Search This Blog

Tuesday, June 21, 2011

மனசே கொஞ்சம் ரிலாக்ஸ் ..... ப்ளீஸ் ! ( அதிரடி தமிழ் ஜோக்ஸ் )


மனசே கொஞ்சம் ரிலாக்ஸ் ..... ப்ளீஸ் ! ( அதிரடி தமிழ் ஜோக்ஸ் )

படிக்கிற வாசகர்கள் யாராயிருந்தாலும் சரி, படிச்சு முடிச்ச பிறகும் சிரிக்கமாட்டோம்னு சீரியஸா படிங்க... சிரிப்பு வராம இருக்குதானு பார்ப்போம்..!!

 =======================================================
என் பள்ளி நாட்களில் மறக்க முடியாத நாட்கள் இன்ஸ்பெக்டர் வரும் நாட்கள்.
என் வகுப்பில் பென்சில்,சிலேட்டுக் குச்சி எல்லாம் திருடுகிற பையன் ஒருத்தன் இருந்தான். ‘அடுத்த வாரம் இன்ஸ்பெக்டர் வராரு’ என்று டீச்சர் சொன்னதும் வெல வெலத்துப் போய் விட்டான்.
“ஐயய்யோ இனிமே பென்சில் திருட மாட்டேன் டீச்சர்” என்று காலில் விழுந்து கதற ஆரம்பித்தான்.
போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும், பள்ளிக்கூட இன்ஸ்பெக்டருக்கும் இருக்கும் வித்யாசத்தைப் புரிய வைப்பதற்குள் டீச்சர் பாடு நாய் படாத பாடாகப்  போயிற்று.
இன்ஸ்பெக்டர் வருகிறார் என்கிற சேதி  மாணவர்களுக்கு தீபாவளியாகவும், ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியருக்கு காலரா பரவுவது போலவும் தோற்றமளிக்கும்.
ஆண் ஆசிரியர்கள் சிகரெட் பெட்டியில் கூண்டு, ஜிகினாத்  தாளில் கொடி, க்ரூப் லீடர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலகைகள் என்று ஒரு ரூட்டில் போவார்கள். பெண் ஆசிரியைகள் பழைய துணியில் பத்திக், பருப்பில் தேசியக்கொடி, எலந்தக் கொட்டையில் எல்லோரா சிற்பங்கள் என்று தங்கள் இன்னோவேஷன்களை அரங்கேற்றுவார்கள்.
தலைமை ஆசிரியர்கள் தேர்ந்த கிரிமினல்கள்.
நன்றாகப் படிக்கிற மாணவர்களை சீட் மாற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக உட்கார வைப்பார்கள். இன்ஸ்பெக்டர் கேள்வி கேட்கிற போது ராண்டம் ஆக கேட்பது போல் ‘முருகா நீ சொல்லு’, ‘மோகன் நீ சொல்லு’ என்று இடமும் வலமுமாக கையை நீட்டிக் கேட்பார்கள்.
இன்ஸ்பெக்டர்.... ரவியையோ, முருகையனையோ கேட்டால் கதை கந்தல்.
அன்றொரு நாள் செப்டம்பர் மாதத்தில் நடந்த நிகழ்ச்சி எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.
“சுவாசித்தல் என்றால் என்ன?” என்று இன்ஸ்பெக்டர் கேள்வி கேட்டார்.
எங்க பரமன் வாத்தியார்  “கோயிந்தா , நீ சொல்லு” என்று கேட்பதற்குள் முன் வரிசையிலிருந்த ரவியைக் காட்டி “நீ சொல்லுப்பா” என்றார் இன்ஸ்பெக்டர்.
இதை முற்றிலும் எதிர் பார்க்காத அவனுக்கு சுவாசமே நின்று விட்டது.
“நாம் கா…கா…கா…” என்று எழுந்து திக்க ஆரம்பித்தான்.
“ம்ம்ம்ம் சொல்லு, நாம் காற்றை என்ன செய்கிறோம்?” என்று வாத்தியார் க்ளூ கொடுத்தார்.
அவன் சற்று யோசித்து “வெளி விடுகிறோம்” என்றான்.
“வெளி விடுவதற்கு முன் என்ன செய்கிறோம்?”
“……………………………….”
“எதை உள்ளே இழுக்கிறோம்?”
ரவிக்கு மண்டையில் ஏதேதோ ஓடி, தாவரங்கள் சுவாசிப்பதும், மனிதர்கள் சுவாசிப்பதும் குளறுபடியாகி,
“வேலம்பாசி” என்றான்.
இன்ஸ்பெக்டர் திகைத்து, “வேலம்பாசியை ஏன் உள்ளே இழுக்கணும்…அதிலே என்ன இருக்கு” என்றார்.
“கார்பன் டை ஆக்சைடு”
“அது என்ன ஆகும்?”
“அதைத்தான் உள்ளே இழுக்கும்”
“கார்பன் டை ஆக்சைடை உள்ளே இழுத்தா என்ன ஆகும் தெரியுமா?”
“தெளிந்த சுண்ணாம்பு நீர் பால் போல மாறும்”
“சுண்ணாம்பு நீரா…”
“தாற்காலிக கடினத் தன்மையை சுண்ணாம்பு நீர் சேர்த்துக் கொதிக்க வெச்சா நீங்கிடும்”
“எது?”
“கார்பன் டை ஆக்சைடு”
“உனக்கு ஆக்சிஜன்னு ஒண்ணு இருக்கிறது தெரியுமா தெரியாதா?”
“தெரியும்”
“அது எங்கிருக்கு?”
“கார்பன் டை ஆக்சைடிலே”
இன்ஸ்பெக்டருக்கு தலை சுற்றியது.
“எப்படிப்பா?”
“சி ஒ டூ ன்னா கார்பன் டை ஆக்சைடு. ஒ டூ ன்னா ஆக்சிஜன்தானே?”
இன்ஸ்பெக்டர் சரணடைந்தார்.
“மிஸ்டர் பரமகுரு  , சிலபஸ்லே இருக்கிறது மட்டும் சொல்லிக் குடுங்க. ரொம்ப அட்வான்சா போறிங்கன்னு நினைக்கிறேன்”
===================================================================


