Search This Blog

Thursday, June 9, 2011

கண்ணதாசனின் செப்பு மொழிகள்

1. வசந்த காலத்தில் உன்னைச் சிறையில் வைப்பான். கோடைக் காலத்தில் பாலைவனத்தில் கொண்டு போய் விடுவான். அவனை நீ கோபித்துப் பயனில்லை. கூடவே வைத்துக்கொள். நீ படும் துயரத்தை அவனும் படட்டும்.

2. கொய்யாப் பழத்தைஅறுக்கும் முன்பே, அதற்குள் விதை இருப்பது உனக்கு தெரிய வேண்டும். ஒருவனோடு நன்கு பழகுவதற்கு முன்பே, அவனைப் பற்றி நீ புரிந்து கொண்டு விட வேண்டும்.

3. சிங்கத்தின் நகத்தையும் பல்லையும் பிடுங்கி விட்டுப் பெதடின் ஊசியையும் போட்டுவிட்டு அதன்மீது உட்கார்ந்து துப்பாக்கியோடு புகைப்படம் எடுத்துக் கொள்வதற்குப் பெயர் தான் அரசியல்.

4. ஆணவமும் அழிவும்  இரட்டைக் குழந்தைகள். இரண்டாவது  குழந்தை மெதுவாக வளரும். அவ்வளவுதான் .

5. தம்புரா மீட்டுகிறவனுக்கும், ஜால்ரா போடுகிறவனுக்கும் ஸ்வர ஞானம் எதற்கு? எதையும் ஆமோதிப்பவனுக்கோ, எதையும் எதிர்ப்பவனுக்கோ அறிவு எதற்கு?

6. காலை நேரம் எப்படி தோன்றுகிறதோ, மாலை நேரமும் அப்படியே தோன்றுகிறது. விடியும் பொழுதுக்கும், முடியும் பொழுதுக்கும் தோற்றத்தில் வேறுபாடு இல்லை. இன்ப துன்பங்களையும் அப்படியே நினைத்து விடு. எந்த கட்டத்திலும் நீ அழ வேண்டிய அவசியம் இருக்காது.

7. நிலத்தில் வளரும் களைகள் பெரிய மரங்கள் ஆவதில்லை. அற்ப ஆசைகள் பெரிய வெற்றியை தேடித் தருவதில்லை. 

8. வாசனைத் திரவியங்களை எவன் திகம் பூசிக் கொள்கிறானோ அவன் உடம்பு இயற்கையிலேயே நாற்றமடிக்கிறது என்று பொருள். எவன் அளவுக்கு மீறிச் சுய விளம்பரம் செய்துக் கொள்கிறானோ, அவன் இயற்கையிலேயே தகுதியற்றவன் என்று பொருள். 

9. வேண்டும் வரை தருமம் செய்து, முடிந்த வரை உதவி செய்து, பொறுமை இக்காது  வாழ்ந்தால், நீ சொர்கத்துக்கு போகலாம். ஆனால் சொர்க்கத்தின் வாசலிலும் சைத்தானே நின்று, உன்னை சோதனை இடுவான். அப்போது நீ பொறுமை இழந்தாலும், சொர்க்கம் உனக்குக் கிட்டாமற் போய்விடும்.

10. ஒரு ரம் பெய்த மழையே ஒரு தலைமுறைக்குப் போதுமானதாக இருந்து விடுமானால் ஆண்டவனின் யக்கதிற்க்கே அர்த்தமில்லாமல் போய் விடும். நீ ஒரு நாள் செய்த நன்மையே வாழ்நாள் முழுவதும் போதுமானதாகி விடுமானால், உன் ஒவ்வொரு நாளுமே வீணான நாளாகி விடும்.

கவியரசர் கண்ணதாசன் 
செப்பு மொழிகள் 250 என்ற நூலில் இருந்து

ப. ரவிச்சந்துரு

No comments:

Post a Comment