Search This Blog

Monday, June 27, 2011

விண்கல் ஒன்று பூமியை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது



பூமியின் தென் முனையை நோக்கி மிக நெருங்கி வந்துக்கொண்டிருக்கும் விண்கல் ஒன்றை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
ஆபத்தான விண்கற்கள் ஏதேனும் பூமியை நெருங்குகிறதா என்பதை கண்காணிக்கும் மெக்சிகோவைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று இந்த விண்கல்ளை அவதானித்துள்ளது.
மெக்சிகோவைச் சேர்ந்த இந்த நிறுவம் கடந்த புதன் கிழமை விசேட தொலை நோக்கியின் துணையுடன் விண்கற்களை அவதானித்துள்ளது.
2011 எம் டி என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல் நாளை பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 11 ஆயிரம் கிலோமீற்றர் தூரத்திற்கு நெருங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேளையில் விண்கல் பிரகாசமாக தெரியும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
மெக்சிகோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் இந்த அவதானிப்பை இங்கிலாந்தின் விண்வெளி ஆய்வு மையமும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment