர் இங்கு பேராசிரியராக உள்ளார்.
கொசு ஒழிப்பு தொடர்பாக இவர் தலைமையில் சமீபத்தில் ஆய்வு நடந்தது. இதுபற்றி அனந்தசங்கர் கூறியதாவது: கொசுக்கள் பரப்பும் நோய்களால் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 50 கோடி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். தொடர்ந்து கொசுக் கடியால் அவதிப்படுபவர்களை அடிக்கடி நோய்கள் தாக்குகின்றன.
இதன் காரணமாக லட்சக்கணக்கானோர் பலியாகின்றனர். இதை தடுக்கும் நோக்கில் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. மனிதனின் வியர்வை நாற்றம், தோல் மணம் ஆகியவற்றை நுகர்வதன் மூலமாகவே நமது இருப்பிடத்தை கொசுக்கள் கண்டுபிடிக்கின்றன.
இதுதவிர கொசுக்கள் பிரதானமாக கடைபிடிப்பது "கார்பன் டை ஆக்சைடு" டெக்னிக். மனிதன் சுவாசிக்கும் போது வெளியிடும் வாயு. ஒரு இடத்தில் இந்த வாயு அதிகம் இருந்தால் அங்கு கண்டிப்பாக மனிதன் இருக்கிறான் என்பதை கொசு தெரிந்து கொள்கிறது.
கொசு பிடிக்கும் கருவிகளில் கார்பன் டை ஆக்சைடு வாயு பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொசுவை குழப்பும் வகையில் 3 விதமான ரசாயன பொருட்களை கண்டுபிடித்துள்ளோம்.
ஒன்று கார்பன் டை ஆக்சைடு போலவே வாசனை அடிக்கும். ஈர்க்கப்பட்டு அருகே வரும் கொசுவை தூண்டிலில் சிக்க வைத்து விடும். இரண்டாவது கார்பன் டை ஆக்சைடு வாயுவை கொசு கண்டுபிடிக்க முடியாதபடி வேறொரு வாயுவை பரவச் செய்து குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தும். மூன்றாவது ஏராளமாக கார்பன் டை ஆக்சைடு இருப்பதான மாய தோற்றம் கொசுவின் மூளையில் ஏற்பட்டு அதன் மூலமாக கொசுவை குழம்பச் செய்யும் ரசாயன பொருட்கள்.
மலேரியா பரப்பும் அனாபிலஸ் கேம்பியே, பைலேரியா, வைரஸ் காய்ச்சல் பரப்பும் குலக்ஸ் கிங்க்பேசியேடஸ், டெங்கு பரப்பும் ஏஜிஸ் ஏஜிப்டி ஆகிய 3 வகை கொசுக்களிடம் இந்த 3 விதமான ரசாயனங்களை பயன்படுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ரசாயனங்கள் பயன்படுத்த இடங்களில் கார்பன் டை ஆக்சைடு வாயுவை கண்டுபிடிக்க முடியாததால் மனிதர்களை கொசுக்கள் கண்டுபிடிக்க முடியவில்லை. இவை அதிக நெடி கொண்ட ரசாயனங்கள் என்பதால் தற்போதைய சூழலில் மனிதர்களையும் பாதிக்கும் என்று கருதப்படுகிறது. இதன் வீரியத்தை குறைப்பது தொடர்பாக ஆய்வு நடந்து வருகிறது.

No comments:

Post a Comment