அவனுக்கு வேட்டையாடுவதில் விருப்பம் அதிகம்.
மனைவியையும், மாமியாரையும் கூட்டிக் கொண்டு வேட்டைக்குப் போனான். ரொம்ப இருட்டி விட்டதால் மூவரும் தூங்குவதற்காகப் படுத்தார்கள். நடு ராத்திரியில் தூக்கம் விழித்த மனைவி,
“என்னங்க, அம்மாவை காணோம்” என்றாள் பதற்றமாக.
கணவன் எழுந்தான். ஒரு பெக் விஸ்கியை போட்டுக் கொண்டு துப்பாக்கியோடு தேட ஆரம்பித்தான்.
ஒரு புதருக்கு அருகே, சிங்கத்துக்கு எதிரே மாமியார் இருந்ததைப் பார்த்தார்கள்.
“ஐயய்யோ, இப்ப என்ன பண்றது?” என்று பதறிய மனைவியை தோளில் தட்டி கணவன் சொன்னான்,
“சிங்கம் காட்டுக்கு ராஜா, அதுக்கா தப்பிக்க வழி தெரியாது? ப்ரீயா விடு, அது எப்பிடியாவது தப்பிச்சிடும்” என்றான்.

================================================================

அவர் அன்று அலுவலகத்திலிருந்து சீக்கிரமே திரும்பி விட்டார்.
அழைப்பு மணியை அழுத்தினார். கதவு திறக்கப் பட்டது. உள்ளே பிரவேசித்ததும் கதவைத் திறந்த மனைவி மூர்ச்சையானாள்.
“ஐயய்யோ, என்ன ஆச்சு?” என்று அவர் பதறினார்.
குடுகுடுவென்று ஓடி வந்த அவர் மகன்,
“எனக்கு தெரிஞ்சி போச்சு” என்றான்.
பதட்டத்தில் இருந்த அவர்,
“என்னடா தெரிஞ்சி போச்சு?” என்று வெடித்தார்.
“எதிர் வீட்டு அங்கிள் பெட் ரூம் அலமாரிலே ஒளிஞ்சிருக்கார்”
விடுவிடுவென்று பெட் ரூம் போனார் அவர். அலமாரியைத் திறந்தார். ஒளிந்திருந்த எதிர் வீட்டு அங்கிள் அசடு வழிய வெளியே வந்தார்.
கோபத்தில் வீடே அதிரும்படி அவர் வெடித்தார்.
“ஏனய்யா, உனக்கு வெக்கமா இல்லே? என் பொண்டாட்டி மயக்கம் போட்டு விழுந்திருக்கா… இப்போ போய் என் பையன் கூட ஒளிஞ்சி பிடிச்சி விளையாடிகிட்டு இருக்கியே?”


Read more: http://www.livingextra.com/2011/06/blog-post_20.html#ixzz1PsIu2ujN

No comments:

Post a Comment